Yahya

மு கா இம்முறை ஐந்து வேவ்வேறு சின்னங்களில் போட்டி !


ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் பல
இடங்களில் இணைந்து போட்டியிடும் அதேவேளை சில இடங்களில் மரச்சின்னம் மற்றும் தராசு சின்னம் இரட்டை இலை ஆகிய சின்னங்களில்  போட்டியிடுகின்றது.

அதே நேரம் அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஒருமித்த முற்போக்கு கூட்டணியில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் பன்விலை பிரதேச சபை முன்னாள் மு உறுப்பினர் திரு.இத்ரீஸ்  ஒருமித்த முற்போக்கு கூட்டணியில் போட்டியிருகிறார்.

இந்த நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கண்டி மாவட்டத்தில் உடுநுவர, அக்குறணை, பாத்ததும்பர, கலகெதர, பஹத ஹேவா ஹேட பிரதேச சபைகள் மற்றும் கம்பளை நகர சபை ஆகியவற்றில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை கட்சித் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் கடந்த 30 ம் திகதி கண்டி  காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடியதாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில் ஒருமித்த முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளரும்  பன்விலை பிரதேச சபை முன்னாள் மு உறுப்பினர் மற்றும் மு கா முக்கியஸ்தர் திரு.இத்ரீஸ்  அவர்களும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மு கா இம்முறை ஐந்து வேவ்வேறு சின்னங்களில் போட்டி !  மு கா இம்முறை ஐந்து வேவ்வேறு சின்னங்களில் போட்டி ! Reviewed by Madawala News on 1/02/2018 09:23:00 AM Rating: 5