Yahya

6 மாதங்களுக்கு முன் உயிரிழந்த பெண் இந்த நிலையில் மீட்பு.


ஹங்வெல்ல லஹிருகம , இந்திகட முகலான பிரதேசத்தில் இருந்து சடலமொன்றின் உடற்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பெண் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இவ்வாறு உயிரிழந்திருக்கக்கூடும் என காவற்துறையினர் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

65 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் கணவரால் உயிரிழந்த பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரின் உடற்பாகங்களுக்கு அருகில் இருந்த ஆடைகளை கொண்டு அவர் அடையாளம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
6 மாதங்களுக்கு முன் உயிரிழந்த பெண் இந்த நிலையில் மீட்பு.  6 மாதங்களுக்கு முன் உயிரிழந்த பெண் இந்த நிலையில் மீட்பு. Reviewed by Madawala News on 1/08/2018 05:11:00 PM Rating: 5