Yahya

கடந்த அரசாங்கத்தின் கொலை காரர்களையும் திருடர்களையும் உடனடியாக பிடித்து உள்ளே போடவேண்டும் ..


இனிமேலும் பொறுமைகாக்க  முடியாது பழைய திருடர்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.


இன்று நன்பகல் கெம்பல் மைதானத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மாநாட்டில் மேலும் உரையாற்றிய அவர் கூறியதாவது,


இன்று முறி மோசடி பற்றி பழைய திருடர்கள் கதைக்கிறார்கள் அவர்களுக்கு இதை கதைக்க என்ன அருகதை இருக்கிறது.


நாம் இந்த மூன்று வருடங்களில் என்ன செய்துள்ளோமென எதிர்கட்சிகள் கேட்கிறான்.நாம் வேலை செய்துள்ளோம் ஆனால் அதை விளம்பரம் செய்யவில்லை.


முறி மோசடியை விசாரிக்க ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது இதற்கு முன்னர் அரசங்கத்தில் இருந்த அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எந்த அரசுக்கு முதுகெழும்பு இருந்தது.


இந்த அரசாங்கத்தின் காலத்தை விட முன்னைய அரசாங்கத்தின் காலத்திலே அதிகமாக ஊழல் நடந்துள்ள்தாக முறி மோசடி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பிரதமர் இனிமேலும் காலம் தாழ்த்த கூடாது. கடந்த கால ஊழல்கள் மற்றும் கொலைகளை உடனடியாக விசாரிக்க வேண்டும்.அதற்க்கு பின்னர் இவர்கள் வெலிகடையின் அமைச்சரவை அமைப்பார்கள்.


வெலிகடை சிறையில் இருக்க வேண்டியவர்கள் முறி தொடர்பில் கதைக்கிறார்கள்முறி மோசடியாம் கிழவியின் சேலை முறி” 

கடந்த அரசாங்கத்தின் கொலை காரர்களையும் திருடர்களையும் உடனடியாக பிடித்து உள்ளே போடவேண்டும் .. கடந்த அரசாங்கத்தின் கொலை காரர்களையும் திருடர்களையும் உடனடியாக பிடித்து உள்ளே போடவேண்டும் .. Reviewed by Madawala News on 1/07/2018 10:45:00 PM Rating: 5