Yahya

ரவுப் ஹக்கிம் தேசிய அரசியலில் எடுத்த அத்தனை தீர்மானங்களும் தோல்வியிலே முடிவடைந்துள்ளது


றிசாத் காதர்
மு.கா.கட்சியினுடைய தலைவர் ரவுப் ஹக்கிம்  தேசிய அரசியலில் எடுத்த அத்தனை தீர்மானங்களும்
தோல்வியிலே முடிவடைந்துள்ளது என .ஜி.எம்.தௌபீக் தெரிவிப்பு. உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 2017.01.07ஆந் திகதி அட்டாளைச்சேனை பிரதான வீதியில் ,இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டே மேற்படி கருத்தினை அவர் தெரிவித்தார்.

இதில் கலந்துகொண்ட தேசிய காங்கிரஸ் கட்சியின் அக்கரைப்பற்று மாநகர சபைக்கான பட்டியல் வேட்பாளர் .ஜி.எம் தௌபீக் தொடர்ந்து தெரிவிக்கையில்,  

மு.கா.கட்சியினுடைய தலைவர் மர்ஹ_ம் அஷ்ரப் மரணிக்கும் வரை அவருடைய தேசிய அரசியல் சிந்தனைகள் அத்தனையும் வெற்றியடைந்திருந்தது. ஆனால் தற்போதிருக்கின்ற தலைவருடைய தேசிய அரசியல் சிந்தனைகள் அத்தனையுமே தோல்வியில் முடிவடைந்திருப்பதனை எம்மால் கண்டுகொள்ள முடிகின்றது.

மு.கா.கட்சியின் ஸ்தாபகத் தலைவருடைய தேசிய அரசியல் சிந்தனையே இலங்கை அரசியலில் முஸ்லிம்களைதீர்மானிக்கும் சக்தியாகமாற்றியிருந்தது. 1988ஆம் ஆண்டைய முதலாவது மாகாண சபைத் தேர்தலில் அவருடைய சிந்தனை வெற்றிபெற்றிருந்தது. ​  அதே ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணசிங்க பிரேமதாசவை ஆதரிப்பதா? ஸ்ரீரிமாவே பண்டாரநாயக்காவை ஆதரிப்பதா என முழு நாடுமே தத்தளித்துக்கொண்டிருந்தது. மு.காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹ_ம் அஷ்ரபின் தேசிய சிந்தனை ரணசிங்க பிரேமதாசவை ஆதரிப்பது என தீர்மானிக்கப்பட்டு, ரணசிங்க பிரேமதாசா வெற்றியும் கண்டார். மர்ஹ_ம் அஷ்ரபுடைய ,ரண்டாவது தேசிய சிந்தனை வெற்றியடைந்தது. அதன் பின்னர் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலே பெருந்தலைவருடைய சிந்தனை வெற்றியடைந்தது. 1994ஆம் ஆண்டு ,டம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தலிலே அவருடைய தேசிய சிந்தனை வெற்றி பெற்றது. அதே ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலிலே சந்திரிக்கா அம்மையாரை ஆதரிப்பதா, ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதா என்ற நிலை ஏற்பட்ட போது சந்திரிக்கா அம்மையாரை ஆதரித்து ரணில் விக்கிரமசிங்க  மேற்கத்தியத்தின் கைப்பொம்பை என அறிவித்த தேசிய சிந்தனை வெற்றியடைந்தது.

1999ஆம் ஆண்டு அமெரிக்காவும், டயஸ்போராவும் ரணிலை எப்படியாவது மீண்டும் ஜனாதிபதியாக கொண்டுவர துடித்தபோது மேற்கத்தைய வலைக்குள் முஸ்லிம்கள் செல்லமுடியாது என மிகப்பகிரங்கமாக அறிவித்து சந்திரிக்கா அம்மையாரை மீண்டும் ஜனாதிபதியாக ஆட்சிபீடமேற்றியிரந்தார். அதிலும் பெருந்தலைவருடைய தேசிய சிந்தனை வெற்றியடைந்திருந்தது.

பெருந்தலைவருடைய மரணத்தின் பின்னர் மு.கா.கட்சி சந்தித்த எந்தத் தேர்தலில் அந்தக்கட்சிக்குரிய சிந்தனையில் நின்று வெற்றிபெற்றது. தற்போதுள்ள மு.கா. தலைவருடைய தேசிய அரசியல் சிந்தனைகள் எவ்வாறு அமையப்பெற்றிருந்தது. ,தனை வாக்காளர்களாகிய நீங்கள் அத்தனைபேரும் சிந்திக்க வேண்டும்.

2001ஆம் ஆண்டு ,டம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலிலே மேற்கத்தேய சிந்தனையின் எடுகோலாவிருந்த ரணிலை ஆதரித்து அவரை ஆட்சிக்கு கொண்டுவந்தார். சந்திரிக்காவின் ஆட்சியை கவிழ்க்க முனைந்தார். அதனால் வெறும் ,ரண்டு வருடங்களோடு அந்த ஆட்சி முடிவுக்கு வந்தது. ரணில் விக்;கிரசிங்கவால் ஆளமுடியாமல் போனது. 2005ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவா, மகிந்த ராஜபக்ஷவா என்கிற நிலை வந்தபோது ரவுப் ஹக்கீம் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தார். ரணில் தோற்கடிக்கப்பட்டார். ஹக்கீமுடை, இரண்டாவது தேசிய சிந்தனை தோல்வியுற்றது.

2010ஆம் ஆண்டு புலிகளை முடித்த கையோடு மகிந்தவுக்கான ஆதரவுத் தளம் மேலோங்கியிருந்து. சர்வதேசம் மிகப்பொரும் வரவேற்பினை வழங்கியிருந்த காலம் அது. உலகிலே மிகப்பெரும் வலுவுடன் கட்டமைக்கப்பட்டிருந்த பயங்கரவாத அமைப்பு புலிகளுடையது. அந்த அமைப்பை மொத்தமாக துடைததெறிந்த ஒருவர் மஹிந்த ராஜபக்ஷ. அதற்காக அவருக்கான ஆதரவுத் தளம் இலங்கையின் நாலாபுறங்களிலும் பல்கிப் பெருகியிருந்தது. அதனையும் விட கிழக்கு மாகாணத்தை புலிகளினுடைய கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து நிம்மதிப்பெருமூச்சு விடுவதுக்கும், 70ஆயிரம் விவசாய நிலங்களை மீட்டெடுக்கவும் வழிசமைத்திருந்தார் மஹிந்த. வடமாகாணத்தில் புலிகளின் பாதுகாப்பு அரண்களாகவிருந்த பள்ளிவாசல்களை அழ்ழாஹ்வை வணங்கும் ,டங்காளக மாற்ற சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்தார். இவ்வாறு புலிகளின் வாய்க்குள்ளே வாழ்ந்த முஸ்லிம்களை மீட்ட கையோடு மகிந்த தேர்தலுக்கு வந்தார். இந்த நாட்டுக்கு நிம்மிதியை ஏற்படுத்திய ..சு.கூட்டமைப்பை ஆதரிக்கவில்லை. ஆனால் ஐக்கிய தேசியக்கட்சியும், ரணில் விக்கிரிமசிங்கவும் கொண்டு வந்த பொன்சேகாவை ரவுப் ஹக்கீம் ஆதரித்தார். அந்தச் சிந்தனையும் தோல்வியுற்றது. முஸ்லிம்களைப் பற்றி கவலைப்படவில்லை. புலிகளை அழித்து முஸ்லிம் மக்களை காப்பாற்றி நிம்மதியாக வாழ வழி ஏற்படுத்தியதைப்பற்றி சிந்திக்கவில்லை.

2015ஆம் ஆண்டு மகிந்தவின் பேரினவாத சிந்தனை வலுப்பெற்றிருந்தது. யாரை ஆதரிப்பது என தீர்மானம் எடுக்க முடியாமல் தடுமாறியிருந்தார். மக்கள் முடிவெடுத்துக்கொண்டனர். ஆனால் முஸ்லிம்களை மனச்சாட்சிப்படி வாக்காளிக்குமாறு சொல்லியிருந்தார். முஸ்லிம்களை மனச்சாட்சிப் படி வாக்களிக்க சொல்வதுக்கா முஸ்லிம் காங்கிரை பெருந்தலைவர் மர்ஹ_ம் அஷ்ரப் உருவாக்கியிருந்தார். அதற்காகவா ,ந்த கட்சியை ஆதரித்தோம். ,ன்று மு.கா.கட்சி ஐக்கிய தேசியக் கட்சியில் வந்திருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. 2010ஆம் ஆண்டே ,ந்தக் கட்சியை ஜக்கிய தேசியக் கட்சியுடன்; ,ணைத்த ,ல்லாமலாக்கும் பணியை செவ்வனே செய்யத் தொடங்கிவிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் தற்போது தேர்தல் கேட்பதுக்கு மு.கா. தலைவர் ரவுப் ஹக்கிமினால் சொல்லப்படும் நியாயங்கள் அத்தனையும் நிராகரிக்கப்படவேண்டியதுவே. ஏனெனில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இதே யானைச் சின்னத்தில் போட்டியிட்டு 03நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றிருந்தார். அம்பாரை மாவட்டத்துக்கான அபிவிருத்திக்குழுவின் தலைவர் பதவி யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதனை சிந்தித்துபார்க்க வேண்டும்நியாய, தர்மங்களின் அடிப்படையில் மூன்று நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்ற கட்சிக்கல்லவா கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்ஆனால் அந்தப்பதவி .தே.கட்சிக்கு தனது பொருளாதாரத்தை வாரி இறைக்கும் தயாகமகேவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த மு.கா.கட்சித் தலைமையால் எதனை செய்துவிடமுடியும். யார் இந்த தயாகமகே எந்த தயரத்னாவை பெருந்தலைவர் அஷ்ரப் அரசியல் ரீதியாக வலுவிழக்கச் செய்தாரோ அந்த தயரத்னாவுடைய சிந்தனையை மீள கையகப்படுத்திக்கொண்டு அரசியலுக்கு வந்திருக்கும் ஒருவர். இவரினால் இன்று முஸ்லிம் பகுதிகளுக்கு சொந்தமான விவசாயக் காணிகளுக்கான நீரிணை வழங்குவதுக்கு தடைவிதித்துக்கொண்டிக்கின்றார். சிங்களப் பிரதேசங்களிலுள்ள மிகக் குறுகியளவிலான கரும்புக் காணிகளுக்கு நீர்வழங்கப்பட்டதன் பின்பே முஸ்லிம் பகுதிகளுக்கு வழங்க முடியும் என கூறுகின்றார். தற்போது முஸ்லிம்களின் விவசாய காணிகள் விளைச்சலுக்கு தயாராகும் காலப்பகுதி. இந்தக்காப்பகுதியில் நீர் கிடைக்காமல் வேறுநாட்களில் கிடைத்து எந்தப்பலனும் கிடைக்கப்பேவதில்லை. இவ்வாறான ஒருவர் அபிவிருத்திக் குழுவின் தலைவராக இருக்க, அந்தக்  கட்சியிலே உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு போட்டியிடுகின்றனர். வெட்கமில்லையா என்று கேட்கே விரும்புகின்றேன்.

ஆகவே அட்டாளைச்சேனை பிரதேச மக்களே, இந்தத் தேர்தல் மிக முக்கியமான தேர்தல். தேசிய அரசியலுக்கு ஒரு செய்தியை சொல்லவிருக்கின்ற தேர்தல்.மேற்கத்தேய சிந்தனை கொண்ட, முஸ்லிம்களை இந்த நாட்டினை அரசியல் ரீதியாக  அழிவுப் பாதைக்கு கொண்டு செல்ல காத்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடித்தல் வேண்டும்.

.தே.கட்சியால் கொண்டுவரப்படவுள்ள பாதகமான அரசியலமைப்பு மாற்றம், நாடாளுமன்ற தேர்தல் முறை மாற்றம் மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு போன்ற விடயங்களை இல்லாமல் செய்தல் அவசியம். அதற்கு  ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் கரங்களை பலப்படுத்தவேண்டும். அதனால் வடக்கு கிழக்கு இணைப்புக்கு இந்த மக்கள் எதிரானவர்கள் என்கிற செய்தியை சர்வதேசத்துக்கு உரத்துச் சொல்லுதல் வேண்டும். ,ந்தப் பிராந்தியத்தின் அரசியல் ஞானி முன்னாள் அமைச்சர்  .எல்.எம். அதாஉல்லா தலைதாங்கும் கட்சியான தேசிய காங்கிரஸ் கட்சியின் குதிரை சின்னத்தக்கு வாக்களித்து அட்டாளைச்சேனை பிரதேச சபை மாத்திரமன்றி, வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளுராட்சி சபைகளை வெற்றிபெறச் செய்வது நம் ஒவ்வொருவர் மீதுள்ள மிகப்பெரும் பொறுப்பாகும் என்றார்.
ரவுப் ஹக்கிம் தேசிய அரசியலில் எடுத்த அத்தனை தீர்மானங்களும் தோல்வியிலே முடிவடைந்துள்ளது ரவுப் ஹக்கிம்  தேசிய அரசியலில் எடுத்த அத்தனை தீர்மானங்களும் தோல்வியிலே முடிவடைந்துள்ளது Reviewed by Madawala News on 1/11/2018 08:05:00 PM Rating: 5