Yahya

பாகிஸ்தானுக்கு ஆண்டுதோறும் வழங்கும் 1.1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை நிறுத்துகிறோம்



பாகிஸ்தானுக்கு ஆண்டுதோறும் வழங்கும் 1.1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார்.


முன்னதாக பாகிஸ்தான் குறுத்த  ட்ரம்ப் தெரிவித்திருந்ததாவது ,


பாகிஸ்தானுக்கு தேவையில்லாமல் கடந்த 15 ஆண்டுகளில் 33 பில்லியன் டாலர்கள் நிதியளித்தது முட்டாள்தனமானது என்று வருந்துகிறேன்


நாங்கள் ஆப்கானிஸ்தானில் தேடும் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வருகிறது.பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தொடர்ந்து பல உதவிகள் செய்து வருகிறது


ஆனாலும் அமெரிக்காவை பாகிஸ்தான் வஞ்சிக்கிறது. அமெரிக்க தலைவர்கள் முட்டாள்கள் என்று நினைக்கின்றனர். இனிமேல் பாகிஸ்தானுக்கு எந்த உதவியும் செய்யமாட்டோம்என்று குறிப்பிட்டிருந்த நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தானுக்கு ஆண்டுதோறும் வழங்கும் 1.1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை நிறுத்துகிறோம்  பாகிஸ்தானுக்கு ஆண்டுதோறும் வழங்கும் 1.1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை நிறுத்துகிறோம் Reviewed by Madawala News on 1/05/2018 09:55:00 AM Rating: 5