Yahya

நாங்கள் சொரணையுள்ள சோனகர்களாக இருந்தால் மைத்ரி ரணில் கூட்டணிக்கு எதிராகவே வாக்களிக்க வேண்டும்.இந்த நாட்டின் முஸ்லிம் சமூகம்  சொரணையுள்ள சோனகர்களாக இருந்தால் எதிர்வரும் உள்ளூராட்சி
தேர்தலில் மைத்ரி ரணில்  கூட்டணிக்கு எதிராகவே வாக்களிக்க வேண்டும்.' என்று கட்டுகஸ்தோட்டை காலவத்த கஹல்ல இரட்டைத் தொகுதிக்காக பொதுஜன பெரமுன கட்சி சார்பாக போட்டியிடும் அல் ஹாஜ் அஸார் ஹனிபா காட்டமாக தெரிவித்தார். 

தமது  தொகுதி மக்கள் சந்திப்பொன்றை  ஏற்பாடு செய்து அதில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி கருத்தை தெரிவித்தார். 

இக்கூட்டத்தில் தொடர்ந்தும் கருத்துக் கூறிய அவர்,

' முன்னால் ஜனாதிபதி மஹிந்த அவர்களை நிராகரித்து விட்டு அவசர அவசரமாக எம்மால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதி மைத்ரி மற்றும் ரணில் கூட்டு முஸ்லிம்களுக்கு செய்த துரோகத் தனங்களை ஒரு கணம் மீட்டிப் பார்ப்போம்..?

✓ முஸ்லிம்களை மத கலாசார ரீதியில் நிந்தனை செய்து அப்போதைய ஆளும் அரசாங்கத்திலிருந்து தூரப் படுத்தி  பாரியதொரு சாதியின் மூலமே இந்த நல்லாட்சி கொண்டுவரப் பட்டது. ஆட்சி அமைக்கப்பட்டு நூறுநாள் திட்டத்தில் குறிப்பிட்டது போன்று மத நல்லிணக்க சட்டத்தை கொண்டு வந்து முஸ்லிம்களின் தன்மானத்தை பாதுகாத்தார்களா..?

✓ முன்னாள் ஜனாதிபதி எந்தச் சந்தர்ப்பத்திலும் ஞானசாரவை சந்திப்பதை தவிர்த்து வந்த வேளையில் நல்லாட்சி ஜனாதிபதி மைத்ரி பல தடவைகள் ஞானசாரவை நேரடியாக சந்திப்பதிலும் மத நல்லிணக்க சமய தலைவர்களை ஒன்று கூட்டும் போதும்  ஞானசாரவை அழைத்து அவரை கௌரவித்து முஸ்லிம்களின் மனதை புண்படுத்த வில்லையா ?

✓ பகிரங்க மேடைகளில் பல தடவைகள் ஞானசாரவை நாய் கூண்டில் அடைப்பதாக சூளுரைத்தவர்கள்   ஞானசாரா அவர்களை கைது செய்து நாய்க் கூண்டில் அடைத்தார்களா..?

✓ தாம் ஆட்சிக்கு வந்தவுடன் தம்புள்ள பள்ளிவாசல் பிரச்சினையை உடனடியாக தீர்த்துவிடுவோம் என்று கூறியவர்கள் தம்புள்ள பள்ளிவாசலுக்கு 80பேர்ச் காணியும் அதிலே  புதிய பள்ளிவாசலும் கட்டித்தந்தார்களா.?
✓ அதேபோன்று இனவாத சதிகாரர்களால் திட்டமிட்டு மூடப் பட்ட கிராண்பாஸ் தெஹிவலை மஹியங்கனையில் உள்ள பள்ளிவாசல்களை திறந்து விட உத்தரவிட்டார்களா..?
✓ தேர்தலுக்கு முன் மேடைக்கு மேடை ' தாம் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின்  மத கலாசார சுதந்திரத்திற்கும் உரிமைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவோம்இ மதக் கலவரங்களை ஏற்படுத்த விடமாட்டோம்' என்று வாக்குறுதியளித்தவர்கள்  தங்களுடைய ஆட்சியில் எந்த இனக்கலவரங்களும் ஏற்படாமலிருக்க பாதுகாப்புத் தந்தார்களா..?
✓ இவர்களுடைய ஆட்சியில் எந்த முஸ்லிம்களின் கடைகளும் இனவாதிகளினால் எறிக்கப்படாமலிருக்க பார்த்துக்கொண்டார்களாஇ அப்படித்தான் பல எறிக்கப்பட்டிருந்தாலும் அது 'கரண்சோட்' என்று அவருடைய பொலிசாரை வைத்தே  உலகுக்கு அறிவிக்க வில்லையா ..?
✓ அளுத்கம வன்முறைகளால் பாதிக்கப் பட்டவர்களுக்காக உரிய விசாரணைகளை நடத்தி தீர்வை பெற்றுத்தந்தார்களா ..?.
✓ இவ்வாட்சி மாற்றத்திற்கு முக்கிய காரணங்களுள் ஒன்றான அளுத்கம பிரச்சினையின் சூத்திர தாரிகளை இனம்கண்டு தண்டனை பெற்றுக்கொடுத்தார்..?
✓ மரிச்சிக்கட்டியை வில்பத்து வனாந்திரம் என்று கூறி  கூக்குரலிட்ட இனவாதிகள் பக்கசார்பான துவேஷமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து இ அந்த மக்கள் பரம்பரையாக பாவித்த சொந்தக் காணிகளை அதிவிஷேட வர்த்தமானியின் மூலம் அபகரித்து முப்பது வருட யுத்தத்தால் பாதிக்கப் பட்ட அந்த அப்பாவி மக்களை மேலும் நிர்கதியான நிலைக்கு ஆளாக்க வில்லையா ?

✓ இரக்காமம் மாயக்கல்லில் முஸ்லிம்களின் காணிகளில் இ பௌத்தர்களே இல்லாத பகுதியில் அதுவும் இவ்வரசாங்கத்தின் கபினட் அமைச்சராகவுள்ள தயாகமகேயின் தலைமையில் இனவாதிகள் சிலை வைத்தபோது அதனை அப்படியே அங்கீகரித்து நிரந்தரமாக்கவில்லையா...?
✓ கண்டி லைன் பள்ளிவாசல் டோம் பிரச்சினை வந்தபோது அதனை இனவாதிகளின் கோரிக்கைக்கு அமைய கட்டுமான பணிகளை நிருத்தவில்லையா ...?

✓ வட்டமடு காணிப்  பிரச்சினையை அறிந்து உடனடியாக அந்த விடயத்தில் தலையிட்டு அதனை மீட்டுக்கொடுத்தார்களா...?
✓ ஜனாதிபதி மைத்ரீ அண்மையில் முஸ்லிம் நாடான கட்டாருக்கு விஜயம் செய்து அங்கிருந்து அத்தனை சலுகைகளையும் பெற்று பயணத்தை முடித்து வந்த கையோடு மாடுகளை ஏற்றிச் செல்லுவதற்கு இருந்த தடைபோடவில்லையா .?
✓ காலி கிந்தோட்டை நகரில் நடந்த இனக்கலவரத்தை தனது கட்டுப்பாட்டிலுள்ள பொலிசாரையும் விசேட அதிரடிப்படையினரையும் திட்டமிட்டு  களத்திலிருந்து நேரகாலத்துடன் ஒதுக்கிக் கொண்டு முஸ்லிம்களின் உடமைகளை எரித்து சாம்பலாக்க துனைபோகவில்லையா ...? 

இதனை போலிஸ்மா அதிபர் கூட பகிரங்கமாக  ஒத்துக் கொண்டது ஞாபகமில்லாயா .?
✓ இதுவரை நடந்த அந்த அசம்பாவிதங்களுக்கு எதிராக தமது கண்டனத்தையும் தனது ஆழ்ந்த கவலையையும் தெறிவித்தார்களா..? அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களையும் நஸ்டஈடுகளையும் வழங்கினார்களா..?
இப்படி எவ்வளவோ விடயங்கள் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக செய்துகொண்டு பௌத்த இனவாதிகளை திருப்தி படுத்துவதற்காகவும் பெரும்பனமை பௌத்த வாக்குகளை கவரும் நோக்கில் செயற்படும் இந்த போலி  நல்லாட்சி அரசு நடந்த அனைத்துக்கும் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மீது விரல் நீட்டுகின்றது.

அன்பார்ந்த வாக்காள பொது மக்களே  நன்றாக சிந்தித்து பாருங்கள் முன்னால் ஜனாதிபதி மகிந்தவின் ஆட்சிக்காலத்தின் ஆரம்ப களங்களில் இந் நாட்டில் முஸ்லிம்களுக்கோ சிறும்பான்மை சமூகங்களுக்கோ பிரச்சினைகள் இருக்கவில்லை.

ஆனால் அவரது ஆட்சிக்காலத்தின் இறுதி கட்டத்திலேயே இந்த பிரச்சினைகள் தலைதூக்கின. அதாவது யுத்த வெற்றியின் மூலம் இந் நாட்டு மக்களின் பேராதரவை பெற்றிருந்த மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யுத்த காலத்தில் மேற்கத்திய நாடுகளின் உதவிகளை அல்லது உபதேசங்களை நாடவில்லை. மாறாக முஸ்லிம் நாடுகளுடனும் இடதுசாரி கொள்கையுடைய நாடுகளின் உதவியுடனுமே யுத்தத்தை வெற்றி கொண்டார். 

அத்துடன்  இந்த நாட்டை முன்னேற்றவும் மேலைத்தேய நாடுகளை அவர் நாடவில்லை. மாறாக முஸ்ளிம் நாடுகளுடனேயே அவர் தொடர்புகளை பேணி வந்தார். இதற்கு எதிராகத் தான் அவரது ஆட்சியை மாற்ற முஸ்லிம்களை அவருக்கெதிராக அணிதிரலவைக்க அவரது ஆட்சியின் இறுதி காலத்தில் இவ்வாறனதொரு பிரச்சினையை தோற்றுவித்தார்கள். 

இந்த சதிக்கு உள்நாட்டு சக்திகளாக இருந்த மேற்கினதும் யூத கைகூளிகளினதும் கூட்டாளிகளான ரணில் அணி  துணைபோனது. ஆனால் மிகக் கூடிய விரைவில் இந்த நாட்டில் பெரும்பனமை மக்களின் பேராதரவுடன்  மீண்டும் மஹிந்த ஆட்சி மலர உள்ளது.

ஆகவே அந்த ஆட்சியின் நேரடி தொடர்புகளை பெற்று எமது பிரதேச அபிவிருத்திகளையும்  தேவைகளையும் பெற்றிட நீங்கள் எதிர்வரும் தேர்தலில் தாமரை மொட்டுக்கு உங்கள் வாக்குகளை வழங்கி பொது ஜன ஐக்கிய முன்னணியை வெற்றி பெறச் செய்யுங்கள்.
சூஎங்கள் சமூகம் சார்ந்த முஸ்லிம் தலைவர்களை அடிக்கடி சந்தித்து இன்னும் உங்களுக்கு என்ன தேவையுள்ளது என்று கேட்டு வருகின்றார்..?
நாங்கள் சொரணையுள்ள சோனகர்களாக இருந்தால் மைத்ரி ரணில் கூட்டணிக்கு எதிராகவே வாக்களிக்க வேண்டும்.  நாங்கள் சொரணையுள்ள சோனகர்களாக இருந்தால் மைத்ரி ரணில்  கூட்டணிக்கு எதிராகவே வாக்களிக்க வேண்டும். Reviewed by Madawala News on 1/02/2018 10:21:00 PM Rating: 5