Yahya

சிர்காஷிய‌ர்க‌ள் என்ற இஸ்லாமிய சமூகம் உங்களுக்கு தெரியுமா ?

கலையரசன்-
இஸ்ரேலில் சிர்காஷிய‌ர்க‌ள் என்ற இஸ்லாமிய சமூகம் வாழ்கிறது. அவர்கள் அரேபியர்கள் அல்ல.
அத்துடன், இஸ்ரேலிய இராணுவத்தில் கட்டாய சேவையில் ஈடுபடுத்தப் படும் ஒரேயொரு இஸ்லாமிய சமூகமும் அது தான்.

சிர்காஷியர்களின் முன்னோர்கள், 19ம் நூற்றாண்டில், தெற்கு ரஷ்யாவில் உள்ள கவ்காஸ் பகுதியில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள். அந்த இனத்திற்கு விசேடமான அடிகே மொழி உள்ளது. ஆனால், பொதுவாக எல்லோரும் ரஷ்ய மொழி பேசுவார்கள்

கவ்காஸ் பகுதியில் வாழும் பழங்குடி இனங்களில் சிர்காஷியர்களும் அடக்கம். ஆயிரம் வருட காலமாக கிறிஸ்தவ மதத்தை பின்பற்றினாலும், துருக்கி ஓட்டோமான் சாம்ராஜ்ய விஸ்தரிப்புக் காலத்தில் இஸ்லாமியராக மாறினார்கள்

19ம் நூற்றாண்டில், ரஷ்ய சாம்ராஜ்யம் தெற்கு நோக்கி விஸ்தரிக்கப் பட்டது. அப்போது இந்த சிர்காஷிய இனம் பலவந்தமாக வெளியேற்றப் பட்டதுரஷ்யப் படைகளினால் கொல்லப் படுவோம் என்ற அச்சத்தில் அவர்களாகவே வெளியேறி இருக்கலாம்.

இலட்சக்கணக்கான சிர்காஷிய‌ர்க‌ள் புலம்பெயர்ந்து ஓட்டோமான் துருக்கிக்குள் சென்றனர். இன்றைக்கும் பெருமளவு சிர்காஷிய‌ர்க‌ள் துருக்கியில் வாழ்கிறார்கள். அதற்கு அடுத்த படியாக, ஜோர்டான், சிரியாவிலும் குறைந்தது ஒரு இலட்சம் சிர்காஷிய‌ர்க‌ள் வாழ்கிறார்கள். இஸ்ரேலில் அவர்களது எண்ணிக்கை வெறும் ஐயாயிரம் மட்டுமே

கலீலியா பிரதேசத்தில் வாழும் சிர்காஷியர்களுக்கும், யூதர்களுக்கும் இடையில் எந்தக் காலத்திலும் பிரச்சினை வந்ததில்லை. அதற்குக் காரணம், ஆரம்ப காலங்களில் பாலஸ்தீனத்தில் குடியேறியவர்கள் ரஷ்ய மொழி பேசும் யூதர்கள் ஆவர். ஒரே மொழி (ரஷ்யன்) பேசுவதாலும், இரண்டுமே ரஷ்யாவில் இருந்து வந்த, புலம்பெயர்ந்த சமூகங்கள் என்பதாலும் நட்புறவு ஏற்பட்டது

சிர்காஷிய‌ர்க‌ள் அரேபியருடனும் எந்தப் பிரச்சினைக்கும் போவதில்லை. யூதர்கள், அரேபியருடன் பகைமை பாராட்டாமல் நட்புடன் பழகி வருகின்றனர். அவர்கள் இஸ்ரேலிய இராணுவத்தில் பணியாற்றுவதை தமது கடமையாக கருதுகின்றனர். சிரியாவிலும், ஜோர்டானிலும் பெருமளவு சிர்காஷிய‌ர்க‌ள் இராணுவத்தில் உள்ளனர். எந்த நாடாக இருந்தாலும், இராணுவ சேவையில் ஈடுபடுவதை, அவர்கள் தமது இனப் பெருமையாகக் கருதுகிறார்கள்.
சிர்காஷிய‌ர்க‌ள் என்ற இஸ்லாமிய சமூகம் உங்களுக்கு தெரியுமா ?  சிர்காஷிய‌ர்க‌ள் என்ற இஸ்லாமிய சமூகம் உங்களுக்கு தெரியுமா ? Reviewed by Madawala News on 1/13/2018 08:34:00 AM Rating: 5