Yahya

உயர்தர வர்த்தக பிரிவு மாணவர்களுக்கான மொரட்டுவை பல்கலைகழக கற்கைநெறிகள்.


வணிக கற்கையானது பலதரப்பட்ட தொழில் வாய்ப்புக்களை வழங்கினாலும் இன்றைய உயர்தரத்தில் அதிக வெட்டுப்புள்ளிகளை பெற்ற மாணவர்கள் மத்தியில் சிறந்த கற்கை நெறிகளை தெரிவு செய்வதில் பல வகைப்பட்ட குழப்பங்களும் சிக்கல்களும் காணப்படுகிறது. அநேகமனோர் முகாமைத்துவ பாடநெறியினை தெரிவு செய்கின்ற போதிலும், சிறந்த தொழில் வாய்ப்பினைப்பெற சர்வதேச தரத்திலான கற்கை நெறிகளான CIMA, CMA மற்றும் ACCA போன்றவற்றையும் பல்கலை முகாமைத்துவ கற்கையோடு சேர்ந்து செய்ய வேண்டிய தேவை உள்ளது.

ஆனால் இவற்றிலிருந்து வேறுபட்டதாக, கட்டடக்கலைத்துறை, தகவல் தொழிநுட்பம் மற்றும் வியாபார விஞ்ஞானம் போன்ற துறைகளில் தொழில் வாய்ப்பினை பெறுவதற்காக சர்வதேச தரத்திலான கற்கை நெறிகளை இலங்கையின் முதற்தர தொழில்நுட்ப மொரட்டுவை பல்கலைகழகம் வர்த்தகப்பிரிவு மாணவர்களுக்காக ஒழுங்குபடுத்தியுள்ளது. 100% தொழில் வாய்ப்பினை பெற்று தரக்கூடிய கற்கை நெறிகளாக

1. வசதிகள் முகாமைத்துவம்
2. வியாபார விஞ்ஞானம்
3. நாடும் பட்டினமும் திட்டமிடல்
4. முகாமைத்துவமும் தகவல் தொழில்நுட்பமும் என்பன உள்ளடங்குகின்றன.

❇ வசதிகள் முகாமைத்துவம் - BSc (Hons) in Facilities Management

1980 இல் அமெரிக்காவில் தோற்றம் பெற்ற இத்தொழில்முறைமையானது கட்டடத்துறையில் வளர்ந்து வரும் ஒரு முக்கியமான கற்கை நெறியாகும். 2006 இல் மொரட்டுவை பல்கலையினால் அறிமுகம் செய்யப்பட்ட இப்பாடநெறி 4 வருடங்களை கொண்டது. இப்பாடநெறி கட்டட வசதிகள் துறையில் தொழிவாய்ப்பை பெற்று தருவதோடு RICS இன் சர்வதேச அங்கீகாரமும் IFMSL இன் தேசிய அங்கீகாரமும் உடைய பட்டமாகும். Services technology, Property Management, Project Studies, Construction technology மற்றும் management/IT studies என 5 பிரதான வகைப்பாடுகளை உள்ளடக்கியது. எதிர்காலத்தில் வசதிகள் முகாமையாளர், வசதிகள் பொறியியலாளர் மற்றும் வசதிகள் நிர்வாகி போன்ற தொழில்முறைகளை பெற்றுத்தரக்கூடியதாக இக்கற்கைநெறி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

❇ வியாபார விஞ்ஞானம் - BBSc (Hons) degree

நவீன வியாபார உலகிற்கேற்ப புதிதாக ஒழுங்கு செய்யப்பட்ட கற்கை நெறியாகும். வியாபார பகுப்பாய்வு திறன்களை மையமாக கொண்டு இக்கற்கை நெறி வணிக பீடத்தினால் 2017 இல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த வணிக தரவு பகுப்பாய்வு மூலம் குறித்த வணிக நிறுவனத்தின் செயற்திறனை விருத்தி செய்யும் நோக்கிலும் நவீன வணிக தேவையினை பூர்த்தி செய்வதாகவும் இப்புதிய கற்கைநெறி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. மூன்று வகையான விசேட (specialization) பட்டங்களை உடையது.
1. வியாபார பகுப்பாய்வு - BBSc (hons) in Business Analytics
2. வியாபார செயற்பாட்டு முகாமைத்துவம் - BBSc (hons) in Business Process Management
3. நிதிப்பகுப்பாய்வு - BBSc (hons) in Finance Analytics

❇ பட்டினமும் நாடும் திட்டமிடல் - BSc (hons) in Town and Country Planning

ITPSL இன் தேசிய அங்கீகாரமுடைய இக்கற்கை நெறி 4 வருடங்களை கொண்டது. நாடு, நகரங்கள், மற்றும் கிராமங்கள் சம்பந்தமான திட்டமிடல் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தியோடு தொடர்புடைய இக்கற்கை நெறியாகும். இத்தொழில்முறை வீடமைப்பு, கைத்தொழில் அபிவிருத்தி, விவசாயம், மறு உற்பத்தி, போக்குவரத்து மற்றும் சுற்று சூழல் சம்பந்தமாக எழுகின்ற தேவை முரண்பாடுகளை சிறந்த அபிவிருத்தி திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஒழுங்கபடுத்துவதாக அமைகின்றது. திறன் அபிவிருத்தி பயிற்சிநெறிகள், துறை சார்ந்த கள ஆய்வு மற்றும் நான்கு விதமான திட்டமிடல் பயிற்சிகளை உள்ளடக்கிய கற்கை நெறியாகும். இலங்கை திட்டமிடல் அமைச்சு மற்றும் தனியார் துறைகளில் பலவகைப்பட்ட தொழில்வாய்ப்பை உடைய ஒரு கற்கை நெறியாகும்.

❇ முகாமைத்துவமும் தகவல் தொழிநுட்பமும் - BSc (hons) Information Technology and Management

தகவல் முறைமையில் சிறந்த முகாமைத்துவத்தினை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தொழில்முறைக்காக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள கற்கை நெறியாகும். 4 வருட கௌரவ பட்டத்தினை உடைய இக்கற்கை நெறி தகவல் தொழிநுட்ப பீடத்தினால் அறிமுகம் செய்யப்பட்டது. வளர்ந்து வரும் தகவல் தொழிநுட்ப துறையில் சிறந்த வேலைவாய்ப்பினை பெற உதவும் கற்கை நெறியாகும்.

இக்கற்கை நெறிகளுக்கு மேலதிகமாக வடிவமைப்பு துறையிலும் கற்கை நெறிகளை இப்பல்கலை அறிமுகம் செய்துள்ளது. எதிர்காலத்தில் வடிவமைப்பாளர் அல்லது வடிவமைப்பு பொறியியலாளராக தொழில் முறைமைமைகளை மேட்கொள்ள இப்பாடநெறி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

மொஹமட் பாஹிர்
வசதிகள் முகாமைத்துவம்
மொரட்டுவை பல்கலைக்கழகம்
உயர்தர வர்த்தக பிரிவு மாணவர்களுக்கான மொரட்டுவை பல்கலைகழக கற்கைநெறிகள். உயர்தர வர்த்தக பிரிவு மாணவர்களுக்கான மொரட்டுவை பல்கலைகழக கற்கைநெறிகள். Reviewed by Madawala News on 12/30/2017 04:13:00 PM Rating: 5