Yahya

வில்பத்து போர்வையில் வளர்ந்துவரும் இனவாதம்.


டிசம்பர் 14 ஆம் திகதி 'வில்பத்துவைப் பாது காப்போம் என்ற தொனிப்பொருளில்
கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் எதிர்ப்பார்ப்பாட்ட பேரணியொன்று இடம்பெற்றது.  அங்கு பல் வேறு கோஷங்களுக்கு மத்தியில் துண்டுப்பிரசுரமொன்றும் விநியோகிக்கப்பட்டது.

அதில் "மிகவும் பெறுமதிமிக்க சுற்றாடல் சூழல் கொண்ட பழைய மறிச்சுக் கட்டி கிராமம் அமையப் பெற்றுள்ள பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்ப குதி அழிக்கப்பட்டு வருகின்றது.

அந்த இடத்தில் அரபு நாடுகளின் நிதி உதவி பெற்று குடியேற்றத் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது." என்பதே அந்த பிரசுரத்தின் சுருக்கமாகும்.


 இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பிரபல கலைஞர்களான ரவீந்திர ரன்தெனிய, பிரியந்த மெண்டிஸ் போன்றோர் பிரதான பங்கெடுத்திருந்தனர்.

அதேபோன்று சூழலியலாளர் பலரும் திரண்டு தம் எதிர்ப்பை வெளிக்காட்டினர் ஆனால் இவர்கள் அனைவரும் ஒன்று திரண்டி ருந்தமை நாட்டுப்பற்றுடன் வனத்தைப் பேணுவதற்கா அல்லது இனவாதத்தைத் துண்டும் குறுகிய எண்ணத்திலா? என்ற சந்தேகம் எழவே செய்கிறது.


 வனப் பாதுகாப்புப் போர்வையில் இனவாதத்தைத் தூண்டி அதில் குளிர்காய எண்ணுவோர் மத்தியில் சுற்றாடல், வனங்கள் பேணப்பட வேண்டும் என்பதில் உண்மையான பற்றுள்ளவர்களும் இல்லாமலில்லை.


இவர்களிடம் இனவாத நோக்கங்கள் இல்லை. ஆனால் இனவாதத்தை உள்நோக்காகக் கொண்டு வனங்கள் அழிக்கப் படுவதற்கு எதிராக வேலைத் திட்டத்தை முன் னெடுத்து வருவோரின் கரங்களே மேலோங்கி வருவதைக் காணமுடிகிறது "வில்பத்து வனப்பகுதியில் ஒரு இலட்சம் ஏக்கர் பரப்பளவை விழுங்கும் பயங்கரவாதத்தை முறியடிக்க பத்து இலட்சம் தேசப்பற்றாளர்கள் எம்முடன் அணிதிரளுங்கள்" என்றே வில்பத் துவை பாதுகாக்கும் தேசிய வேலைத் திட்டத்தை முன்னெடுக்கும் அமைப்பின் கோரிக்கையாகும் .

அது டிசம்பர் 14 ஆம் திகதி விஹாரமகாதேவி பூங்காவில், அங்குள்ள புத்தர் சிலையின் அருகே ஒன்று திரளும்படி அழைப்பு விடுத்திருந்தது.

 இந்த அழைப்புப் பிரசுரத்தில் விடுக்கப்பட்டிருந்த பயங்கரவாதம், தேசப்பற்று ஆகிய சொற் பிரயோ கங்கள் உணர்த்துவதென்ன?

இவர்களது இனவாத மறைபொருளையே அவை வெளிப்படுத்துகின் றன. அதேபோன்றே விஹாரமகா தேவி பூங்கா விலுள்ள புத்தர்சிலை முன்னால், என்பதிலும் அராபிய நாட்டு நிதி உதவியில் குடியேற்றம் என்ற பதப் பிரயோகங்களின் பின்னணியிலும் இன வாதமே தொக்கி நிற்கின்றன.


எனவே இவர்கள் முன்னெடுக்கும் நோக்கம் சூழல் பற்றா அல்லது இனவேற்றுமைக்கான தூபமிடலா என்பதையும் புரிந்து கொள்ளமுடிகிறது

அத்துடன் "இந்த நூற்றாண்டின் மிகப்பாரிய காடழிப்பாக வில்பத்து காடு அழிக்கப்ப டுகிறது" என்ற அண்டப் புளுகொன்றையும் அவிழ்த்துள்ளார்கள்.

 அதுவும் வில்பத்து வனப்பகுதியில் ஒரு இலட்சம் ஏக்கர் காடுகள் அழிக்கப்போ கிறார்கள் என்ற மிகைப்படுத்தல் ஏன்? அவ்வாறு ஒரு இலட்சம் ஏக்கர் பகுதி யாராலும் கோரப்பட வுமில்லை.

இது உணர்ச்சியைத் துண்டுவதற்கு மிகைப்படுத்திக் கூறும் ஒரு கூற்றாகும் இலங் கையில் ஏனைய பகுதிகளை விடவும் மிகவும் பிரமாண்டமான காடழிப்பு வில்பத்துவில் இடம் பெறப் போகிறதென்பதைக் காட்டுவதற்கே இந்த அண்டப்புளுகு இது இனவாதத்தின் வெளிப்பாடேயன்றி வேறில்லை வனங்கள் நாசமாக்கப்படுவதற்கெதிராக கிளர்ந் தெழ வேண்டியது நியாயமே.


ஆனால் இதை விடவும் மிகவும் பாரிய காடுகள் அழித்து நாசமாக் கப்படுவதைக் கண்டு கொள்ளாது வில்பத்துவை மாத்திரம் தூக்கிப்பிடிப்பதன் இரகசியம் என்ன?


அண்மைக்காலத்தில் மிகவும் பாரதூரமான காடழிப்பு நிகழ்ந்துள்ளது. அது குறித்து ஏன் மெளனம் சாதிக்கிறார்கள்?

ஹம்பாந்தோட்டை பகுதியில் பாரிய காடழிப்பு இடம்பெற்றுள்ளது. மத்தள விமான நிலையம் நிர்மாணிப்புக்காக வனப் பாதுகாப்பு திணைக் களத்திற்குரிய சுமார் 5000 ஏக்கர் பரப்பளவுள்ள காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.


இந்த நடுக்காட்டுப்பகுதியில் சுதந்திரமாக வாழ்ந்து வந்த வன ஜீவராசிகள், யானைகளின் வாழிடங்களும் கூட நாசமாக்கப்பட்டுள்ளன.

 இது மட்டுமல்ல மாகம்புர துறைமுகம், சூரிய வெவ விளையாட்டுத்திடல், மிரிஜ்ஜவில முதலீட்டு வலயம், அனல்மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட பாரிய கருத்திட்டங்கள் உருவாக்குவ தற்காக சுமார் 10000 ஏக்கர் பரப்பளவான காடுகள் அழித்து சமதரையாக்கப்பட்டுள்ளன.


இங்கும் வனவிலங்குகளின் வாழ்விடங்களும் கபஸ்ரீகரம் செய்யப்பட்டுள்ளன. இன்று குடியிருப்புகளுக்குள் யானைகள் புகுந்து அட்டகாசம் புரிவதற்கும் பல மனித உயிர்கள் பலியாவதற்கும் இத்தகைய காடழிப்பே காரணமாகும்.


 கருவலம்குளம் எனும் போகஸ்வெவ வன சம்ஹாரம்தான் அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப் பட்ட மிகப் பிரமாண்டமான காடழிப்பாகும் வில் பத்து காடழிப்பு என்று உரக்கக் குரலெழுப்பிவரும் இவ்வேளையில், அதைவிட பன்மடங்கு வனப் பகுதிகள் போகஸ்வெவயில் நாசமாக்கப்பட்டுள் ளன. இந்த கருவலம்குளம் காட்டின் நடுப்பகுதி அழிக்கப்பட்டு அங்கு குடியேற்றப்பட்டுள்ளோர் சிங்களவர்கள் என்பதாலே அழிவு நாசகாரம் அம்ப லத்திற்கு வராது ஊமைகண்ட கனவுபோலாக்கப் பட்டுள்ளது ஆந்துக்குளம் வன பாதுகாப்புப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 6000 ஏக்கர் பரப்பளவு மகாவலி எல் வலயம் என்று பிரகடனப்படுத்தப்பட்டு அரசியல் ஆதரவாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன இது எவ்வளவு பெரிய காடழிப்பு என்பதைப் பாருங்கள்.

 இவற்றுக்குப் புறம்பாக உல்லாசப் பயணிகள் அபிவிருத்தி உட்பட மற்றும் பல்வேறு நடவடிக் கைகளுக்காக சிங்ஹராஜவனம், யால, குமண போன்ற வனப்பகுதிகளும் பாரதூரமான அழிவைச் சந்தித்து வருகின்றன அத்துடன் ஹோர்டன்தென்ன வனபாதுகாப்பு பிராந்தியமும் பேராபத்தை சந்தித்துள்ளது.


இதே போன்றே பதுளை ஹல்தும்முல்லை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலஹெர அம்ப கொல பகுதியில் 1000 ஏக்கர் காடுகள் ஹப்புத்தள பிரதேச அரசியல் தலைவரொருவரின் தலை மையில் நாசமாக்கப்பட்டு வருவதற்கு யார்தான் குரல் கொடுக்கின்றனர்.


மேலும் ராஜபக்ஷ குடும் பத்தின் அரசியல்வாதியொருவரின் தலைமையில் மேலும் 500 ஏக்கர் வனப்பகுதி அழிக்கப்பட்டு வருகின்றன மற்றுமொரு அரசியல்வாதியின் நண்பரொ ருவரால் நில்கல வனப்பகுதியில் 505 ஏக்கர் காடுகள் அவரது தேவைக்காக அழிக்கப்பட்டு வருகின்றன இவ்வாறு பாரிய பரந்தளவான காடுகள் அழிப்பு சமுத்திரத்தில் வில்பத்து விவகாரம் ஒரு சிறுது ளிதான் என்றாலும் அந்தக் காடழிப்பை நாம் சரியென்று வாதிக்க வரவில்லை. ஆனால் நாம் கூறவருவது வில்பத்து வன அழிப்புக்கு குரல் கொடுத்தும் பேரணி நடத்தியும் கூப்பாடு, கூச்சல் போடுவோர் மேலே நாம் சுட்டிக்காட்டியுள்ள பிர மாண்டமான பேரழிவு குறித்து மெளனம் சாதிப் பது ஏன் என்பதே எமது கேள்வியாகும்?


எனவே வில்பத்து கோஷம் சூழலியல் ஆதரவினால் எழுந்த உணர்வலைகள் அல்ல. இது வெறும் இன வாதத்தின் வெளிப்பாடே என்பது தெளிவு சுற்றாடல் மற்றும் இயற்கை வள கண்காணிப்பு மத்திய நிலைய அழைப்பாளரான கலாநிதி ரவீந் திர காரியவசம் வில்பத்து எதிர்ப்பு போராட்டம் குறித்து கருத்து வெளியிடுகையில், வில்பத்து வன அழிப்பு எதிர்ப்பு குறித்து சமூக வலைத்த ளங்களில் வெளியாகும் கருத்துக்களை ஒன்று திரட்டியுள்ளேன்.


அந்த தகவல்களை சுமார் 500 பேர் அளவிலே அவதானம் செலுத்தியுள்ளார்கள் இத்தகையோர் மத்தியிலேதான் இந்த விடயம் இனவாதமாகப் பார்க்கப்பட்டுவருகிறது இருந்த போதிலும் வில்பத்து வனப்பகுதி நாசம் குறித்து எழுந்து வரும் எதிர்ப்பும் நியாயமானது தான்.


காரணம், வனப்பகுதியின் உள்புறங்கள் அழிக்கப்பட்டு வருவது உண்மைதான். இது நீண்ட காலமாக இடம் பெற்றுவரும் நிகழ்வாகும் எனவே இதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மாத்திரமல்ல. அவர் தேசிய பெளதிகத் திட்டம் ஒன்றை செயல்ப டுத்திக் கொண்டிருக்கிறார். எனவே,

 இதற்குப் பொறுப்பானவர்களாக வுள்ள சுற்றாடல் அமைச்சர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோரே பொறுப்புக் கூற வேண்டும். அதேநேரம் தவறிழைத்ததிலிருந்து ரிஷாத் பதியுதீன் விடுபடுவதற்கில்லை.


உல்லாசப் பயணிகளுக்கான ஹோட்டல் நிர்மாணத்திற்கா கவும் மற்றும் வேறு அபிவி ருத்திப் பணிகளுக்குமாகவுமே காடுகள் அழிக்கப்பட்டு வருகின் றன. எனவே வில்பத்து வனப்பி ராந்தியத்துடன் ஏனைய வனப்ப குதிகளும் அழிக்கப்படுவதற்கு ஏதிராவே நாம் எழுந்துநிற்க வேண்டும்.

ரிஷாத் பதியுதீனை மட்டும் இலக்குவைத்து எதிர்ப்புப் போராட்டம் நடத்துவது தவறு. அவ்வாறு மேற்கொள்ளும் போது அது இனவாதமாக உருவெடுக்கவே செய்யும்.

எனவே பொதுவான காடழிப்புக்கு எதிராகவே போராடவேண்டும் என்று அவர் தனது நடுநிலையான கருத்தொன்றை முன்வைத்துள்ளார்.


ரவீந்திர காரியவசம், சஜீவ சாமிகா போன்ற சூழலியலாளர்கள் உண்மையான நோக்கத்துடன் வில்பத்து உள்ளிட்ட இலங்கையிலுள்ள இதர வனப்பிராந்தியங்கள் அழிக்கப் படுவதற்கு எதிராக இனவாத அடிப்படையிலன்றி தேசப்பற்றுடன் குரல்கொடுக்கும் போது இவர்களுடன் இனவாதிகளும் இணைந்துகொண்டு இதனை இனவாதமாக தி சைதிருப்பிக்கொண்டிருக்கி றார்கள். இதுவே இப்போது நடந்தேறிக்கொண்டிருக்கின்றன.


எனவே, காடழிப்புக்கு எதிராக முன்னெடுக்கும் வேலைத்திட்டம் இனங்களுக்கிடையே மோதல்களுக்கு வழிவகுக்கப்பட்டு அது இனஅழிவுக்கு வித்திட்டு விடுமோ என்றே நாம் அஞ்சுகிறோம்.

வில்பத்து போர்வையில் வளர்ந்துவரும் இனவாதம். வில்பத்து போர்வையில் வளர்ந்துவரும் இனவாதம். Reviewed by Madawala News on 12/29/2017 07:46:00 PM Rating: 5