Yahya

மன்னார் மடுமாதா ஆலயத்திற்கு அருகில் விகாரை அமைக்கக முயற்சி


மன்னார் மடுமாதா ஆலயத்தின் நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத்தினர் விகாரை ஒன்றை அமைப்பதற்கும்
எடுக்கும் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் செயற்படும் இரண்டு சிவில் சமூக அமைப்புகள் வட மாகாண கல்வி மற்றும் கலாச்சார அமைச்சருக்கு கடிதம் மூலம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
ஆலயத்திற்கு அருகில் சிற்றுாண்டிச்சாலை ஒன்றை நடத்திவரும் இராணுவம் குறித்த இடத்தில் உள்ள மரத்திற்கு கீழ் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த தேவாலயம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் இவ்வாறான செயலை செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும், அது மடு தேவாலயத்திற்கு செய்யும் மிகப் பெரிய அவமரியாதை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மன்னார் மடுமாதா ஆலயத்திற்கு அருகில் விகாரை அமைக்கக முயற்சி  மன்னார் மடுமாதா ஆலயத்திற்கு அருகில் விகாரை அமைக்கக முயற்சி Reviewed by Madawala News on 1/06/2018 07:36:00 AM Rating: 5