Yahya

மூன்றாவது ஒருநாள் போட்டி... 74 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து தோல்வியை சந்தித்தது பாகிஸ்தான் அணி.


பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரில் முதல் இரு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வென்ற நிலையில் இன்றைய போட்டி  Dunedin இல் University Oval மைதானத்தில் அந்நாட்டு நேரம்  காலை 11.00 மணிக்கு  ஆரம்பமானது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 257 ஓட்டங்களை பெற்ற நிலையில் 258 வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் விக்கட்கள் மளமளவென்று சரிய ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் 32 ஓட்டங்களுக்கு 8 விக்கட்களை இழந்து கடும் நிர்க்கதியான நிலையில் போட்டியை தொடர்ந்தது. இந்நிலையில் எட்டாவது விக்கட்டுக்கு கை கோர்த்த அணித்தலைவர் சர்பராஸ் மற்றும் முகம்மத் ஆமிர் நின்று பிடித்து ஆடத்தொடங்கினர்.

அந்த இணைப்பாட்டம் அமீரின் விக்கட்டுடன்  52 ஆம்  ஓட்டத்தில் உடைய இறுதி  விக்கட்டும் 74 ஆம்  ஓட்டத்தில் சரிந்து பாகிஸ்தான் 183  ஓட்டங்களுக்கு தோல்வியை சந்தித்தது.  10 ஆவதாக களமிறங்கிய வீரர் மட்டும் அதிகப்படியான ஓட்டங்களாக 16 ஓட்டங்களை பெற்றார்..

அனையடுத்து 5 போட்டிகளை கொண்ட  தொடரில்  பாகிஸ்தான் அணி 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து தொடரை இழந்துள்ளது.
மூன்றாவது ஒருநாள் போட்டி... 74 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து தோல்வியை சந்தித்தது பாகிஸ்தான் அணி. மூன்றாவது ஒருநாள் போட்டி... 74 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து தோல்வியை சந்தித்தது பாகிஸ்தான் அணி. Reviewed by Madawala News on 1/13/2018 09:44:00 AM Rating: 5