Yahya

புதிய தேர்தல் முறையினால் குடும்பங்கள் பிளவு படுவதை தவிர்க்க முடியாதுள்ளது..


மொஹொமட்  ஆஸிக்
உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள புதிய தேர்தல் முறையினால்
குடும்பங்களுக்கு இடையிலேயும் பாரிய பிளவுகள் ஏற்படுவதினால் இத் தேர்தல் முறை உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்று  பூஜாபிட்டிய பிரதேச சபையின்  முன்னாள் எதிர் கட்சி தலைவரும் தற்பொதைய ஐக்கிய தேசிய பட்சியின் வேட்பாளருமான எஸ்.எம்.கலீல் தெரிவித்தார்.

கண்டி கல்ஹின்னையில் வைத்து  ஊடகங்களுக்கு அவர் இது தெடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில் இவ்வாரும் தெரிவித்தார்.

கிராமஙகளில் வாழும் அனைவரும் ஏதோ ஒரு வகையில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்  இத் தேர்தல் முறையின் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் பல கட்சிகளில் தெரதலில் வேட்பாளர்கலாக இறங்கி உள்ளனர். இந் நிலையில் குடும்பங்கள் பிளவு படுவதை தவிர்க்க முடியாதுள்ளது. அரசு உடனடியாக இத் தேர்தலை பின்போட்டாவது இத்தேர்தல் முறையை மாற்றி பழைய தேர்தல் முறைக்கு சமமான புதிய ஒரு தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும இல்லயென்றால்  கிராமங்களில் பாரம்பரியமாக ஒற்றுமையுடன் வாழும் குடும்பங்களின் பிளவுக்கு பொருப்புக் கூற வேண்டி வரும்.
இத் தேர்தல் முறைக்கு பாராளுமன்றத்தில் கைகளை உயர்த்திய அனைத்து கட்சிகளும் இத்தேர்தலில் பாடங்கள் கற்றுக்கொள்ளும்.

கடந்த தேர்தலின் போது  எனக்கு  சிங்கள பௌத்த மக்கள் பாரிய அளவில வாக்களித்தனர்.   இ​த் தேர்தலின் போது  ஒரு சிங்கள் வாக்கை  கூட பெற்றுக்கொள்ள வழி யில்லை அவர்கள் வீடு தேடி வந்து கவலையை தெரிவிக்கின்றனர். இத்தேரத்ல் முறையினால் இது வரை  இல்லாத பேதங்கள் ஏற்படுகின்றன. விருப்பு வாக்குகளினால்  பேதங்கள் ஏற்படுவதாக கூறப்பட்டாலும் அதன் மூலம் ஒரு போதும் குடும்பங்கள் பிளவுபட வில்லை.   இம் முறை மூலம் குடும்பங்கள் பிளவு பட்டு பாரிய சிக்கள்கள் கிராமங்களில் ஏற்படுவதை கானக் கூடியதாக இருக்கின்றது என்றும்  இத் தேர்தல் முறை உடன் மாற்றப்பட்டு  ஒரு உள்ளுராட்சி மன்றத்தின்  வேட்பாளருக்கு  எப் பகுதியில் இருந்தும் வாக்களிக்க கூடிய ஒரு புதிய முறை அறிமுகப்படுத்தி அதன் பிரகாரம் தேர்தலை  நடாத்தப் படவேண்டும் என்றும் அவர் கூறினார். 

2018 01 07 ஆஸிக்
புதிய தேர்தல் முறையினால் குடும்பங்கள் பிளவு படுவதை தவிர்க்க முடியாதுள்ளது..  புதிய தேர்தல் முறையினால் குடும்பங்கள் பிளவு படுவதை தவிர்க்க முடியாதுள்ளது.. Reviewed by Madawala News on 1/07/2018 04:54:00 PM Rating: 5