Yahya

அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை தவறவிட்டால் 04 வருடங்களுக்கு கவலைப்பட வேண்டிய நிலை ஏற்படும்.



(எம்.ஜே.எம்.சஜீத்)

அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கு புதிய வட்டாரத் தேர்தலில் வாக்களித்து மாற்றத்தை
ஏற்படுத்தி நமது பிரதேசத்தை நன்கு திட்டமிட்டு அபிவிருத்தி செய்வதற்கான நல்ல சந்தர்ப்பம்  கிடைத்துள்ளது. இச்சந்தர்பத்தினை பாவித்து தேசிய காங்கிரஸின் வேட்பாளர்களுக்கு வாக்களித்து நமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கான சந்தர்பத்தை வழங்க வேண்டும். 

இல்லையெனில் மீண்டும் 04 வருடங்களுக்கு கவலைப்பட வேண்டிய நிலை ஏற்படும் என அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பதுர்த்தீனை ஆதரித்து பாலமுனை அல்-ஹிதாயா வட்டாரத்தில் பாலமுனை தேசிய காங்கிரஸ் ஆலோசகர் அல் ஹாஜ் எஸ்.டி. ஆதம்லெப்பை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில்....

அட்டாளைச்சேனை பிரதேச தேர்தலில் பாலமுனை பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகிய நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளராக மயில் சின்னத்தில போட்டியிடும் முன்னாள் தவிசாளர்  அன்சிலை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீம் கிழக்கில் எந்த சபையை வெற்றி பெறாவிட்டாலும் பறுவாய்யில்லை அட்டாளைச்சேனை பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர் அன்சிலை தோற்கடிப்பதற்கு அத்தனை பலத்தையும் பாவித்து வருகின்றார்.

இதற்கு சமமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாட் பதீயுத்தீன் முன்னாள் தவிசாளர் அன்சிலை வெற்றி அடையச்செய்வதற்கு அமைச்சரின் அத்தனை பலத்தையும் பாவித்து வருகின்றார். இதற்கு இடையில் பாலமுனை மக்கள் இத்தேர்தலில் ஒற்றுமைப்பட்டு தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான பதுர்டின், ஜெஸ்பர் இருபேரையும் வெற்றி வெறுபதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.

இத்தேர்தலில் பாலமுனை மக்கள் ஒற்றுமைப்பட்டு வாக்களித்து தேசிய காங்கிரஸ் வேட்பாளர்கள் இருபேர்களையும் வெற்றியடையச் செய்வதனால் எமது பிரதேச சபையை நாம் வெற்றி பெறுவதால் எமது பிரதேசம் திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்யப்படுவதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய மகா நாடு பாலமுனையில் நடந்ததால் நமது சமூகம் எவ்வித பயனும் பெறவில்லை. மறைந்த பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் ஒவ்வொரு தேசிய மகா நாடுகளிலும் நாட்டின் தலைவரையும், அரசியல் கட்சியின் தலைவர்களையும் அழைத்து நமது சமூகம் எதிர் நோக்கும் முக்கியமான பிரச்சினைகளை முன்வைப்பார்.

பாலமுனையில் நடந்த முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மகாநாட்டை நன்கு பயன்படுத்திய  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா தங்களது சமூகத்தின் உணர்வுகளை இம்மகா நாட்டில் தெளிவாக முன்வைத்தார். பாலமுனையில் நடைபெற்ற தேசிய மகாநாடு பூச்சியமான நிலையில் மகா நாட்டை முன்னின்று நடத்திய மூத்த முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்களே அக்கட்சியினை விட்டு வெளியேறி உள்ளனர். 

பாலமுனை பிரதேசத்தில் தேசிய காங்கிரஸினால் பல்லாயிரக்கணக்கான மக்களை அழைத்து  மக்கள் முன்னிலையில் நமது சமூகம் சார்ந்த முக்கிய விடயங்களை உள்ளடக்கி 'பாலமுனை பிரகடனம்' என்ற பெயரில் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்க கூடிய வகையில் தீர்மாணங்கள் மேற்கொண்டு  நாட்டின் தலைவர் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரி பால சிறிசேன அவர்களுக்கும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் வழங்கி உள்ளோம்.

நடைபெறவுள்ள பிரதேச சபைத்தேர்தலில் பாலமுனை பிரகடனமும், எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, பாலமுனை பிரதேசத்தில் இருந்து 02 மக்கள் பிரதிநிதிகளையும் வெற்றியடையச் செய்வதன் ஊடாக எமது மக்களின் உண்மைக்குண்மையான உணர்வுகளையும், அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுத்துச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.பாறுக், வேட்பாளர்களான பதுர்டின், ஜெஸ்பர் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை தவறவிட்டால் 04 வருடங்களுக்கு கவலைப்பட வேண்டிய நிலை ஏற்படும். அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை தவறவிட்டால் 04 வருடங்களுக்கு கவலைப்பட வேண்டிய நிலை ஏற்படும். Reviewed by Madawala News on 1/04/2018 09:08:00 PM Rating: 5