Yahya

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் மின்கம்பத்துடன் மோதி தீ பிடித்தில் ஒருவர் உடல் கருகிப் பலி. இன்னொருவர் படுகாயம். (படங்கள்)



பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை கோட்டைக்காடு பகுதியில் 

வேகக்கட்டுப்பாடுஇன்றிச் செலுத்தப்பட்ட மோட்டார்சைக்கிள் மின்கம்பத்துடன்மோதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் அதில் பயணித்த ஒருவர் உடல் கருகிப் பலியானார். மற்றுமொருவர் படுகாயமடைந்தார்.

நேற்று(24) பிற்பகல் இரண்டு மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

இந்த அனர்த்தத்தில் மோட்டார்சைக்கிளைச் செலுத்திவந்த இளைஞர் பலியாகியதோடு மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மரணவீடு ஒன்றிற்குச் சென்றுவிட்டு வட்டுக்கோட்டை-தெல்லிப்பழை வீதி வழியாக குறித்த இருவரும் பயணித்துள்ளனர். வேகக்கட்டுப்பாடுஇன்றிச் செலுத்தப்பட்ட மோட்டார்சைக்கிள் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் சந்திக்கு முன்னால் வீதியின் ஓரத்தில் காணப்பட்ட மின் கம்பத்துடன் மோதியுள்ளது.

இதன்போது மோட்டார்சைக்கிளைச் செலுத்திவந்தவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே நினைவிழந்துள்ளார். இதன்போது உந்துருளியின் எரிபொருள் தாங்கி வெடித்து தீப்பிடித்துள்ளது. இதனால் குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே எரிந்து பலியானார்.

இதேவேளை இவருடன் பயணித்த மற்றுமோர் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் மக்களால் தீயிலிருந்து இழுத்தெடுக்கப்பட்டு வைத்தியசாலையில் ரே்க்கப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த யாழ்ப்பாணம் குற்ற தடயவியல் பொலிஸார் வட்டுக்கோட்டை பொலிஸாருடன் இணைந்து சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டனர்.



வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் மின்கம்பத்துடன் மோதி தீ பிடித்தில் ஒருவர் உடல் கருகிப் பலி. இன்னொருவர் படுகாயம். (படங்கள்) வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் மின்கம்பத்துடன் மோதி தீ பிடித்தில் ஒருவர் உடல் கருகிப் பலி. இன்னொருவர் படுகாயம். (படங்கள்) Reviewed by Euro Fashions on 12/25/2017 10:01:00 AM Rating: 5