Yahya

சுதந்திரக்கட்சி இரண்டு பட்­டதால் ஐ.தே.க.வுக்கு கொண்­டாட்­டமா?


உள்­ளூ­ராட்­சி­ மன்ற தேர்தல் குறித்த நட­வ­டிக்­கைகள் சூடு பிடித்­தி­ருக்­கின்­றன. ஒவ்­வொரு கட்­சியும் இத்­தேர்­தலில் வெற்­றி­பெறும் நோக்கில் பல திட்­டங்­களை வகுத்து செயற்­பட்டு வரு­கின்­ற­மையை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. இதற்­கிடையில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி மற்றும் கூட்டு எதி­ர­ணியின் இணைவு தொடர்பில் அதி­க­மா­கவே எதிர்­பார்க்­கப்­பட்­டது.

எனினும் இந்த எதிர்­பார்ப்பு இப்­போது சாத்­தி­யப்­ப­டாமல் போயுள்­ளது. இக்­கட்­சிகள் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு தயா­ராக இல்லை. இந்­நி­லையில் இக்­கட்­சி­க­ளி­டையே காணப்­படும் விரிசல் நிலை­யா­னது ஐக்­கிய தேசியக் கட்சி இத்­தேர்­தலில் ஆதிக்கம் செலுத்­து­வ­தற்கு உந்து சக்­தி­யாக அமையும் என்று பர­வ­லாக கருத்­துகள் எதி­ரொ­லிப்­ப­த­னையும் கேட்­கக்­கூ­டி­ய­தாக உள்ளது.

 இம்­முறை உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் இலங்­கையின் வர­லாற்றில் மிகவும் முக்­கி­யத்­துவம் மிக்­க­தாக விளங்­கு­கின்­றது. கலப்பு முறையில் இத்­தேர்தல் இடம் பெற உள்­ளமை ஒரு சிறப்­பம்­ச­மாக கரு­தப்­ப­டு­கின்­றது. இம்­முறை 276 பிர­தேச சபைகள், 24 மாந­கர சபைகள், 41 நகர சபை­க­ளுக்­கு­மாக 341 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு தேர்தல் இடம்­பெற உள்­ளது. மேலும் இம்­மன்­றங்­க­ளுக்கு எண்­ணா­யி­ரத்து முன்­னூற்று ஐம்­பத்தி ஆறு உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும். நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் பிர­தேச சபை­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. உண்­மையில் இரு மலை­யக மக்­க­ளுக்குக் கிடைத்த ஒரு மிகப்­பெ­ரிய வெற்றி என்று கூறினால் மிகை­யா­காது. உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான கால­எல்லை ஏற்­க­னவே முடி­வ­டைந்த நிலையில் இத்­தேர்­தலை உட­ன­டி­யாக நடத்­து­மாறு கட்­சிகள் அடிக்­கடி வலி­யு­றுத்தி வந்­த­மையும் தெரிந்த விட­ய­மாகும். தேர்­தலை நடத்­தா­மை­யா­னது ஜன­நா­ய­கத்­திற்கு விரோ­த­மான செய­லாகும் என்றும் கட்­சிகள் ஆழ­மா­கவே வலி­யு­றுத்தி இருந்­தன. இந்­நி­லையில் தேர்­தலை நடத்­து­வதில் இருந்த இழு­ப­றிகள் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்டு எதிர்­வரும் பெப்­ர­வரி மாதத்தில் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான முன்­னெ­டுப்­புகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

அர­சியல் கட்­சிகள் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலை சாத­க­மாக்கிக் கொள்ளும் பொருட்டு பல்­வேறு காய் நகர்த்­தல்­க­ளையும் மேற்­கொண்டு வரு­கின்­றன. வெற்­றியை இலக்­காகக் கொண்­ட­தாக இக்­கட்­சி­களின் நட­வ­டிக்­கைகள் அமைந்­தி­ருக்­கின்­றன. மலை­ய­கத்தின் பிர­தான கட்­சிகள் பெரும்­பான்மைக் கட்­சி­யுடன் இணைந்தும் தனித்தும் போட்­டி­யிட உள்­ளன. இதற்­கான ஆயத்­தங்­களை இக்­கட்­சிகள் மேற்­கொண்டு வரு­கின்­றன. இதற்­கி­டையில் தேர்தல் காலங்­களில் வழ­மை­யாக இடம்­பெறும் கட்சித் தாவல் நட­வ­டிக்­கை­களும் இப்­போது இடம்­பெற்று வரு­கின்­றன. இம்­முறை உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் கூட்டு எதி­ரணி என்­பன தொடர்பில் மக்­களின் எதிர்­பார்ப்பு திரும்பி இருந்­தது. இக்­கட்­சிகள் தனித்து போட்­டி­யி­டுமா? அல்­லது இணைந்து போட்­டி­யி­டுமா என்­கிற கேள்வி நாட்டு மக்­க­ளி­டையே வலுப்­பெற்றுக் காணப்­பட்­டது. இக்­கட்­சிகள் இரண்­டையும் இணைத்­துக்­கொண்டு தேர்­தலில் முகம் கொடுப்­ப­தற்கு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. எனினும் இப்­போது இம்­மு­யற்சி சாத்­தி­யப்­ப­டாமல் போய் இருக்­கின்­றது.

ஐக்­கிய தேசியக் கட்­சி­யு­ட­னான கூட்டு அர­சாங்­கத்தில் இருந்து சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் வெளி­யே­று­வார்­க­ளாயின் அவர்­க­ளுடன் விட்­டுக்­கொ­டுப்­பு­ட­னான பேச்­சுக்­களை நடத்­து­வ­தற்கு கூட்டு எதி­ரணி தயா­ராக இருப்­ப­தாக அவ்­வ­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்த்­தன தெரி­வித்­தி­ருந்தார். மேலும் அர­சாங்­கத்­துடன் இணை­யக்­கூ­டாது என்­பதே சிவில் அமைப்­பு­க­ளி­னதும், பொது­மக்­க­ளி­னதும் கோரிக்­கை­யாக உள்­ளது. சுதந்­தி­ரக்­கட்சி அமைச்­சர்கள் அரசில் இருந்து விலகி வரு­வார்­க­ளானால் நாமும் விட்டுக் கொடுப்­பு­க­ளுக்குத் தயா­ராக உள்ளோம். நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை சமஷ்டி வழங்கி நாட்டைப் பிரிக்கும் சூட்­சும திட்­டத்­திற்கும், அர­சியல் பழி­வாங்­கல்­க­ளுக்கும் எதி­ரான தேசிய எதிர்ப்பு என்ற வகை­யி­லேயே பொது­மக்கள் மனதில் கொண்டு செயற்­பட வேண்டும் என்­பதே கூட்டு எதிர்க்­கட்­சியின் கோரிக்­கை­யாகும் என்றும் பந்­துல குண­வர்த்­தன கேட்­டுக்­கொண்­டி­ருந்தார்.

இதே­வேளை புதிய அர­சி­ய­ல­மைப்­பினைத் தயா­ரிக்­கின்ற பணி­களை கைவி­டு­வ­தாக ஜனா­தி­பதி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்தால் மட்­டுமே சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்­து­கொள்­வ­தா­கவும் கூட்டு எதி­ரணி நிபந்­தனை விதித்­தி­ருந்­தது. இந்த நிபந்­த­னை­யினை ஏற்­றுக்­கொள்­ளா­த­தா­லேயே கூட்டு எதி­ரணி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யுடன் இணை­ய­மு­டி­யாமல் போன­தென்று இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரே­ராவும் வலி­யு­றுத்தி இருந்தார். அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான சந்­தர்ப்­பத்­தைக்­கை­விட்டு மீண்டும் இன­வா­தத்தைக் கொண்டு இந்த நாட்­டினை அழிப்­ப­தற்கு நாங்கள் தயா­ராக இல்லை. அத­னா­லேயே எங்­களால் கூட்டு எதி­ர­ணி­யுடன் உடன்­பட முடி­ய­வில்லை. அத்­துடன் கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்தர் பஷில் ராஜபக் ஷவுக்கு ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் ஒரு டீல் இருக்­கின்­றது. அதனால் பஷிலும் அதனை விரும்­ப­வில்லை என்றும் டிலான் பெரேரா மேலும் வலி­யு­றுத்தி இருந்தார். மக்கள் எங்­க­ளுடன் இருக்­கின்­றார்கள். எமது கொள்கை என்ன என்­ப­தையும் தெரிந்­தி­ருக்­கின்­றார்கள். இது எமது நம்­பிக்­கை­யாக உள்­ளது. இந்த நம்­பிக்­கையின் அடிப்­ப­டை­யி­லேயே நாங்கள் தேர்­தலில் களம் இறங்­கு­கின்றோம் என்றும் டிலான் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இதே­வேளை சுதந்­தி­ரக்­கட்­சி­யுடன் இணைய முடி­யாது என்ற நிலைப்­பாட்டை பஷில் ராஜபக் ஷ அடிக்­கடி அழுத்திக் கூறி­வந்த நிலையில், நல்­லாட்சி அர­சாங்­கத்­துக்கு எதிர்க்­கட்­சி­யா­கவும் மக்­களின் மாற்­றுக்­க­ருத்­துக்­க­ளுக்­கான குர­லா­கவும் இருக்­கின்ற ஒரே கட்சி கூட்டு எதி­ர­ணி­யா­கு­மென்றும் அவர் தெரி­வித்­தி­ருந்தார். இணைவு சாத்­தி­யப்­ப­டாது என்­ப­தனை வலி­யு­றுத்தும் நோக்கில் மேலும் பல நியா­யங்­க­ளையும் பஷில் ராஜபக் ஷ எடுத்துக் கூறி இருந்­த­மையும் இங்கு நோக்­கத்­தக்­க­தாக உள்­ளது. ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியும் கூட்டு எதி­ர­ணியும் இணைந்து செயற்­ப­டு­வ­தற்குக் குந்­த­க­மாக ஐக்­கிய தேசியக் கட்சி இருந்து வரு­வ­தா­கவும் பல்­வேறு தரப்­பி­னரும் கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்­தனர். இக்­கட்­சி­களின் இணைவு உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் தமக்கு பின்­ன­டை­வினை ஏற்­ப­டுத்தக் கூடும் என்று ஐக்­கிய தேசிய கட்சி அச்சம் கொண்­டி­ருப்­ப­தா­கவும் ஊ­கங்­கள் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தன. ஐ.தே.க.வின் சுய­நலப் போக்கு ஸ்ரீல.சு.க.வினதும், கூட்டு எதி­ர­ணி­யி­னதும் இணை­வுக்கு குந்­த­க­மாக இருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது. எனினும் ஐ.தே.க இக்­க­ருத்­து­களை மறு­த­லித்­தி­ருந்­த­தோடு தனது நிலைப்­பாட்­டி­னையும் தெளி­வா­கவே எடுத்­துக்­கூறி இருந்­தது.

கட்­சி­களை பிள­வு­ப­டுத்­து­வது ஐக்­கிய தேசியக் கட்­சியின் கொள்­கை­யல்ல. ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் கூட்டு எதி­ர­ணியும் இணைந்து கொள்­ளு­மானால் ஐ.தே.க. உண்­மையில் மகிழ்ச்­சி­ய­டையும். இக்­கட்­சி­களை பிரித்து வைக்க எமக்கு எந்­த­வி­த­மான தேவையும் கிடை­யாது. பிரித்து வைப்­பது என்­பது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் கொள்­கை­யாகும். இதற்கு கடந்­த­கால வர­லா­றுகள் சான்று பகரும். கடந்த காலத்தில் அவர்கள் அனைத்துக் கட்­சி­க­ளையும் பிரித்து கட்­சிக்குள் குழப்­ப­க­ர­மான சூழ்­நி­லை­யினை ஏற்­ப­டுத்தி இருந்­தனர். இந்­நி­லையில் நாங்கள் நாட்டில் மாற்றம் ஒன்றை ஏற்­ப­டுத்­தி­யது ஜன­நா­யக அர­சியல் போக்­கினைப் பாது­காத்­துக்­கொள்­வ­தற்கும் அதனை மேலும் விரி­வு­ப­டுத்திக் கொள்­வ­தற்கும் ஆகும். எந்தக் கட்­சி­க­ளா­வது பிள­வு­பட்டு இருக்­கு­மானால் அக்­கட்­சிகள் மீண்டும் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு நாங்கள் பிரார்த்­திப்போம். அத­னை ­வி­டுத்து பிரித்து துண்­டாட மாட்டோம். எங்கள் எதிர்­பார்ப்பு ஐக்­கிய தேசியக் கட்­சி­யினை உறு­திப்­ப­டுத்­து­வதும் அதனை மேலும் விருத்தி செய்­வ­து­மாகும் என்று இக்­கட்­சியின் முக்­கி­யஸ்தர் ஒருவர் தெரி­வித்­தி­ருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் கூட்டு எதி­ர­ணியும் இணைந்து தேர்­தலை எதிர்­கொள்­ளு­மி­டத்து ஐ.தே.க. பல்­வேறு சவால்­களைச் சந்­திக்க வேண்டி வரும் என்றும் சிலர் கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்­தனர். எனினும் ஐ.தே.க. இதனை மறுத்­தி­ருந்­தது. இவர்­களின் இணைவு ஐ.தே.க.வில் வாக்­குச்­ச­ரி­வினை ஏற்­ப­டுத்த உந்து சக்­தி­யாக அமை­யாது என்றும் ஐ.தே.க. வலி­யு­றுத்தி இருந்­த­மையும் தெரிந்த விட­ய­மாகும்.

எவ்­வா­றெ­னினும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி மற்றும் கூட்டு எதி­ரணி என்­பன இப்­போது வேறு­பட்டு நிற்­கின்­றன. இக்­கட்­சி­களின் இணைவு குறித்த எதிர்­பார்ப்பு இப்­போது மழுங்­க­டிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இது ஒரு புற­மி­ருக்க கூட்டு எதி­ர­ணிக்குள் தற்­போது குழப்­பச்­சூழ்­நிலை அதி­க­ரித்து வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பங்­கா­ளிக்­கட்­சிகள் புரிந்­து­ணர்­வுடன் செயற்­ப­டு­வ­தாக கூட்டு எதி­ரணி மார்­தட்டிக் கொண்­டாலும் இப்­போது எதி­ர­ணிக்குள் ஓட்டை விழுந்­தி­ருக்­கின்­றது. ஸ்ரீலங்கா பொது ஜன பெர­மு­ன­விற்குள் ஆச­னப்­பங்­கீடு தொடர்பில் முன்னாள் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ தன்­னிச்­சை­யாக செயற்­ப­டு­கிறார் என்று பங்­காளிக் கட்­சிகள் குற்றம் சாட்­டி­ய­மை­யாலும் மறு­பக்­கத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மைத்­திரி அணி­யி­ன­ருடன் இணை­யாது தனித்து போட்­டி­யிட வேண்டும் என்றும், கூட்­டி­ணைந்து போட்­டி­யிட்டு ஐக்­கிய தேசியக் கட்­சியை தோற்­க­டிக்க வேண்டும் என்­ற­வாறு இரு­வேறு கருத்­துகள் வலுப்­பெற்­ற­மை­யினால் ஏற்­க­னவே விரி­சல்கள் முளை­விட்­டி­ருந்­தன. கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற குழுக்­களின் தலைவர் தினேஷ் குண­வர்­தன ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கூட்­டத்தில் பங்­கெ­டுத்­தமை தொடர்பில் பஷில் மற்றும் நாமல் ராஜபக் ஷ ஆகியோர் கடு­மை­யான எதிர்ப்­பி­னையும் வெளியிட்டிருந்தனர்.

தேசிய சுதந்திர முன்னணியின் பல முக்கியஸ்தர்கள் இப்போது கட்சி மாறியுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சில முக்கியஸ்தர்கள் இணைந்து கொண்டுள்ளனர். இதனால் தேசிய சுதந்திர முன்னணியின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாகி இருக்கின்றது. இதனால் வாய்கிழியப் பேசியவர்கள் இப்போது வாயடைத்துப்போய் இருக்கின்றார்கள். மஹிந்தவின் தலைமையில் கூட்டு எதிரணி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிகொள்ள கடும் முயற்சியில் களம் இறங்கியுள்ளது. பங்காளிக் கட்சிகள் இந்த முயற்சிக்கு எந்தளவு தோள்கொடுக்கும் என்பது இப்போது கேள்விக்குறியாகி இருக்கின்றது.

இதற்கிடையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் கூட்டு எதிரணி என்பன இணைந்து தேர்தலில் போட்டியிடாமையானது ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாய்ப்பாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல போன்ற­வர்­களும் எடுத்துக்கூறி இருந்தனர். கூட்டு எதிரணியில் இருந்து மேலும் பலர் கட்சிதாவ உள்ளதாகவும் தெரிய வருகின்றது. எவ்வாறெனினும் கட்சிகள் இரண்டுபட்டமை ஐ.தே.க.வுக்கு கொண்டாட்டமாகவே உள்ளது என்கின்றனர் அரசியல் அவதானிகள்.
சுதந்திரக்கட்சி இரண்டு பட்­டதால் ஐ.தே.க.வுக்கு கொண்­டாட்­டமா? சுதந்திரக்கட்சி இரண்டு பட்­டதால் ஐ.தே.க.வுக்கு கொண்­டாட்­டமா? Reviewed by Madawala News on 12/13/2017 01:57:00 PM Rating: 5