Ad Space Available here

மஹியங்கனை நகைகடையில் நூதனமான முறையில் மோசடியில் ஈடுபட்ட நபர் தொடர்பில் தகவல் தேவை !


நூதனமான முறையில் மோசடியில்  ஈடுபடும் திருட்டு கும்பல் தொடர்பில் மிக அவதானமாக இருக்குமாறு
மஹியங்கனை பகுதியில் நகை வர்த்தகத்தில் ஈடுபடும் சகோதரர் ரஹ்மதுல்லாஹ் பொதுமக்களுக்கு குறிப்பாக வர்த்தகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று மஹியங்கனையில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் மடவளை நியுசுக்கு விளக்கம் அளித்த மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள நகைகடை ஒன்றின் உரிமையாளர் சகோ.ரஹ்மதுல்லாஹ் 

நேற்று 16/01/2018  10:30 மணியளவில் 0776552334 மற்றும் 0728635279 இலக்கங்களில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

தொலைபேசியில் பேசியவர் கொழும்பில் எனது  நகை கடைக்கு நகை விற்பனை செய்யும் மொத்த வியாபாரியின் பெயரை கூறி கதைத்த அதேவேளை தனது மகனின் வாகனம் மஹியங்கனையில் பழுதடைந்துவிட்டதாகவும் அவருக்கு மிக அவசரமாக 25000/= ரூபா கொடுக்குமாறும் குறிப்பிட்டார்

அதனை தொடர்ந்து அங்கு வந்துள்ள சந்தேகத்திற்கு இடமான படத்தில் உள்ள நபர் மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள மேற்குறிப்பிட்ட நகைகடைக்கு வந்துள்ள அதேவேளை தான் கொழும்பு மொத்த வியாபாரியின் மகன் என கூறி பணம் கேட்டுள்ளார்.

குறித்த நபர் தொடர்பில் சந்தேகம் ஏற்பட பணம் எடுத்து வருவதாக நகை கடையின் உள்ளே உள்ள அறைக்கு சென்றுள்ள சகோ. ரஹ்மதுல்லாஹ் கொழும்பு நகைக்கடை உரிமையாளரை தொடர்புகொண்டு கேட்டுள்ள போது அதனை அவர் மறுத்துள்ளதோடு குறித்த கும்பல் இதே பாணியில் இன்னும் பல இடங்களில்  மோசடி செய்துள்ளதாகவும் தெரியப்படுத்தியுள்ளர்.

மேலும் இதே நபர் மஹியங்கனையில் ஹார்ட்வெயார் ஒன்றில் 25000 ரூபாவை இதே பாணியில் சுருட்டி சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதுபோன்று தொலைபேசி அழைப்புகளோ அல்லது புகைப்படத்தில் குறிப்பிடப்பட்ட நபரையோ அடையாளம்  தெரிந்தால் கீழுள்ள  இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்கவும்

Rahmathulla -0775808090
மஹியங்கனை நகைகடையில் நூதனமான முறையில் மோசடியில் ஈடுபட்ட நபர் தொடர்பில் தகவல் தேவை !  மஹியங்கனை நகைகடையில் நூதனமான முறையில் மோசடியில் ஈடுபட்ட நபர் தொடர்பில் தகவல் தேவை ! Reviewed by Madawala News on 1/17/2018 07:58:00 PM Rating: 5