Yahya

மு கா வடக்கு மாகாண சபை உறுப்பினராக குவைதிர் கான் ??



ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர் ரயீஸ் தனது உறுப்பினர் பதவியை
ராஜினாமா செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ள நிலையில் குறித்த உறுப்பினர் பதவி முசலி பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படும் என தகவல் வெளியாகியிருந்தது.

அநேகமாக குறித்த வடமாகாண சபை உறுப்பினர் பதவி பண்டாரவெளி நியாஸ் அவர்களுக்கு வழங்கப்படும் என அக்கட்சி வட்டார செய்திகள்
குறிப்பிட்டுள்ள போதும் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் குறித்த பதவி முகா தலைமையுடன் மிக நெருக்கமாக இருக்கும் குவைதிர் கானுக்கு வழங்கப்படும் என செய்திகள் கசிந்துள்ளன.

மு கா வடக்கு மாகாண சபை உறுப்பினராக குவைதிர் கான் ??  மு கா வடக்கு மாகாண சபை உறுப்பினராக குவைதிர் கான் ?? Reviewed by Madawala News on 1/07/2018 02:44:00 PM Rating: 5