Yahya

பிணை முறி மோசடியில் ஆயிரத்து 100 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாக கூற முடியாது !!



பிணைமுறி விவகாரத்தில் தொடர்புபட்டுள்ள பேர்பச்சுவல் ட்ரெஷரிஸ்

நிறுவனத்தின் பண வைப்புக்களில் ஆயிரத்து 200 கோடி ரூபாவை மத்திய வங்கி முடக்கி வைத்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மகாநாடு இன்று பாராளுமன்றக்கட்டிடத்தொகுதியpல் நடைபெற்றது. செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவை துணை பேச்சாளரும் சுகாதாரம் போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்தார்.

 

இதனால் ஆயிரத்து 100 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாக கூற முடியாது என்று தெரிவித்த அமைச்சர் பிணைமுறி மோசடிகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கு பிணைமுறி பேரங்கள் பற்றிய நிபுணத்துவ அறிவு இருக்கவில்லை. 


இது பற்றிய தெளிவுள்ள வெளிநாட்டு நிபுணர்களின் கருத்தையேனும் ஆணைக்குழு விசாரித்திருக்க வேண்டுமென்றும் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன மேலும் கூறினார்.

பிணை முறி மோசடியில் ஆயிரத்து 100 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாக கூற முடியாது !!  பிணை முறி மோசடியில் ஆயிரத்து 100 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாக கூற முடியாது !! Reviewed by Madawala News on 1/11/2018 09:06:00 AM Rating: 5