Yahya

கல்முனை நோக்கி சென்ற வேன் விபத்து. பெண்கள் சிறுவர்கள் உற்பட 9 பேர் காயம்.


தம்புள்ள-குருநாகல் வீதி, கலேவேல திவுல்கஸ்கொடுவ பிரதேசத்தில், இன்று காலை இடம்பெற்ற
வேன் விபத்தில் படுகாயமடைந்த 9 பேர், கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனைக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற வேனொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேனானது வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டுவிலகிச் சென்று மதிலொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதென  பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் ஆறு பேர் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பெண்களும் இரு சிறுவர்கள் உள்ளடங்குவதாக தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்முனை நோக்கி சென்ற வேன் விபத்து. பெண்கள் சிறுவர்கள் உற்பட 9 பேர் காயம். கல்முனை நோக்கி சென்ற வேன் விபத்து. பெண்கள் சிறுவர்கள் உற்பட 9 பேர் காயம். Reviewed by Madawala News on 1/12/2018 02:35:00 PM Rating: 5