Yahya

இலங்கையிலும் ரஜனிகாந் மக்கள் மன்றம் நேற்று கொழும்பில் உதயம்..


அஷ்ரப் சமத்
நேற்று(31)ஆம் திகதி  தமிழ் நாட்டில் புதியதொரு ஆண்மிக கலாச்சாரத்தினை உருவாக்குவதற்கு
  சுப்பர் ஸ்டார் ரஜனிகாந் அவர்கள் அரசியல் பிரவேசத்தினை அறிவிப்பு செய்துள்ளார்.

அந்த ஆண்மீக ரீதியாக  சிறந்த ஒரு அரசியல் கலாச்சாரத்தினை ஏற்படுத்துவதற்காக ரஜனியின் ரசிகர்மன்றம் ஒவ்வொரு வீதியிலும்  பிரதேசங்களிலும் உருவாக்கி பதியாத பதியப்படாத  மன்றங்கை ஒரு குடையின் கீழ்    கொண்டுவரவுள்ளார்.   

அடுத்த மக்கள் மனன் தேர்தலில் அதுவும் பாராளுமன்ற தேர்தலில் புதிய கட்சி உருவாக்கி  குதிக்கவுள்ளாதாக அறிவித்துள்ளார்.

1996ல் 40 வயதிலேயே இலகுவாக அரசியல் வராத நான் 2018 ல் 68 வயதில் அரசியல் வரவுள்ளார்இருந்தும் இலங்கையிலும்  தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்ல  சிங்கள மக்களும்  ரஜனி ரசிகர்கள்  உள்ளனர்இலங்கையிலும்  ரஜனி மக்கள் மன்றம் நேற்று(31) வசந்தம் தொலைக்காட்சி செய்தி பொறுப்பாளர் அரச தொலைக்காட்சியில் அடிக்கடி  ரஜனியின்  சகல திரைப்படங்கள் அதன் விமர்சனங்களை செய்துவரும்  இர்பான் மொஹமட் தலைமையில்   கொழும்பில்   இவ் அமைப்பு உதயமாகியதுஅதன் தற்காலிக தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கையின் வட கிழக்கு உட்பட மலையகம்  முஸ்லீம்  மக்கள் அனைவரும்  -ஈழத்து மக்கள் தமிழ் நாட்டு அரசியலில் பின்னைப் பினைந்தவர்கள்தமிழ நாட்டு முதலமைச்சர் காலம் சென்ற மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தொட்டு கருநாநிதி ஜெயலலிதா  வரையிலான  முதலமைச்சர்கள் ஈழத்து மக்களுக்காக  அவ்வப்போது குரல்  கொடுத்தவர்கள் என்பதனை மறக்க முடியாது.


இலங்கையில் ரஜனி ரசிகர்கள் அபிமாணிகள்  மன்றங்கள் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து ரஜனியின் கொள்கைகள், செயற்பாடு,ஆண்மீகம் புதிய அரசியல் கலாச்சாரம், ஈழத்திலும் வெளிக்கொணர்வதே  இம் மன்றத்தின் நோக்கமாகும். என ரஜனி மக்கள் மன்றத்தின் தலைவர் இர்பான் மொஹமட்  தெரவித்தார்.
இலங்கையிலும் ரஜனிகாந் மக்கள் மன்றம் நேற்று கொழும்பில் உதயம்..  இலங்கையிலும் ரஜனிகாந் மக்கள் மன்றம் நேற்று கொழும்பில் உதயம்.. Reviewed by Madawala News on 1/01/2018 10:16:00 AM Rating: 5