Yahya

சட்டமுதுமானிக்கு சட்டம் தெரியாமல் போனது எவ்வாறு ?


சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தினரை தேர்தல் ஆணையாளர் கலைத்து விடப்போகின்றார்
என்று இறக்காமத்தில் வைத்து பகிரங்கமாகவே பேசியிருந்தார் மு.காங்கிரஸின் தலைவர் ஹக்கீம்.இந்த பேச்சின் வீடியோ பரவலாக இணையதளங்களில் பதிவேற்றப்பட்டிருந்ததுஇதன் காரணமாக மக்கள் மத்தியிலே இது விடயமாக வாதப்பிரதிவாதங்களும் ஏற்பட்டிருந்தது

இது மு.காங்கிரஸ் தலைவரின்  அறியாமையின் வெளிப்பாடா? அல்லது சின்னப்பிள்ளைகளை மிரட்டுவது போன்ற மிரட்டலா? என்று என்னுமளவுக்கு இந்த செய்தி பரவலாக பேசப்பட்டிருந்த போது நான் கடந்த 08 திகதி இது பிழையான தகவல் என்று பதிவேற்றம் செய்திருந்தேன்.அதற்கு ஆதாரமாக தேர்தல் ஆணையாளர் அவர்களும் இன்று அதற்கு மறுப்புத் தெறிவித்துள்ளார்.

விடயத்துக்கு வருவோம்,

ஒரு மத ஸ்தாபனம் தேர்தல் முறைமைக்கு மாற்றமாக அந்த நிர்வாகத்தினால் நிர்வகிக்கப்படுகின்றது என்று தேர்தல் ஆணையாளர் ஊர்ஜிதமாக அறிந்து கொண்டார் என்று சொன்னால், அந்த பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு அப்படி நடந்து கொள்ளவேண்டாம் என்று அறிவுருத்தல் வழங்குவார். மாறாக அந்த நிர்வாகத்தையே கலைத்து விடுங்கள் என்று ஒருகாலமும் கூறமாட்டார் என்பது படியாத பாமரமகனுக்கும் விளங்கும் ஒரு விடயமாகும்.

அதுபோக நாட்டில்லுள்ள ஏதோ ஒரு  பள்ளிவாசல் வக்வு சட்டத்துக்கு மாறாக தேர்தல் வேலைகளிலோ, அல்லது வேறு பொது விடயங்களிலோ ஈடுபடுகின்றார்கள் என்று வக்பு சபைக்கு அறிவிக்கப்பட்டால், வக்பு சபை அதனை விசாரித்ததன் பின் முதலில் அந்த நிர்வாகத்தினருக்கு கடிதம் மூலம் அறிவுருத்தல் வழங்குவார்கள்

அப்படியும் அந்த பள்ளிவாசல் நிர்வாகத்தினர் அவர்களின் பேச்சைக் கேட்காமல் செயல்படுவார்களேயானால் வக்பு சபை ஒருகட்டளை மூலம் அவர்களின் செயல்பாட்டை தடைசெய்யும். அது ஒரு ஒருதலைப்பட்சமான  கட்டளையாக இருப்பதாக அந்த பள்ளிநிர்வாகம் கருதினால்அந்தக்கட்டளைக்கு எதிராக "ரிபியுனல்" கோர்ட்டில் அப்பீல் செய்து இந்தக்கட்டளையை ரத்தாக்குமாறு வாதாடக்கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு

அந்த "ரிபியுனல்"அப்பில் கோர்ட் விசாரித்து தீர்ப்பு சொல்ல சில வருடங்களாவது செல்லும், அப்படித்தான் அவர்களுக்கு மாறாக "ரிபியுனல்" கோர்ட்டில் தீர்ப்பு கிடைத்தாலும், அந்த தீர்ப்பையும் எதிர்த்து சுப்ரீம் கோர்ட் அல்லது அப்பீல் கோர்ட் செல்லவும் அவர்களுக்கு வசதிகளும் வாய்ப்புக்களும் உண்டு.
இதன்படி  பார்க்கபோனால் இதற்க்கெல்லாம் பல ஆண்டுகள் பிடிக்கும். அதுவரை அந்த நிர்வாகத்தினரே பதவியிலும் இருப்பார்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.( இந்த விடயத்தில் பலவருடங்களாக நான் வக்பு சபைக்கும், "ரிபியுனல்" கோர்ட்டுக்கும் அழைந்து கொண்டிருப்பவன் என்ற காரணத்தினால் சொல்லுகிறேன்).

ஆகவே தலைவர் ஹக்கீம் அவர்கள் குறிப்பிடுவதைப் போன்று பள்ளிநிர்வாகத்தினரை இலேசாக  கலைத்து விடமுடியாது.இது ஒரு மிரட்டல் மட்டுமல்ல சட்டம் தெறிந்த நாங்கள் சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற தப்பான அபிப்பிராயமே இவர் இப்படி கூறியதற்கு காரணமாகும் என்று என்னத்தோன்றுகிறது.

அதே நேரம் தேர்தல் ஆணையாளர் அவர்களும் இதற்கு தெளிவான பதிலையும் இன்று 09ம் திகதியே தெறிவித்துள்ளார்.கெப்பிட்டல் எப்.எம்.ரேடியோவின் செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்காணலில் போது இவ்வாறு தெறிவித்துள்ளார்

சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தை தேர்தல் ஆணையாளர் கலைக்கவுள்ளார் என்று அண்மையில் இறக்காமத்தில் வைத்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அவர்கள் கூறி கருத்து தவரானது மட்டுமல்ல, சாய்ந்தமருது சயேற்ச்சை குழு வெற்றிபெற்றாலும் அவர்கள் சபையில் அமரமுடியாது என்று கூறிய கூற்றையும் தேர்தல் ஆணையாளர் அவர்கள் தெளிவாகவே மறுத்துள்ளார். ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட எவரையும் தடுக்கமுடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

ஆகவே. இந்தக் கருத்தின் ஊடாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாமர மக்களை ஏமாற்றும் பேச்சுக்களை பேசுகின்றார் என்பது தெளிவாகின்றது. சட்டம் தெரிந்து பேசுகின்றாரா? அல்லது தெறியாமல் பேசுகின்றாரா? என்பது புரியாத புதிராகவே இருக்கின்றது. ஒரு சமூகத்தை வழிநடத்தும் ஒரு தலைவன் சட்ட நுணுக்கங்களை அறிந்து செயல்படுவார் என்றுதான் மக்கள் அவர்களை நம்பி வாக்களிக்கின்றார்கள்.ஆனால் இப்படியான தவறுகளைவிடும்  இவர்களின் செயல்பாடுகள், இவர்களின் திறமையின் மீது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என்பதில் சந்தேகமே கொள்ளத்தேவையில்லை என்பதே எங்களின் கருத்தாகும். மக்களும் இதனைக் கருத்தில் கொண்டு செயல்படாதவரை இவர்களின் மூலம் சமூகத்துக்கு நஸ்டமே தவிர லாபம் கிடையாது என்பதுதான் உண்மையுமாகும்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.
சட்டமுதுமானிக்கு சட்டம் தெரியாமல் போனது எவ்வாறு ?  சட்டமுதுமானிக்கு சட்டம் தெரியாமல் போனது எவ்வாறு ? Reviewed by Madawala News on 1/09/2018 12:43:00 PM Rating: 5