Yahya

கடந்த வருடங்களை விட அதிகரித்தது இவ்வருடம் வீதி விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை.


இந்த வருடத்தின் கடந்த 11 மாதத்தில் வீதி விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து டிசம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பஸ் விபத்துக்களால் 161 பேர் உயிரிழந்துள்ளதுடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் தனியார் பஸ் விபத்துக்களால் 188 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் கடந்த வருடம் லொறி விபத்தால் 319 பேர் உயிரிழந்துள்ளதுடன், இந்த வருடம் இதன் எண்ணிக்கை 363 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோத்தாகொட தெரிவித்துள்ளார்.

மேலும், வான் விபத்துக்களால் 173 பேர் கடந்த வருடம் உயிரிழந்துள்ளதுடன், இந்த வருடம் இதன் எண்ணிக்கை 208ஆக அதிகரித்துள்ள நிலையில், முச்சக்கர வண்டியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது கடந்த வருடத்தை விட குறைவடைந்துள்ளதாகவும்  கடந்த வருடம் 368 பேரும், இவ்வருடம் 353 பேரும் முச்சக்கர வண்டி விபத்தினால் உயிரிழந்தள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மோட்டார் சைக்கிள் விபத்தால் கடந்த வருடம் 1123 பேரும், இந்த வருடம் 1145 பேரும் உயிரிழந்துள்ளதாக சிசிர கோத்தாகொட தெரிவித்துள்ளார்.

கடந்த வருடங்களை விட அதிகரித்தது இவ்வருடம் வீதி விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை. கடந்த வருடங்களை விட அதிகரித்தது இவ்வருடம் வீதி விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை. Reviewed by Madawala News on 12/27/2017 11:53:00 AM Rating: 5