Yahya

பிணை முறி விவகாரம் !மஹிந்த அரசாங்கத்தில் நடந்த ஊழலை பிடிப்போம் என்று கூறி கூட்டாக ஆட்சியைக் கைப்பற்றிய
நல்லரசாங்கம் இன்று தங்கள்  ஊழல்களை விசாரணை செய்து தண்டனை கொடுத்துகொள்ளவேண்டிய  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

.தே.கட்சியின் பங்களிப்போடு ஜனாதிபதியான மைத்ரி அவர்கள் பதவியில் அமர்ந்ததன் பின் தனக்கு எதிராக வாக்களித்த ஸ்ரீ..சு.கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்

அதன் பின் நடந்த பாராளுமன்ற தேர்தலில் மைதிரி அவர்கள் சு.கட்சிக்காக நேரடியாக களம் இறங்கி வாக்குகளை பெறமுடியாத நிலையில்,முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு பல போலியான வாக்குறுதிகளைக் கொடுத்து அவரை தேர்தல் களத்தில் இறக்கி பல பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டார்

அதன்பிறகு மஹிந்தவை கறிவேற்பிலை போன்று பயன்படுத்திவிட்டு அவர் மூலமாக கிடைத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலபேரை பதவி ஆசையைக் காட்டி தன்பக்கம் இழுத்துக்கொண்டதும் அல்லாமல்,தன்னை ஆட்சிபீடமேற்ற உதவி செய்த .தே.கட்சியுடன் கூட்டரசாங்கமும் அமைத்துக் கொண்டார், அதோடு  மீண்டும் ரணிலையும் பிரதமாராகவும் நியமித்துக் கொண்டார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மஹிந்த தனிக்குழுவாக இயங்கதுவங்கியது மட்டுமல்ல, ‘
தனிக்கட்சியையும் ஆரம்பித்து எதிர்வரும் ஏதாவது ஒரு தேர்தலில் இவர்களுக்கு தக்கபாடம் படிப்பிக்கவேண்டும் என்றும் காத்துக்கொண்டிருந்தார்

அதற்கு ஏற்றாப்போல் பல இழுபறிகளுக்கு மத்தியில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இப்போது வந்துள்ளது, அதனை தனக்கு சார்பாக பயன்படுத்தி மக்கள் என்னோடுதான் இருக்கின்றார்கள் என்பதை மஹிந்த அணியினர் நிரூபிக்க முயன்றும் வருகின்றனர்.

இந்த நிலையில்தான் மைதிரி அணியினர் மீட்டும் மஹிந்தவை பயன்படுத்தி இந்த தேர்தலில் வெற்றியடைந்துவிடலாம் என்றென்னி பல சுற்று பேச்சுவார்த்தைகளை மஹிந்த குழுவோடு செய்யவதற்கு எவ்வளவோ முயற்ச்சித்தார்கள், அதுவும் கைகூடாத நிலையில் வேறுவழியின்றி மைத்திரி அணியினர் கைச் சின்னத்தில் நாடு முழுவதும் தேர்தலில் களம்காண இறங்கியுள்ளனர்.

அவர்கள் குறிப்பாக இந்த தேர்தலில் தன்னை ஆட்சிபீடமேற்றிய ரணிலையும், தனக்கு எதிராக செயல்பட்ட மஹிந்தவையும் விமர்சித்துத்தான், தங்களுக்கு சார்பான வாக்குககளைப் பெறவேண்டிய நிலைக்கு மைத்திரி அவர்கள் தள்ளப்பட்டுள்ளார். இது எந்தளவு ஜனாதிபதி மைத்ரி அவர்களுக்கு வெற்றியளிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டியுள்ளது.

இந்த நிலையில்தான் மைத்ரியை ஜனாதிபதியாக்கிய .தே.கட்சிக்கு மிகப்பெரிய சவாலான பிணை முறி விடயம் கண்முன்னே படம் மெடுத்து ஆடத்துவங்கி விட்டது. இதனை தனக்கும் தனது கட்சிக்கும் சார்பாக ஜனாதிபதி மைத்ரி பயன்படுத்தப்போகின்றாரா? அல்லது தன்னை ஜனதிபதியாக்கி அழகுபார்த்த பிரதமர் ரணிலைப் பாதுகாக்கபோகின்றாரா? என்ற ஆயிரம் வோட்ஸ் கேள்விகள் தொக்கி நிற்கின்றன.

என்னதான் இருந்தாலும், தன்னை ஜனாதிபதியாக்கிய .தே.கட்சிக்கு பாதகத்தை ஏற்படுத்திவிட்டு, தனக்கு எதிர்த்து வாக்களித்த சு.கட்சியின் தலைவராக இருந்துகொண்டு அதற்கு சார்பாக ஜனாதிபதி நடந்துகொள்ள முற்படுவாரேயானால் அது மாபெரிய துரோகமாகத்தான் .தே.கட்சியினரால் பார்க்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்கமுடியாது.

ஜனாதிபதி மைத்ரி அவர்கள் .தே.கட்சியினருக்குத்தான் விசுவாசமாகதான்  இருக்கவேண்டும். அவர்களின் கட்சியினருக்கே அவர் ஆதரவாக பிரச்சாரம் செய்யவும் வேண்டும் இதுதான் நியாயமும் கூட, ஆனால் மஹிந்த என்ற ஒரு பெரும் சக்தியை வீழ்த்தவேண்டும் என்ற என்னத்தில் செயல்பட்டவர்களுக்கு, எதிர்காலத்தில் இப்படியான சிக்கல்கள் எல்லாம் வரப்போகின்றது என்பதை அவர்கள் இருபேரும்  பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இப்போது இடியப்ப சிக்கல் போன்று இவர்கள் இருவரும் மாட்டிக்கொண்டார்கள் என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாகும்.

இதன் விளைவாக "ஆற்றைக் கடக்கும்வரை அண்ணன் தம்பி ஆற்றைக் கடந்ததன் பின் நீயாரோ நான் யாரோ" என்ற பழமொழி போன்று மைத்ரி அவர்கள் நடந்து கொள்ளும் நிலைக்கு நிலைமை மாறிவிட்டது. இதன் காரணமாக பிணைமுறி விடயமானது பிரதமர் ரணிலையும், அவரது கட்சியினரையும் கடுமையாக பாதிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனலாம். ஆனால் அவசரகாரனுக்கு புத்தி மட்டம் என்பதுபோல் மஹிந்தவை வீழ்த்தவேண்டும் என்ற அவசரத்தில் .தே.கட்சியினர் நடந்து கொண்டவிதமானது பாரிய பின்னடைவை அவர்களுக்கு  இப்போதுதான் கொண்டுவரப்போகின்றது என்பதே உண்மையாகும்.

ஆகவே ஜனாதிபதி மைத்ரி அவர்கள் இந்த பிணைமுறி விடயத்தை வைத்துக்கொண்டுசெஞ்சோற்றுக்கடன் தீர்ப்பாரா? அல்லது தன்னை வாழவைத்த .தே.கட்சிக்கு துரோகம் செய்வாரா? என்பதை சில நாட்களில் வெளிப்பட்டுவிடும் என்பதே உண்மையாகும். அந்த நேரம் யாருடைய தலை உருலப்போகின்றது, யாருடைய தலையில் கிரீடம் ஏறப்போகின்றது என்பது மிகச் சீக்கிரமே தெறிந்து விடும்

என்ன நடக்கப் போகின்றது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்... 

வெற்றியடைப்போவது சதியா? விதியா? இதுதான் இன்றைய கேள்வி..!

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.
பிணை முறி விவகாரம் !  பிணை முறி விவகாரம் !  Reviewed by Madawala News on 1/03/2018 11:37:00 AM Rating: 5