Yahya

நீர் விநியோகத்தில் 30 % வருமான இழப்பு ..


மொத்த நீர் விநியோகத்தில் 30 வீதமான வருமானம் இல்லாமற்போவதாக தேசிய நீர்வழங்கல்
மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது

கொழும்பு நகரத்தில் மாத்திரம் நூற்றுக்கு 45 வீதமான வருமானம் இல்லாமல் போவதாக சபையின் தலைவர் அலாவுதீன் அன்ஸார் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக நீரைப் பெற்றுக் கொள்ளல், நீர் வீண்விரயம், ஆகியன காரணமாக நீர்வழங்கல் சபைக்கு வருமானம் இல்லாமற் போகின்றது

இவற்றை குறைப்பதற்கு பல சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

22 இலட்சம் பேர் நாட்டில் நீர் பாவணையாளர்களாக காணப்படுவதாக சபையின் தலைவர் அலாவுதீன் அன்ஸார் தெரிவித்தார்.

கடந்த வருடத்தில் மாத்திரம் 1 இலட்சத்து 60 ஆயிரம் நீர் இணைப்புக்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீர் விநியோகத்தில் 30 % வருமான இழப்பு ..  நீர் விநியோகத்தில் 30 % வருமான இழப்பு .. Reviewed by Madawala News on 1/09/2018 07:04:00 PM Rating: 5