Yahya

ரோசி Vs சாலி.


இம்­முறை உள்­ளூ­ராட்­சி­மன் றத் தேர்­தலில் வழ­மை­போன்று கொழும்பு மாந­க­ர­சபை தேர்­த­லா­னது தீவிர அவ­தானிப்பை பெற்­றி­ருக்­கின்­றது. ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சார்­பாக

கொழும்பு மாந­க­ர­சபை மேயர் வேட்­பா­ள­ராக முன்னாள் அமைச்சர் ரோஷி சேனா­நா­யக்க, சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் மேயர் வேட்­பா­ள­ராக முன்னாள் பிர­தி­மேயர் அஸாச் சாலியும் போட்­டி­யி­ட­வுள்­ளனர்.

அதே­போன்று மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் கொழும்பு மாந­க­ர­சபை மேயர் வேட்­பாளர் இது­வரை பெய­ரி­டப்­ப­ட­வில்லை. ஒரு­சி­லரின் பெயர்கள் பரி­சீ­ல­ணையில் இருக்­கின்­ற­போதும் இது­வரை யார் என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

அந்­த­வ­கையில் கொழும்பு மாந­க­ர­சபை தேர்தல் களம் இம்­மு­றையும் வழ­மை­போன்று பாரிய போட்­டிக்­க­ள­மாக அமை­ய­வி­ருக்­கி­றது. அது­மட்­டு­மன்றி கொழும்பு மாந­க­ர­சபை முழு­வதும் பிர­தான அர­சியல் கட்­சி­க­ளினால் பல்­வேறு பிர­சா­ரக்­கூட்­டங்கள் நடத்­தப்­ப­ட­வுள்­ளன.

குறிப்­பாக ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும், சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும், சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­னவும் கொழும்பு நகரில் பிர­தான பிர­சா­ரக்­கூட்­டங்­களை நடத்­த­வுள்­ளன. மேலும் தமிழ் முற்போக்கு கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளும் கொழும்பு மாநகரசபையில் கடும் பிரசாரத்தை முன்னெடுக்கவுள்ளன.
ரோசி Vs சாலி. ரோசி  Vs சாலி. Reviewed by Madawala News on 12/21/2017 12:14:00 PM Rating: 5