Yahya

யாழ் தேசிய மீலாத் விழாவில் ஜனாதிபதி கலந்து கொள்ளாதது ஏன்?



2017 ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா யாழில் நேற்று(23) சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்ற
ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்த கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும் தவிர்க்க முடியாத காரணங்களினால் அவர் சமூகம் தரவில்லை இதனால் முஸ்லீம் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


கடந்த மாதம் முதல் குறித்த நிகழ்விற்கு ஜனாதிபதியை அழைப்பதற்காக முஸ்லீம் அமைச்சர்கள் பலரும் முயன்று தோற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஜனாதிபதி தன்னை குறித்த நிகழ்விற்கு அழைக்க வந்தவர்களிடம் யாழில் முஸ்லீம்கள் உள்ளனரா என்ற கேள்வியை தொடுத்ததாக தன்னை அடையாளம் காட்ட விரும்பாத முக்கிய அமைச்சர் தனது பேச்சில் சூட்சுமமாக குறிப்பிட்டிருந்தார்.


மேலும் கடந்த இரு மாதங்களில் காலி ஜிந்தோட்டை பகுதியில் முஸ்லீம்களிற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட மோதல் கலவரம் தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிற்காமல் இருந்தமையினால் முஜ்லீம்ம் மக்கள் தன் மீது நல்லெண்ணங்களை கொண்டிருக்கவில்லை என தனது நெருங்கிய தரப்பிடம் தெரிவித்து அதனால் குறித்த விழாவிற்கு செல்ல முடியாது என கூறியுள்ளாராம்.


இது தவிர யாழ் மாவட்டத்திற்கு கடந்த மாதம் வரும் போது நடு வீதியில் தமிழ் தேசிய அமைப்புகளினால் இடைமறிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட நிலையில் இந்த முடிவினை மேற்கொண்டுள்ளதாக ஊடகங்கள் பல விமர்சனங்களை தெரிவித்துள்ளன.


எவ்வாறு இருந்த போதிலும் குறித்த விழாவில் ஜனாதிபதி பங்கேகேற்மகால் சென்ற விடயம் முஸ்லீம் மக்களை வெகுவாக பாதித்துள்ளதை அவதானிக்க முடிந்தது.எனினும் ஜஅதற்கு பதிலாக இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற சபாநாயகர் கரு ஐயசூரிய கலந்து கொண்டிருந்தார்.


மேலும் முஸ்லிம் சமய பண்பாட்டல்வல்கள் மற்றும் தபால் அமைச்சரான எம்.எச்.எம்.ஹலீம் வர்த்தக வாணிப அமைச்சரான றிசாட் பதீயுதீன் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா தர்மலிங்கம் சித்தார்த்தன் ஈ.சரவணபவன் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோலட் கூரே உட்பட அரச அதிகாரிகள் பொது மக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.


இதன் போது 2017ம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா நிகழ்வின் ஞாபகார்த்தமாக முத்திரை ஒன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது. குறித்த முத்திரையை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் அமைச்சர் எம் எச் எம் ஹலீம் ஆகியோர் இணைந்து வெளியிட்டு வைத்தனர்.

- பாரூக் ஷிஹான்-
யாழ் தேசிய மீலாத் விழாவில் ஜனாதிபதி கலந்து கொள்ளாதது ஏன்? யாழ் தேசிய மீலாத் விழாவில் ஜனாதிபதி கலந்து கொள்ளாதது ஏன்? Reviewed by Euro Fashions on 12/24/2017 04:37:00 PM Rating: 5