Yahya

இஸ்ரேலில் தங்கியுள்ள ஆப்பிரிக்க நாட்டவர்கள் வெளியேற இஸ்ரேல் காலக்கெடு விதித்தது..

இஸ்ரேலில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற ஒரு திட்டத்தை அமுல்படுத்த அந்த  நாட்டு அரசு தொடங்கியுள்ளது.
ஆப்ரிக்காவில் இருந்து அங்கு வந்து சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் அங்கு இருந்து வெளியேறுமாறு அறுவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக எரிதிரியர்கள் மற்றும் சூடானியர்கள் மார்ச் மாத இறுதிவரை வெளியேற வேண்டும் என இஸ்ரேல் அரசு அறிவித்துள்ள நிலையில் அங்கிருந்து வெளியேறும் ஒவ்வொரு நபருக்கும் விமான டிக்கெட் மற்றும் $ 3,500 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலக்கெடு முடிந்தவுடன்,இந்த தொகை வழங்கப்படாது எனவும் தொடர்ந்து செல்ல மறுக்கும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் தங்கியுள்ள ஆப்பிரிக்க நாட்டவர்கள் வெளியேற இஸ்ரேல் காலக்கெடு விதித்தது..  இஸ்ரேலில் தங்கியுள்ள ஆப்பிரிக்க நாட்டவர்கள் வெளியேற இஸ்ரேல் காலக்கெடு விதித்தது.. Reviewed by Madawala News on 1/04/2018 10:31:00 PM Rating: 5