Yahya

தேர்­தலில் எமக்கு எவ்­வித சவாலும் இல்லை 90 சத­வீத வெற்றி உறு­தி­யா­கி­விட்­டது.


சுதந்­திரக் கட்­சிக்குள் பிள­வுகள் ஏற்­பட்­டுள்­ள­மையால் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலில் எவ்­வி­த­மான சவால்­களும் காணப்­ப­ட­வில்லை. இப்­போதே 90சத­வீத வெற்றி உறு­தி­யா­கி­விட்­டது என்று குறிப்­பிட்ட இரா­ஜாங்க அமைச்சர் சுஜீ­வ­சேர சிங்க தமது கட்­சிக்கு சுபீட்­ச­மான எதிர்­காலம் ஆரம்­ப­மா­கி­விட்­ட­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்­கி­ழமை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்­டவர் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் வெற்றி வாய்ப்­புக்கள் குறித்து கருத்­துக்­களை பகிர்ந்து கொண்­ட­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான அதி­கா ­ரத்­தை ஐக்­கிய தேசியக் கட்­சி­யா­னது எதிர்­பார்த்து நிற்­கின்­றது. இந்த நிலையில் மக் கள் எமக்­கான ஆணையை வழங்­கு­வார்கள் என்ற அதீத நம்­பிக்கை எமக்­குள்­ளது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யா­னது பிள­வ­டைந்­துள்­ளது. அவர்கள் ஒன்­று­பட்­டி­ருந்தால் எமக்கு ஒரு சவா­லாக அது அமை­வ­தற்­கான வாய்ப்­புக்கள் இருந்திருக்கும். ஆனால் அவ்­வா­றான கட்­சிகள் பிள­வ­டைந்து துண்­டு­துண்­டாக கள­மி­றங்­கு­வ­தா­னது எமக்கு எள்­ள­ளவும் சவாலை ஏற்­ப­டுத்­த ­போ­வ­தில்லை.

கடந்த காலத்தில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் உள்ள உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை 4400ஆக இருந்­தது. அதில் எமது உறுப்­பி­னர்கள் 1100ஆக இருந்­தது.தற்­போது உள்­ளூராட்­சி­மன்­றங்­க­ளுக்­கான எண்­ணிக்கை 341ஆக உள்­ளது. மொத்த உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை 8356ஆக உள்­ளது. அதில் ஆறா­யி­ரத்­திற்கும் அதி­க­மான உறுப்­பி­னர்­களை நாம் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான வாய்ப்­புள்­ளது.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலில் எமது வெற்­றி­யா­னது ஏறக்­கு­றைய 90சத­வீ­த­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. வேட்பு மனுத் தாக்­க­லின்­போதே சில கட்­சி­களின் முடி­வுகள் எவ்­வாறு அமையும் என்­பது வெளிப்­பட்டு விட்­டது. அனைத்து உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான வேட்­பு­ம­னுக்­க­ளையும் எமது கட்­சி­யா­னது நேர்த்­தி­யாக சமர்­ப்பித்­துள்­ளது. இதன் மூலம் இந்த நாட்டில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சுபீட்­ச­மான காலம் ஆரம்­ப­மா­வ­தற்­கான சமிக்ஞை வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்றார்.

இதே­வேளை எதிர்­வரும் காலத்தில் பெரு­ம­ள­வான பிரதி அமைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள் கூட்டு எதிர்க்­கட்­சி­யுடன் இணைந்து கொள்­வார்கள் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரோஹித அபே­கு­ண­வர்­தன தெரி­வித்­துள்­ளமை தொடர்­பாக கேள்­வி­யெ­ழுப்­பி­ய­ போது பதி­ல­ளித்த இரா­ஜாங்க அமைச்சர் சுஜீவ, இப்­படி கடந்த காலத்தில் பல கதை­களை கூறி­னார்கள்.


ஆனால் அவ்­வாறு பெரும் எண்­ணிக்­கை­யா­ன­வர்கள் இதுவரையில் கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து கொண்டா ர்களா? அவ்வாறு எதுவுமே நடைபெறுவ தில்லை.

 தற்போது கூட அரசாங்கத்திலிருந்து சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ கூட அரசாங்கத் துக்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்துக் களை வெளியிட்டுள்ளார் என்பதை கவனத் தில் கொள்ளுங்கள் என்றார்.
தேர்­தலில் எமக்கு எவ்­வித சவாலும் இல்லை 90 சத­வீத வெற்றி உறு­தி­யா­கி­விட்­டது. தேர்­தலில் எமக்கு  எவ்­வித சவாலும் இல்லை 90 சத­வீத வெற்றி உறு­தி­யா­கி­விட்­டது. Reviewed by Madawala News on 12/23/2017 01:33:00 PM Rating: 5