Yahya

சொகுசான, மலிவான, வேகமான மற்றும் பாதுகாப்பான பயணத்திற்கு இலங்கையில் அறிமுகமானது UDIO கார்பூலிங் முறை.


UDIO ("பகிர்தல்" என்னும் கருத்துடைய பொஸ்னிய சொல்) என்பது முற்றுமுழுதாக
இலங்கையிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட கார்பூலிங் இற்கான பயன்பாட்டு (App) மென்பொருளாகும்.

திரு. அஸாம் fபாஷிர் (செயற்பாடுகளுக்கான பணிப்பாளர், Sita Travels, சவூதி அராபியா) அவர்களின் ஆரம்ப முதலீட்டுடனும், உள்நாட்டு புதிய துவக்க நிறுவனமான Codezync இனால் நிர்மாணிக்கப்பட்ட UDIO ஆனது,
வாகன உரிமையாளர்களுக்கு மேலதிக வருமானத்தை ஈட்டுவதற்கு உதவுவதோடு, பயணிகள், தமது அடைவிடத்தை நோக்கி சொகுசான, மலிவான, வேகமான மற்றும் பாதுகாப்பான பயணம் ஒன்றை மேற்கொள்வதற்குரிய அனுபவத்தை தருகின்றது.

கார்பூலிங் (Carpooling) என்றால் என்ன?

கார்பூலிங் (கார் பகிர்வு, பயண பகிர்வு, ஏற்ற பகிர்வு) என்பது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் கார் ஒன்றில் பயணித்து , ஏனைய பயணிகள் தாங்களாகவே அடைவிடத்தை நோக்கி வாகனத்தை இயக்குவதனை தவிர்க்கும், கார் பயண பகிர்வு முறைமையாகும்.

ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் வாகனம் ஒன்றை உபயோகிப்பதன் மூலம், கார்பூலிங் ஆனது ஒவ்வொரு நபரினதும் பயண செலவீனங்களான எரிபொருள், வீதி கட்டணங்கள் மற்றும் வாகனத்தை சொந்தமாக செலுத்துவதில் ஏற்படும் மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து விடுக்கின்றது. பயணங்களை பகிர்வதன் மூலம் காற்று மாசுறுதல், கார்பன் துகள்களின் வெளியாக்கம், வீதிகளில் வாகன நெரிசல் மற்றும் சொந்த வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களின் தேவை என்பனவற்றை குறைப்பதன் மூலம் கார்பூலிங் ஆனது சுற்று சூழலுக்கு இணக்கமானதும், நிலைத்து நிற்கக்கூடியதுமான ஒரு பயண முறைமையாக திகழ்கின்றது.


 அதிகமான சூழல் மாசு அல்லது எரி பொருள் விலையேற்ற நிலைமைகளின் போது அதிகாரிகள் கார்பூலிங்கை பரிந்துரை செய்வர். கார் ஓட்டுநர் மட்டும் வாகனத்தில் பயணிக்கும் போது உபயோகப்படாத கார் ஒன்றினது ஆசனங்களின் முழுமையான பயன்பாட்டை மேற்கொள்வதற்கு, கார் பகிர்வு முறை சிறந்த தீர்வாக அமைகின்றது (விக்கிபீடியா).

UDIO எவ்வாறு வேலை செய்கின்றது?

நீங்கள் ஓர் வாகன உரிமையாளர் எனில், உங்களைப் பற்றியும், உங்கள் வாகனம் பற்றிய தகவல்களையும்  தருவிப்பதன் மூலம் UDIO வினோடு பதிவு செய்து கொள்ள முடியும். ஆரம்ப, முடிவு இடங்களை தெரிவிப்பதன் மூலம் ஒரு பயணத்தை இலகுவாக சேர்க்க (Add) முடியும். பயணப் பாதையின் ஏற்றும் /இறக்கும் இடங்கள் (நிறுத்தற்புள்ளிகள்), பயண ஆரம்ப திகதி, காலம், இவற்றோடு  கட்டாயமான அல்லது விருப்புக்குரிய தகவல்களான அதிக பட்ச நிறை, மாற்றுப் பயண பாதை என்பனவற்றை இலகுவாக செலுத்திக் கொள்ள முடியும். பெண் பயணிகள் மட்டும் பயண பகிர்வை மேற்கொள்ளும் விதத்தில் "பெண்கள் மாத்திரம்" என்கிற தேர்வொன்றையும் காண முடியும். மேற்படி தகவல்கள் உட்செலுத்தப்பட்டப் பிறகு வாகனத்துக்கான கட்டணத்தையும், மொத்தப் பயணப்பாதையையும், தனிப்பட்ட நிறுத்தற்புள்ளிகளின் மதிப்பீடாக UDIO முன்கணிப்பு செய்யும். கட்டணத் தொகை, வாகன ஓட்டுனரால் மாற்றிக்கொள்ளப்பட முடியும். இத்தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் குறித்த பயணம் பட்டியலிடப்படும்.


நீங்கள் ஓர் பயணி எனில், வெறுமனே ஒரு பயணத்தை தேர்வு செய்து, சேர்வதற்கான கோரிக்கையை வாகன ஓட்டுனருக்கு அனுப்ப வேண்டும். குறித்த காலப் பிரிவில் வாகன ஓட்டுநர் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், கட்டணம் செலுத்தப்படுவதற்கான அறிவித்தல் (Notification) கிடைக்கப்பெறும். கட்டண செலுத்துகை முழுமைப்பெற்ற பின்னர் பயணி, மற்றும் வாகன ஓட்டுநர் சம்பந்தமான தகவல்கள் பரிமாறப்படும்.


பயணிகளும், ஓட்டுநர்களும் ஒவ்வொருவரைப் பற்றியும் மதிப்பீடுகளையும், பின்னூட்டல்களையும் வழங்குவதற்கான வசதிகளையும் , அவற்றை ஏனையவர்கள் பகிரங்கமாக பார்ப்பதற்குமான ஏற்பாடுகளையும் UDIO கொண்டுள்ளது.


பயணம் ஒன்றை ஏற்றுக்கொள்ளும் முன்போ, பயணம் ஒன்றுக்கு சேர்வதற்கு முன்போ உங்களது ஓட்டுநர், பயணி, சக பயணிகள் தொடர்பான தகவல்களை பார்த்துக் கொள்ள முடியும். தகவல்களை சரி பார்ப்பதற்காக தேசிய அடையாள அட்டை/ கடவுச் சீட்டு, வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரம், Facebook கணக்கு, சுய விவர படம், முன்னைய ஓட்டுனர்கள், பயணிகளது மதிப்பீடுகள், பின்னூட்டல்கள் என்பனவற்றையும் UDIO வழங்குகின்றது.


யசிந்து தம்பதெனிய (Codezync, துணை நிறுவனர்/பணிப்பாளர்) கூறுகையில்: "கார்பூலிங் தொடர்பில் உரையாடும் போது அதிகமானவர்கள் எம்மிடம் தொடுக்கும் வினா தான் 'இது எவ்வளவு பாதுகாப்பானது?' என்பதே. ஆம் அபாயங்கள் இருக்கலாம். UDIO ஆனது அதன் பாவனையாளர்கள் தொடர்பான அடையாள தகவல்கள், வாகன ஓட்டுநர் பத்திரம், வாகனத் தகவல்கள் மற்றும் சமூக விவரங்கள் போன்ற தகவல்களை சேகரிக்கின்றது. மேலும் இந்த முறைமையானது, சக பயணியினதோ, வாகன ஓட்டுனரினதோ தரத்தினை அளப்பதற்காக சக மதிப்பாய்வுகளிலும், மதிப்பீடுகளிலும் தங்கி இருக்கின்றது. மேலும் ஏற்றும், இறக்கும் இடங்களை கண்காணிப்பு செய்யவும் முடியும். மேலும் UDIO 'பெண்கள் மாத்திரம்' என்கிற தெரிவை வழங்குவதன் மூலம் பெண் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றது."


"UDIO விற்கு பின்னால் உள்ள குழுவானது எதிர்காலங்களில், பயனாளர்களின் கோரிக்கைக்கு  ஏற்ப முழுப் பயண கண்காணிப்பு  வசதிகள் போன்ற மேலதிக பாதுகாப்பு அம்சங்களை தயாரிக்க உத்தேசித்துள்ளது." என்று Codezync இன் துணை நிறுவனர்களில் ஒருவரும், பிரதான நிறைவேற்று அதிகாரியுமான அனீப் பாஷிர் கூறுகின்றார்.


Codezync இனுடைய மேலதிக துணை நிறுவனரும், பணிப்பாளருமான அஜித் புஷ்பகுமார விவரிக்கையில்: "UDIO ஆனது கார்பன் தடயங்களை குறைப்பதையும், உயர் வாகன நெரிசல் நிலைகளுக்கான தீர்வையும் குறிக்கோளாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது".


கட்டணம்?

பயணம் ஒன்று நிறைவுற்ற நிலையில் உங்களது மீதிப்பணம் App னுடைய நிதிப்பகுதியில் புதுப்பிக்கப்படும்; வங்கி விவரங்கள் வழங்கப்பட்டிருப்பின், 3 வேலை நாட்களுக்குள், கட்டணங்கள் தங்களது வங்கிக்கணக்கிற்கு பரிமாற்றப்படும்.

UDIO ஒவ்வொரு முழுமைப்பெற்ற பயணத்தொகையில்  10% பங்கை வாகன ஓட்டுனரிடம் இருந்து மாத்திரம் அறவிடும்.

Uber, PickMe, Ride போன்ற டாக்சி App களில் இருந்து UDIO எவ்வாறு வேறுபடுகின்றது?

சுருக்கமாக சொல்வதென்றால், உங்களது காலியான ஆசனங்கள் உங்களுக்கு சம்பாத்தியத்தை ஈட்டித்தரும்!

UDIO கார்பூலிங் அனைவருக்குமானது. கேள்விக்கு ஏற்ற விதத்திலும், திறமையான ஓட்டுனர்களை கொண்டும் ஒட்டப்படும் டாக்ஸி சேவைகள் போலல்லாது, தமது பயணத்தை தகுந்த பயணிகளுடன், முன்குறிக்கப்பட்ட அடைவிடத்தை நோக்கி பயணிக்க விரும்பும் எவரும் UDIO வை பயன்படுத்த முடியும். நீங்கள் "UDIO" விற்காக வேலை செய்ய வேண்டியதில்லை;
மாற்றமாக UDIO வை பயன்படுத்தி குறித்த இலக்கை நோக்கிய பயணங்களை தீர்மானிக்க முடிவதோடு, இலங்கையின் எந்த பகுதியிலிருந்தும், எவரும், பயணத்தில் இணைவதற்கான கோரிக்கைகளை முன்வைக்க முடியும்.

ஒட்டுமொத்தத்தில் UDIO, வாகன நெரிசல் குறைப்பு, எரி பொருள் சேமிப்பு, நேர சேமிப்பு மற்றும் சுற்று சூழலை பாதுகாப்பதில் காத்திரமான பங்களிப்பை செலுத்துதல் என்பவற்றில் கவனத்தை செலுத்துகின்றது.

ஏன் கார்பூலிங்  இலங்கை போன்ற ஒரு நாட்டிற்கு முக்கியத்துவம் பெறுகின்றது?

UDIO மூலமாகவோ இல்லையோ, கார்பூலிங் இலங்கைக்கு ஏற்றதொரு தீர்வாகும். கொழும்பு நகரில் உச்ச நேரங்களில் சராசரி வாகன வேகமானது மணித்தியாலத்திற்கு  6 தொடக்கம் 12 கி.மீ ஆக காணப்படுகின்றது (மொறட்டுவை பல்கலைக்கழக ஆய்வொன்றின் படி). வரிகளை தாண்டியும் வருடாந்தம் கொள்வனவு செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை உற்று நோக்குங்கள். வாகன இலக்க தகடுகளை அவதானித்தால் இவ்வுண்மையை உணர முடியும்.


உதாரணத்திற்கு பம்பலபிட்டியவிலிருந்து தெஹிவளை நோக்கி பயணிப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் எடுக்கின்றது; அதிலும் 40 நிமிடங்கள் காலி வீதியில் ஏற்படுத்தப்படும் வாகன நெரிசலே காரணமாக அமைகின்றது. இதற்கு காரணமாக முச்சக்கர வண்டிகளையும், பேருந்துகளையும் சாடினாலும், உண்மையிலேயே அநேக வாகனங்கள் ஒற்றை பயணியுடன் காணப்படுவதனை உற்று நோக்க முடியும். நால்வரை ஒரு வாகனத்தில் சேர்ப்பிப்பதன் மூலம் தவிர்க்கக்கூடிய வாகனங்களின் எண்ணிக்கையை எண்ணிப்பாருங்கள்.


மேலும் பொதுப் போக்குவரத்தில் முகம் கொடுக்கும் சொகுசின்மை, பாதுகாப்பின்மை, பாராமுகமான சேவை என்பவற்றுக்குத் தீர்வாகவும் கார்பூலிங் அமைகின்றது;ஈற்றில் ஒரு வாகனத்தினுடைய எரி பொருள், பராமரிப்பு செலவீனங்களை மீட்டிக்கொள்வதற்கும் சிறந்த முறையாக காணப்படுகின்றது.

எதிர்காலம் 

பகிரப்பட்ட பொருளாதாரத்தையே UDIO முன்வைக்கின்றது. போக்குவரத்து துறையில் பெரும் நிறுவனங்களுக்கும், பாடசாலை போக்குவரத்து மற்றும் உல்லாச பயணங்களுக்கும் வசதிகளை உருவாக்குவதற்கு அது முனைகின்றது. மேலும் UDIO ஆனது, இலாவகமான பஸ் முன்பதிவு சேவை ஒன்றையும்  App இனுள் ஒருங்கிணைப்பதற்கான திட்டங்களையும் ஆராய்கின்றது.

IOS App Url   https://itunes.apple.com/us/app/udio/id1296199875

Android URL : https://play.google.com/stor e/apps/

சொகுசான, மலிவான, வேகமான மற்றும் பாதுகாப்பான பயணத்திற்கு இலங்கையில் அறிமுகமானது UDIO கார்பூலிங் முறை. சொகுசான, மலிவான, வேகமான மற்றும் பாதுகாப்பான பயணத்திற்கு இலங்கையில் அறிமுகமானது UDIO கார்பூலிங் முறை. Reviewed by Madawala News on 12/28/2017 08:14:00 AM Rating: 5