Yahya

மிகவும் உயர்ந்த நிலைக்கு தற்போது வந்துள்ளோம்.


மொஹொமட்  ஆஸிக்
எம்முடன் இருந்த ஊழல் பேர்வளிகள் அனைவரும் தற்பொது மொட்டுடன் இனைந்துள்ளனர் என்று
விஷேட பொருப்புடைய அமைச்சர்  கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

கண்டி கலகெதரையில் 31 ம் திகதி மாலை  இடம் பெற்ற வைபவம் ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் இவ்வாரும் கூறினார்.

நாங்கள் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கள் செய்யும் போது இருந்த நிலையில் இருந்து மிகவும் உயர்ந்த நிலைக்கு தற்பொது வந்துள்ளொம். எம்முடன் இருந்த அனைத்து ஊழல் பெர்வளிகளும் தற்பொது மொட்டுடன் இனைந்து அங்கும் பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டுள்ளனர். ஆகவே  ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் தலமையிலான எங்கள் கட்சி பாரிய நம்பிக்கையுடன் இத்தேர்தலுக்கு முகம்கொடுத்துள்ளது.

இப் புதிய தெர்தல் முறையை அறிமுகப்படுத்திய பெருமை எங்களுக்கே  சேரும் 'மற்றைய அனைத்துக் கட்சிகளும் இப் புதிய முறையை எதிர்த்த'து அவர்கள் பழைய முறைப்படியே தேர்தலை நடாத்த கூறினார்கள் . நாங்கள் இளைஞர்களுக்கு இடம் கிடைக்கும் பெண்களுக்கு இடம் கிடைக்கும் இப் புதிய தேர்தல் முறையை  அறிமுகப்படுத்தினோம். அதனால் கூடயவர்களுக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளன.

மத்திய வங்கியில் இடம் பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பிலான  ஆணைக்குழுவின் அறிக்கை தற்பொது ஜனாதிபதியிடம் கிடைக்கப்பெற்றுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் ஆராய்ந்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும் அவர் இங்கு தெரிவித்தார்.
மிகவும் உயர்ந்த நிலைக்கு தற்போது வந்துள்ளோம்.  மிகவும் உயர்ந்த நிலைக்கு தற்போது வந்துள்ளோம். Reviewed by Madawala News on 1/02/2018 12:52:00 AM Rating: 5