Yahya

இலச்சினைகள், சின்னங்கள் முக்கியமல்ல.. இலட்சியமே முக்கியமாகும் : ரவூப் ஹக்கீம்.


(எம்.எஸ்.எம்.நூர்தீன்)
இலச்சினைகள் முக்கியமல்ல இலட்சியமே முக்கியமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.


மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காங்கேயனோடை பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற வேட்பாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட வாறு கூறினார்.


முஸ்லிம் காங்கிரஸின் மண்முனைப் பற்று பிர தேச சபை முன்னாள் உறுப்பினர் ஏ.மதீன் தலை மையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தொடர்ந்துரை யாற்றிய அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சில இடங்களில் தனித்து மரச் சின்னத்திலும் சில இடங் களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானைச்சின்னத்திலும் போட்டியிடுகின்றது.

அதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் ஒட்டமாவடி பிரதேச சபை, வாகரை பிரதேச சபை போன்ற இடங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுயேச்சையாகப் போட்டியிடுகின்றது.

ஏறாவூரில் எமது அணிக்குள் இரண்டு அணிகள் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிடு கின்றன.

காத்தான்குடியில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தராசு சின்னத்தில் போட்டி யிடுகின்றது. சின்னங்கள் முக்கியமல்ல இலட்சியங்கள்தான் இங்கு முக்கியமானதாகும்.

 நாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பலமான வேட்பாளர்களை இறக்கியுள்ளோம். சமூகத்தில் மக்களோடு மக்களுக்காக
பணியாற்றுகின்றவர்களை இறக்கியுள்ளோம்.


மண்முனைப் பற்று பிர தேச சபை தேர்தலில் காங் கேயனோடை வட்டாரத்தில் எமது வேட்பாளர் மதீனின் வேட்புமனு நிராகரிக்கப்பட் டிருந்தாலும் எமது சின்ன மான மரச்சின்னம் நிராகரிக் கப்படவில்லை.


இங்கு எமது கட்சிக்கு மரச்சின்னத்திற்கு வாக்க ளித்து மரத்தினை வெற்றிபெறச் செய்யும் போது நாம் மதீனை மண்முனைப் பற்று உறுப்பினராக தெரிவு செய்வோம்.

ஒரு வேட்பாளரின் வேட் புமனுப்பத்திரம் நிராகரிக் கப்படும் போது அந்தக் கட்சியின் சின்னம் இருக்கும். அந்த சின்னத்திற்கு அதிக வாக்குகள் அளிக்கப்படுமாக இருந்தால் மற்றைய கட்சியி லிருந்து உறுப்பினர் தெரிவு செய்யப்படுவதென்பது இங்கு ஒரு பிரச்சினையான விடயமாகும்.


இதனை தேர்தல் ஆணைக்குழுவின் கவ னத்திற்கு கொண்டு சென் றுள்ளோம். அதே போன்று இந்தப் பிரச்சினையை கட்சியின் செயலாளர்களின் கூட்டத்திலும் எடுக்கப் பட்டுள்ளது.


தேர்தல் முடிந்தவுடன் எங்களுக்கு அவ்வாறு நிலைமை ஏற்படுமாக இருந்தால் நாங்கள் அதனை சட்டமா அதிபரை அணுகி சட்டத்தின் ஊடாக அவற்றை கையாள்ளோம்.

எனவே, காங்கேயனோடை வட்டாரத்தில் மதீனின் வேட்பு மனுப்பத்திரம் நிராகரிக்கப்பட்டிருந்தாலும் மரச்சின்னம் இருக்கும். மரத்திற்கு வாக்களித்து எமது கட்சியை வெற்றியடைச் செய்தால் நாங்கள் மதீனை உறுப்பினராக நியமிப்போம் என மேலும் தெரிவித்தார்.

இலச்சினைகள், சின்னங்கள் முக்கியமல்ல.. இலட்சியமே முக்கியமாகும் : ரவூப் ஹக்கீம். இலச்சினைகள், சின்னங்கள்  முக்கியமல்ல.. இலட்சியமே முக்கியமாகும் : ரவூப் ஹக்கீம். Reviewed by Madawala News on 1/02/2018 11:37:00 AM Rating: 5