Yahya

பதினேழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவர் விளக்கமறியலில்.. #கிண்ணியா #அண்ணல் நகர்.


திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினேழு வயதுடைய சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர்கள் இருவரை இம்மாதம் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா நேற்று (12) உத்தரவிட்டார்.

அண்ணல் நகர், கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 29 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் இருவரும் திருமணம் முடித்துள்ளதோடு ஒரு சந்தேகநபருக்கு இரண்டு பிள்ளைகளும், மற்றொருவருக்கு ஒரு பிள்ளையும் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்களின் மனைவிமாரின் தங்கை ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபர்களை பொலிஸார் திங்கட்கிழமை (11) கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று செவ்வாய்கிழமை (12) திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பதினேழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவர் விளக்கமறியலில்.. #கிண்ணியா #அண்ணல் நகர். பதினேழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவர் விளக்கமறியலில்.. #கிண்ணியா #அண்ணல் நகர். Reviewed by Madawala News on 12/13/2017 12:33:00 PM Rating: 5