Yahya

கொழும்பில் நேற்றிரவு கஞ்சாவுடன் கைதான 17 வயது இளைஞன், பொலிஸ் சிறைக்குள் தூக்கிலிட்டு தற்கொலை. Ji



புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, 17 வயதான சந்தேகநபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

புறக்கோட்டை - பெஸ்தியன் மாவத்தை பகுதியில் கஞ்சாவுடன் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புறக்கோட்டை பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தினுள் குறித்த இளைஞன் தனது ஆடையை பயன்படுத்தி தூக்கிட்டு கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  

மேலும், இவர் ஹபுதலை - கிரிமானகம பகுதியைச் சேர்ந்தவராவர்.

தற்போது சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்றிரவு கஞ்சாவுடன் கைதான 17 வயது இளைஞன், பொலிஸ் சிறைக்குள் தூக்கிலிட்டு தற்கொலை. Ji கொழும்பில் நேற்றிரவு கஞ்சாவுடன் கைதான 17 வயது இளைஞன், பொலிஸ் சிறைக்குள் தூக்கிலிட்டு தற்கொலை. Ji Reviewed by Madawala News on 1/11/2018 10:46:00 AM Rating: 5