Yahya

ஜனாதிபதி மைத்திரியே நிதிமோசடிக்கு பொறுப்புதாரி..!

1978ம் ஆண்டுக்கு பிறகு நாட்டின் பொறுப்புக்கள் அனைத்தும் ஜனாதிபதிக்கே உள்ளது என்பது சகல
பாமரமகனுக்கும் தெறிந்தவொன்றுதான். அவர் நாட்டுமக்களால் நேரடியாக தெறிவு செய்யப்படும் ஒருவராவார். அவருக்குறிய அதிகாரங்களைப்பற்றி கூறும்போது ஒரு ஆணைப் பெண்னாகவோ அல்லது ஒரு பெண்னை ஆணாகவோ மட்டும் மாற்றமுடியாது மற்றப்படி அவர் எதையும் செய்யலாம் என்று கூறுமளவுக்கு அவரிடம் அதிகாரங்கள் குவிந்து கிடக்கின்றது என்பது நாட்டிலுள்ள எல்லா மக்களும் அறிந்திருக்கும் ஒன்றுதான்.

அதே நேரம் பிரதமர் என்பவர் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் ஜனாதிபதியினதும் விருப்பத்தை பெற்றவராக இருப்பதனால். அவர் தன்னிட்சையாக ஜனாதிபதியை மீறி எந்த விடயத்திலும் செயல்படமுடியாது என்பதுதான் கடந்த காலங்களில் நாம் அறிந்துவரும் விடயமாகும்

ஜே.ஆர் அவர்கள் ஜனாதிபதியாக இருக்கும் போது நாட்டில் எது நடந்தாலும் அவர்தான் அதற்கெல்லாம் பொறுப்பாளியாக ஆக்கப்பட்டார். அதே போன்று முன்னால் ஜனாதிபதிகளான ஆர்.பிரமதாசா, சந்திரிக்கா பண்டாரநாயக்கா, மஹிந்த ராஜபக்ஸ  போன்றவர்கள் ஜனாதிபதிகளாக இருந்தபோது பிரதமர்களாக இருந்தவர்கள் டம்மியாகவே செயல்பட்டார்கள். ஆனால் நாட்டில் நடக்கும் நன்மை தீமை அனைத்துக்கும் ஜனாதிபதியானவரே பொறுப்புக்கூறும் நிலையிலும் இருந்தார். இதனை நாட்டுமக்கள் நன்றாகவே அறிந்திருந்தனர்.

ஆனால் 2015ம் ஆண்டு சகல மக்களின் ஆதரவோடும் ஜனாதிபதியாக்கப்பட்ட ஜனாதிபதி மைத்ரி அவர்கள் ஒரு பொம்மை ஜனாதிபதி போன்றும், பிரதமர் ரணில் அவர்கள்தான் நாட்டின் சகல அதிகாரம் பொருந்திய தலைவர் போன்றும் செயல்பட்டு வருவதை நாம் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. இதன் காரணமாக நாட்டில் நடக்கும் நல்லது கெட்டதற்கு யாரைப் பொறுப்புக்கூறுவது என்று மக்களுக்கு குழப்பமாகவே இருந்து வருகின்றது.

இந்த நிலையில்தான் மத்திய வங்கியில் நடைபெற்றதாக கூறப்படும்  பணமுறி ஏல விடயத்தில் பாரிய நிதி மோசடி நடந்ததாக, ஜனாதிபதி மைத்ரி அவர்களினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதுஇந்த விடயம் நேற்றோ இன்றோ நடந்த விடயமல்ல, பல நாட்களாக திட்டமிட்டு நடந்த மோசடியாகும். இந்த மோசடியை ஜனாதிபதியோ பிரதமரோ அறியாமிலிருக்க வாய்ப்பே இல்லை. அவர்களுடைய அதிகாரத்தையும் மீறி, அவர்களுக்கே தெறியாமல்  இந்த ஊழல் நடந்திருக்குமாக இருந்தால் இவர்கள் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ இருப்பதற்கு தகுதியானவர்களா? என்ற கேள்வி எழவும் வாய்ப்பிருக்கின்றது.

அதிலும் முக்கியமாக ஜனாதிபதிக்குத்தான் இதில் கூடிய பொறுப்பு இருக்கின்றது. முன்னய காலங்களில் இப்படியான மோசடிகள் நடைபெற்றால் அந்தப்பழியெல்லாம் ஜனாதிபதியாக இருப்பவரே சுமந்த வரலாறுகள்தான் உண்டு. ஆனால் இந்த மோசடியில் மட்டும் ஜனாதிபதி மைத்ரி அவர்கள் ஒன்று தெறியாதவர் போல் நடந்து கொண்டது மட்டுமல்ல, ஆணைக்குழு அமைத்து அதன் மூலம்தான் உண்மையைக் கண்டுபிடிக்குமளவுக்கும் அவருடைய நிலைமை இருக்கின்றது என்றால், இன்றய ஜனாதிபதியின் நிலைமையை முன்னய ஜனாதிபதிகளோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது, இன்றய ஜனாதிபதியின்  செயல்பாடுகள் அவ்வளவு திருப்தியாக அமையவில்லை என்பதுதான் மக்களின் கருத்தாக உள்ளது.

இருந்தாலும் விசாரணையின் பின் மோசடியொன்று நடைபெற்றுள்ளது என்பது நிரூபணமாகிவிட்டது. இந்த மோசடிக்கு முழுப் பொறுப்பையும் சகல அதிகாரத்தையும் கையில் வைத்திருக்கும் ஜனாதிபதி என்ற முறையில் ஜனாதிபதி மைத்ரி அவர்களே பொறுப்பேற்க வேண்டும் அதுதான் நியாயமும்கூடஏனென்றால் கடந்த காலங்களில் இப்படியான பிரச்சினகள் ஏற்பட்டால் அன்றய ஆட்சியிலிருக்கும் ஜனாதிபதிதான் அதற்காக விமர்சிக்கப்படுவது மட்டுமல்ல, அவர்தான் இதற்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலையிலும் இருந்திருக்கின்றார்.

அதற்கு உதாரணம்தான் கடந்த ஆட்சியில் யார்யாரே செய்த பிழைகளுக்கு எல்லாம் மஹிந்த என்ற தனி நபரே பாதிக்கப்பட்டார், காரணம் அவர்தான் சகல அதிகாரம் பொருந்திய அதிகாரத்தோடு இருந்ததனாலாகும். அவருடைய ஆட்சியில் அநியாயம் நடந்ததாக கூறினாலும் அன்று அவரோடு இருந்த முக்கிய புள்ளிகள் அனைபேரும் இன்றும் முக்கிய பதவிகளில்தான் இருக்கின்றார்கள். ஏன் இன்றய ஜனாதிபதி மைத்ரி அவர்களும்கூட அன்று அவரோடு இருந்தவர்தான்ஆனால் அன்றய ஆட்சியில் நடந்த அநியாயம் உண்மையாக இருந்தால் அதற்கு  மஹிந்த மட்டும் காரணமல்ல, ஏனயவர்களும் காரணமாக இருந்திருப்பார்கள், ஆனால் ஒட்டுமொத்தமாக குற்றவாளியாக்கப்பட்டவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்  மட்டும்தான் காரணம் அவர்தான் சகல அதிகாரம் பொருந்திய ஜனாதிபதியாக இருந்ததே காரணமாகும்.

ஆனால் இன்றய ஜனாதிபதி மைத்ரி அவர்கள் இது சம்மந்தமாக விமர்சிக்கப்படுவதற்கு பதிலாகஊழலைக்  கண்டுபிடித்த உத்தமர் என்று இன்றய ஆட்சியாளர்களால்  போற்றப்படுகின்றார். இது எந்தளவு நியாயமாகும் என்ற கேள்விக்கு யாரும் பதில் சொல்வதாக தெறியவில்லை. தனது அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்தில் நல்லது நடந்தால் ஜனாதிபதிதான் அதற்கு காரணம் என்று உரிமைகோருபவர்கள், நாட்டிலே நடந்த பாரிய நிதி மோசடிக்கும் ஜனாதிபதி பொறுப்பல்ல என்று இந்த ஆட்சியாளர்களினால் காண்பிக்க முனைவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

ஆகவே நாட்டு மக்களின் நேரடி வாக்குகளின் மூலம் தெறிவு செய்யப்பட்ட சகல அதிகாரங்களையும் கைவசம் வைத்துள்ள ஒரு ஜனாதிபதி ஆட்சியில் இருக்கும் போதுஅவருடைய ஆட்சியில் நடக்கும் நல்லது கெட்டதுக்கெல்லாம் அவர்தான் பொறுப்புக்கூற வேண்டும் என்பதே உண்மையாகும்.

அந்தவகையில் இந்த ஊழலை கவணிக்கத் தவறிய ஜனாதிபதி மைத்ரி அவர்கள் தனது தவறை ஒத்துக்கொண்டு அதற்கான மாற்று நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதே நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் ஒரு விடயமாகும்

அதை விட்டு விட்டு தனக்கு ஒன்றும்
தெரியாது என்றுகூறி தப்பிக்க முயல்வது சகல அதிகாரம் பொருந்திய ஜனாதிபதி என்ற அதிகாரத்தை கேள்விக்குட்படுத்தும் செயலாகவே பார்க்கப்படும்

இந்த விடயத்தில்  நேரடியாக மக்களினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியிடமிருந்து மக்களால் எதிர்பார்க்கப்படும் நம்பிக்கையும்,பாதுகாப்பும் கிடைக்காது என்கின்றபோது, இனிமேல் நாட்டின் ஆட்சிக்கட்டிலில் ஏறப்போகும் ஜனாதிபதிமாருக்கும் இந்த நம்பிக்கையீனத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்பதே உண்மையாகும்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை..
ஜனாதிபதி மைத்திரியே நிதிமோசடிக்கு பொறுப்புதாரி..!  ஜனாதிபதி மைத்திரியே நிதிமோசடிக்கு பொறுப்புதாரி..! Reviewed by Madawala News on 1/14/2018 12:00:00 AM Rating: 5