Yahya

இலங்­கைக்கு ஜி.எஸ்.பி. வரிச்­ச­லுகையை நிறுத்தியதால் அமெ­ரிக்­கா­வுடன் சம­ர­சம் பேச அர­சாங்கம் நடவடிக்கை.


அமெ­ரிக்­காவின் ஜி.எஸ்.பி வரிச்­ச­லு­கையை பாது­காக்க அர­சாங்கம் அனைத்து மட்­டத்­தி­லான பேச்­சு­வார்த்­தை­க­ளையும் ஆரம்­பிக்­க­வுள்­ள­தாகத் தெரி­ய­வ­ரு­கி­றது. அதே போன்று

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பான விவா­தத்தின் போது ஏற்­படக் கூடிய தாக்­கத்தை குறைக்­கவும் அமெ­ரிக்­காவின் ஒத்­து­ழைப்­புகள் அவ­சி­ய­மா­கின்­றன.

இந்­நி­லையில் தேசிய அர­சாங்கம் இரா­ஜ­தந்­திர மட்­டத்­தி­லான நட­வ­டிக்­கைளை தீவி­ரப்­ப­டுத்தி கொழும்பில் உள்ள அமெ­ரிக்க தூத­ரகம் ஊடக சம­ரசப் பேச்­சுக்­க­ளுக்கு தயா­ராகி வரு­வ­தாக தெரி­ய­வ­ரு­கி­றது .

இலங்கை உள்­ளிட்ட 120 நாடு­க­ளுக்­கான ஜி.எஸ்.பி வரிச்­ச­லு­கையை அமெ­ரிக்கா நீடிக்­க­வில்லை. இந்­நி­லையில் குறித்த 120 நாடு­க­ளுக்கும் அமெ­ரிக்­கா­வுக்­கான ஏற்­று­ம­தி­களின் போது கிடைக்­கப்­பெற்று வந்த வரிச்­ச­லுகை இன்­றுடன் கிடைக்­காமல் போகும் நிலை உரு­வா­கி­யுள்­ளது.

இலங்கை உள்­ளிட்ட குறித்த சில நாடு­க­ளுக்கு அமெ­ரிக்­கா­வினால் வழங்­கப்­பட்ட ஏற்­று­ம­திகள் மீதான வரிச்­ச­லு­கையை நீடிப்­ப­தற்கு அமெ­ரிக்க காங்­கிரஸ் சபை அங்­கீ­காரம் வழங்க வில்லை என கொழும்­பி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ரகம் அறி­வித்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

இத­ன­டிப்­ப­டையில் அமெ­ரிக்­கா­விற்கு நாளை முதலாம் திக­தி­யி­லி­ருந்து முன்­னெ­டுக்கும் ஏற்­று­ம­தி­க­ளுக்கு முன்­னு­ரி­மை­யற்ற வரிகள் விதிக்­கப்­படும் . ஐக்­கி­ய­நா­டுகள் சபையில் நடத்­தப்­பட்ட ஜெரு­சலேம் விவ­காரம் தொடர்­பான வாக்­கெ­டுப்பில் இலங்கை அமெ­ரிக்­காவின் தீர்­மா­னத்­திற்கு எதி­ராக வாக்­க­ளித்­தி­ருந்­த­மையே இவ்­வா­றான சூழல் உரு­வாக பிர­தான கார­ண­மா­கி­யுள்­ளது.

இலங்­கையின் ஏற்­று­ம­தியில் அமெ­ரிக்­கா­விற்கே அதி­க­ள­வி­லான ஏற்­று­மதி காணப்­ப­டு­கின்­றது. கடந்த 2016 ஆம் ஆண்டு மாத்­திரம் 2800 கோடி ரூபா பெறு­ம­தி­யான பொருட்­களை இலங்கை அமெ­ரிக்­கா­விற்கு ஏற்­று­ம­தி­செய்­துள்­ளது. ஆனால் தற்­போது ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டி­யினால் நிலைமை மோச­ம­டைந்­துள்­ளது. அமெ­ரிக்கா ஜி.எஸ்.பி வரிச்­ச­லு­கையை நீடிக்­கா­மை­யா­னது இலங்­கையின் 2018 ஆம் ஆண்டு பொரு­ளா­தா­ரத்தில் பாரிய தாக்­கத்தை செலுத்தும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இலங்­கையின் கடந்த ஆண்டு பொரு­ளா­ரத்தை வீழ்ச்­சி­யி­லி­ருந்து உள் நாட்டு ஏற்றுமதிகளே பாதுகாத்தன என்று இலங்கை மத்திய வங்கியின் 8 ஆவது பணவியல் கொள்கை ஆய்வின் போது தெரிவிக்கப்பட்டது. ஆகவே நிலைமையை சீர்செய்வதற்கு அமெரிக்காவுடன் அரசாங்கம் பலமுனை பேச்சுக்களை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக அரச தரப்பு செய்திகள் கூறுகின்றன..
இலங்­கைக்கு ஜி.எஸ்.பி. வரிச்­ச­லுகையை நிறுத்தியதால் அமெ­ரிக்­கா­வுடன் சம­ர­சம் பேச அர­சாங்கம் நடவடிக்கை. இலங்­கைக்கு  ஜி.எஸ்.பி. வரிச்­ச­லுகையை நிறுத்தியதால் அமெ­ரிக்­கா­வுடன் சம­ர­சம் பேச  அர­சாங்கம் நடவடிக்கை. Reviewed by Madawala News on 12/31/2017 01:26:00 PM Rating: 5