Yahya

இன்று நடைபெறும் அபிவிருத்திகள் யாவும் பிரமுகர்களை நோக்கியே நடைபெறுகின்றன!



-ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் நிந்தவூர் பிரதேச சபை வேட்பாளர் தாஹீர் தெரிவிப்பு-


( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
' அன்று போல் இன்றும் அபிவிருத்திகள் நடைபெறுகின்றன.ஆனால், அவை யாவும் பிரமுகர்களை நோக்கியே இடம் பெறுகின்றன. வாக்களித்த மக்களைச் சென்றடைவதில்லை. பாவம் அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்! பாடுபட்டு வாக்களித்த இளைஞர்களுக்கு தொழில்கள் விற்கப்படுகின்றன!! இன்றும் அவர்கள் முற்பணங்களை வழங்கி விட்டு அவர்களுக்குப் பின்னால் அலைகின்றனர்! அரச வாகனங்கள் குடும்ப உறவினர்களுக்கிடையில் தவறான முறையில் பயன்படுத்தப்படுகின்றன! தலைமைத்துவம் தளம்பல் நிலையிலுள்ளது! எனவே இன்நிலையை மாற்றவேண்டும்' என்று ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் நிந்தவூர் பிரதேச சபை வேட்பாளரும், முன்னாள் பிரதேச சபை தவிசாளருமான எம்.ஏ.எம்.தாஹீர் தெரிவித்தார்.

நிந்தவூர் பிரதேச சபையின் மாந்தோட்ட வட்டாரம்-01ல் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் திருமதி. கே.எம்.ஜெஸீமாவை ஆதரித்து இன்று மாலை கே.எம்.சாக்கீர் தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  
தொடர்ந்தும் வேட்பாளர் தாஹீர் கருத்துத் தெரிவிக்கையில்:-
'மறைந்த மாமனிதர் அஷ்றபின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணத்தால் அன்று கல்முனையிலும், சம்மாந்துறையிலும் இருந்த பெரும் சக்திவாய்ந்த அமைச்சர்களான ஏ.ஆர்.எம்.மன்சூர், எம்.ஏ.எம்.மஜீட் போன்றோரை மக்கள் தோற்கடித்தனர். ஆதனால் அஷ்றப் அந்த மக்களை ஏமாற்றவில்லை. அவர்களால் ( தோற்கடிக்கப்பட்ட அமைச்சர்களால் ) செய்ய முடியாத விடயங்களைச் செய்து கொடுத்தார். மக்கள் அவர் பின்னால் அலையலையாய்த் திரண்டனர். ஆனால் அந்தத் தலைவனின் இடத்தில் இன்றிருக்கும் தலைவனை ஆராய வேண்டியிருக்கிறது. மறைந்த மாமனிதர் அஷ்றபின் மறணத்தில் கூட இன்று சந்தேகம் எழுந்துள்ளது. கடசியில் இருப்பவர்கள் யாரேனும் தலைவனின் மறணத்தில் சம்பந்தப்பட்டிருக்கலாமோ என்று கூட எண்ணத்தோன்றுகிறது. ஏனன்றால் அந்தத்தலைவனை எவராலும் விலை கொடுத்து வாங்க முடியாது என்பதை அரசாங்கமும், வெளிநாட்டுச் சக்திகளும் நன்கு அறிந்திருந்தன! இறக்காம மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை விடயம் இன்று ஒரு வருடத்தைத் தாண்டி விட்டது. அங்கு வேண்டியதெல்லாம் அரங்கற்றமாகி விட்டது. ஆனால் நமது தலைமையால் எதுவுமே செய்ய முடியவில்லை. மக்கள் எல்லா விடயங்களிலும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதிலிருந்து மக்களைக் காப்பாற்றவே நாம் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மூலம் தேர்தலில் குதித்துள்ளோம்' எனத் தெரிவித்தார்.
இன்று நடைபெறும் அபிவிருத்திகள் யாவும் பிரமுகர்களை நோக்கியே நடைபெறுகின்றன!  இன்று நடைபெறும் அபிவிருத்திகள் யாவும் பிரமுகர்களை நோக்கியே நடைபெறுகின்றன! Reviewed by Madawala News on 1/03/2018 08:16:00 AM Rating: 5