Yahya

கொழும்பில் கைதாகும் யாசகர்களுக்கு 1500 ரூபா சம்பளத்தில் வேலையும் புனர்­வாழ்வும்.அமைச்சு அறிவித்தது.


கொழும்பு மாந­கரில் யாசகம் எடுப்­ப­வர்­களைக் கைது செய்ய பொலிஸார் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர். ஜன­வரி முதலாம் திகதி முதல் கொழும்பில் யாசகம் எடுக்க தடை விதிக்­கப்­பட்­டுள்ள நிலையில், முதல் கட்­ட­மாக வாரங்­களில் யாசகம் கேட்­போரைக் கைது செய்து புனர்­வாழ்வு மையங்­க­ளுக்கு அனுப்ப நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

அதன்­படி போக்­கு­வ­ரத்து சமிக்ஞை விளக்­கு­களில் நிற்கும் வாக­னங்­களை நெருங்கி யாசகம் கேட்­ப­வர்கள், வேறு இடங்­களில் வாகங்­களில் வரு­வோ­ரிடம் யாசகம் எடுப்­ப­வர்கள் தொடர்பில் இதன்­போது விசேட கவனம் செலுத்­தப்ப்ட்­டுள்­ளது.


வாகன உரி­மை­யா­ளர்கள் அதி­க­ளா­வா­னோரின் முறைப்­பாட்டை கருத்தில் கொன்டு இந் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்ப்ட்­ட­தாக மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சின் திட்டப் பணிப்­பாளர் ரஞ்ஜித் மீகஸ்­வத்த தெரி­வித்­துள்ளார்.


அதன்­படி பொலி­ஸாரால் கைது செய்­யப்­ப­டு­ப­வர்கள் ரிதீ­க­மை யில் உள்ள புனர்­வாழ்வு மையத்­துக்கு அனுப்பி வைக்­கப்­ப­டு வர் எனவும் அவர் தெரி­வித்தார்.
இத­னி­டையே யாசகம் எடுப்­போரில் தொழில் செய்ய விருப்­ப­மா­ன­வர்கள், விசேட தேவை­யற்­ற­வர்­க­ளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்­ப­டுத்தி கொடுக்­கவும் நட­வ­டிக்கை எடுக்­கப்பட்­டுள்­ளது.


அதன்­படி தொழில் செய்ய விருப்­ப­மு­டை­ய­வர்­க­ளுக்கு நாளொன்­றுக்கு 1,500 ரூபா சம்­ப­ளத்தில் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சின் கீழ் உள்ள தாழ் நில அபி­வி­ருத்தி சபையின் கீழ் வேலை வாய்ப்பை ஏற்­ப­டுத்திக்கொடு க்க நட­வ­டிக்கை எடுக்­கப்ப்ட்­டுள்­ள­தா­கவும் அதற்­கான ஒதுக்­கீ­டுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ள தாகவும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் திட்டப் பணிப்பாளர் ரஞ்ஜித் மீகஸ்வத்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் கைதாகும் யாசகர்களுக்கு 1500 ரூபா சம்பளத்தில் வேலையும் புனர்­வாழ்வும்.அமைச்சு அறிவித்தது. கொழும்பில் கைதாகும் யாசகர்களுக்கு 1500 ரூபா சம்பளத்தில் வேலையும் புனர்­வாழ்வும்.அமைச்சு அறிவித்தது. Reviewed by Madawala News on 1/04/2018 01:46:00 PM Rating: 5