Yahya

கோடீஸ்வர வர்த்தகர் அஜித் (பூரு மெண்டிஸ்) படுகொலை... சந்தேகநபர்கள் கைதுடன் வெளியானது திடுக்கிடும் க்ரைம் ஸ்டோரி.


(எம்.எப்.எம்.பசீர்)

கடந்த வருடத்தின் இறுதி நாளுக்கு முதல் நாள். இரவு 8.00 மணியைக் கடந்திருக்கும்.
கடவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரன் முத்துகல பகுதியில் மயான அமைதியைக் குலைக்கும் வண்ணம் ஒரே ஒரு துப்பாக்கி வேட்டுச் சத்தம். அதனைத் தொடர்ந்து இரு பெண்களின் ஒப்பாரி.

உடனடியாக அந்த வீட்டின் முன்னால் பிரதேச வாசிகள் கூடிய போது தான் தெரியவந்தது, பிரதேசத்தின் வட்டிக்கு பணம் வழங்கும் வர்த்தகரான ' பூரு மெண்டிஸ்' என பிரதேசத்தில் உள்ள வர்களால் அறியப்படும் 37 வயது ரணவக லியனகே அஜித் புஷ்பகுமாரவேதுப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகியுள்ளார் என்பது. உடனடியாக விடயம் கடவத்தை பொலி ஸாருக்கு அறிவிக்கப்படவே கடவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பெருமாள் பத்மநா தனின் உத்தரவுக்கு அமைய குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோ தகர் தனஞ்ஜய ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் ஸ்தலத்துக்கு சென்று விசாரணை களை ஆரம்பித்தனர்.


பொலிஸார் செல்லும் போதும் பூரு மெண்டிஸின் சடலம் ராகம வைத்தியசா லைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.

இந் நிலையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பூரு மெண்டிஸின் வீட்டில் உள்ள சி.சி.ரி.வி. மீது பொலிஸார் அவதானம் செலுத்தினர்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பூரு மெண்டிஸுடன் கதைப்பதும் அவர் பிரதான வாயில் பகுதிக்கு வந்த வேளை அவர் மீது ஒரே ஒரு துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டு தப்பிச் செல்வதும் பதிவாகயிருந்தது.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் முகத்தை முழுமையாக மறைத் திருந்ததால் அவர்களது அடையாளம் கூட சரியாக பொலிஸாரால் கணிக்க முடி யவில்லை.


இந் நிலையில் இந்த விடயங்கள் அனைத்தும் கடவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பெருமாள் பத்மநாதனினால் கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத் தியட்சகர் முதித்த புசல்லவவுக்கும் மேல் மாகாணத்தின் வடக்கு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவுக்கும்
கூறப்பட்டது.

இந்நிலையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவின் ஆலோச னைக்கு அமைய , கடவத்தை பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு, தனது நேரடி கட் டுப்பாட்டின் கீழ் உள்ள மேல் மாகாணத்தின் வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயந்த தஹனக தலைமையிலான குழுவினரிடமும் ஒப்படைக்கப்பட்டது.


பொலிஸ் உயர் அதிகாரிகளான அஜித் ரோஹன, முதித்த புசல்ல ஆகியோர் துப் பாக்கிச் சூடு தொடர்பிலான விடயங்களையும் ஸ்தல ஆய்வு முடிவுகளையும் விசாரணையாளர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியிருந்தனர்.


துப்பாக்கிதாரி ஒரே ஒரு தோட்டாவை மட்டுமே சூட்டுக்கு பயன்படுத்துவதும் அதுவும் தலைப்பகுதியை நோக்கி குறி தவறாமல், சூட்டுக்கு உள்ளாகும் நபர் மரணிக்கும் வண்ணமும் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை முன்னெடுத்திருப்பது, ஒப்பந்த அடிப்படையில் செய்யப்பட்ட கொலையாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர்களை வரவைத்தது.

 இந் நிலையில் பூரு மெண்டிஸுக்கு உள்ள எதிரிகள், அவரோடு பிரச்சினைப் பட்டவர்கள் என அனைவர் மீதும் ஒரு கண் வைத்த பொலிஸார் சந்தேகிக்கப்படும் நபர்களை அவர்களது தொலைபேசி தரவுக் கொத்து பகுப்பாய்வுகள், நவீன தொழில்நுட் பத்தின் உதவியுடன் பின் தொடர்ந்து மேல திக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன் போது பொலிஸாரின் அவதானிப்பின் கீழ் பல விடயங்கள் வந்தன. குறிப்பாக பூரு மெண்டிஸ், தனது சட்டபூர்வமான மனைவியை விட்டு விலகி தனது கள்ளக் காதலியுடனேயே கடவத்தையில் வசித்து வந்துள்ளார்.

துப்பாக்கிச் - சூடு நடக்கும் போதும் கள்ளக்காத லியும், பூரு மெண்டிஸின் தாயாரும் கூட வீட்டில் இருந்துள்ளனர்.

 முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றிராத பூரு மெண்டிஸ் கள்ளக் காதலியை இரகசிய திருமணமும் செய்திருந்தான்.

எனினும் அது சட்டத்தின் முன் செல்லாது. இந் நிலையில் அதனை எதிர்த்து கள்ளக் காதலியின் ஊரான நிக்கவரட்டி நீதிவான் நீதிமன்றில் சட்ட பூர்வமான மனைவி, தனது கணவனை சட்டவிரோத மாக திருமணம் செய்ததாக அவளுக்கு எதி ராக வழக்கொன்றும் தாக்கல் செய்திருந்தார்.

 அதன் தீர்ப்பும் அடுத்த மாதத்துக்குள் வழங் கப்படவிருந்தது. அதன்படி அந்த தீர்ப்பில் சட்ட ரீதியி லான மனைவிக்கு விவாகரத்து கிடைக்கவும் வாய்ப்புக்கள் அதிகம் இருந்தன.

 இதனைவிட பூரு மெண் டிஸின் சட்ட ரீதியிலான திருமணம் ஊடாக கிடைக்கப் பெற்ற மகளுக்கு தற்போது 14 வயதாகிற நிலையில் அவளை தன்னோடு வைத்து பராமரிக்க வேண்டும் என்கிற எண்ணமும் பூரு மெண்டிஸுக்கு இருந்தது.

இதனால் அவன் தனது மனைவியிடம் இருந்து மகளை பிரித்தெடுக்க கிரிமினலாக யோசித்தான்.

அதன்படி தனது மனைவியின் கள்ளக்காதலன் தனது மகளை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக கூறி மகளுடன் சென்று முறையிட்டான்.

அதன்படி அவனது மனைவியையும் கள்ளக் காதலனையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

எவ்வா றாயினும் பின்னர் அவ்வாறு துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை என்பது தெரியவந்தி ருந்தது.

இந் நிலையில் கள்ளக் காதலன், கள்ளக் காதலி விவகாரம் காரணமாக பிரிந்திருக்கும் கணவன் மனைவி இடையே இடம்பெறும் இந்த போர் பொலிஸாரின் தீவிர கவனத்தை ஈர்த்தது.

அதன்படியே விசாரணைகளை முன்னெடுக்கும் போது பல தடயங்கள் சிக் கின. 

இந் நிலையில், மத்துகம பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் அவசரமாக சிங்கப்பூர் செல்ல எத்தனிப்பது தொடர்பில் தகவல் பொலிஸாருக்கு கிடைக்கவே, ஏற்கனவே சேகரிக்கப்பட்டிருந்த தகவல்களின் படி அவர்கள், பூரு மெண்டிஸின் சட்ட பூர்வ மனைவியின் கள்ளக் காதலுடன் அடிக்கடி தொடர்பில் இருந்தவர்கள் என்பதையும் வைத்து பொலிஸா ருக்கு சந்தேகம் எழுந்தது.


இதனால் அவசரமாக செயற் பட்ட பேலியகொடையில் உள்ள மேல் மாகாணத்தின் வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகா ரிகள், அவ்விருவரையும் பின் தொடர்ந்து, சிங்கப் பூர் செல்ல 24 மணி நேரம் இருக்கும் போது அவ்விருவரையும் கைது செய்தனர்.

கைது செய்து விசாரித்த போது அனைத்து தகவல்களும் வெளிப்பட்டன.

ஆம் இது ஒரு ஒப்பந்த கொலை தான். கொலையை செய்த அந்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் அவர்கள் தான். ஒப்பந்த பணம் 20 இலட்சம் ரூபா. எனினும் அதில் 15 ஆயிரம் ரூபாவை மட்டுமே ஒப்பந்தம் கொடுத்த பூரு மெண்டிஸின் மனைவியின் கள்ளக் காதலன் வழங்கியுள்ளான்.


சட்ட பூர்வமான மனைவியும் கள்ளக் காதலனும் இணைந்து இக்கொலைக்கான சதித்திட்டங்களை தீட்டி அதனை இவ்விரு இளைஞர்களிடம் கையளித்துள்ளனர்.

இவ்விரு இளைஞர்களையும் திருமண வீடொன்றில் வைத்து சந்தித்திருக்கின்றார் மனைவியின் கள்ளக் காதலன். அவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானதை சாதகமாக பயன்படுத்தியே அவர்களை பூரு மெண்டிஸின் கொலையை புரிய தூண்டி யுள்ளார்.


இதற்காக வேண்டி, இணையத்தில் அவர்களுக்கு துப்பாக்கி சுடும் இலக்கு குறிபார்த்தல் தொடர்பிலான பயிற்சி முறைகளை வைத்து இரு இளைஞர்களையும் பயிற்றுவித்தே இக்கொலைக்கு அனுப்பி வைத்துள்ளான் .

என அனைத்து விடயங்களும் தெரியவரவே பொலிஸார் பூருமெண் டிஸின் சட்டபூர்வ மனைவியையும் அவளது கள்ளக் காதலனையும் கைது செய்தனர்.


இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், சட்ட பூர்வமான மனைவிக்கு நீதிமன்றம் ஊடாக பூரு மெண்டி ஸிடம் இருந்து விவாகரத்து கிடைக்கப் பெற்றால், அதன் பின்னர் அவனது கோடிக் கணக்கான சொத்துக்கள் அவன் கள்ளக் காதலிக்கு சொந்தமாகிவிடும் என்பதால் அதற்கு முன்னர் அவன் இறந்தால் முழு சொத்தும் மனைவி என்ற ரீதியில் தனக்கு கிடைக்கும் என நினைத்து இக்கொலையினை திட்டமிட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

அத்துடன் முன்னர் நிலவிய பகை உணர்வுகளையும் இதற்கு சாதகமாக பயன் படுத்தியுள்ளனர்.

இந் நிலையில் இரு வாரங்களுக்குள் கொலை தொடர்பில் அனைத்து தகவல் களையும் வெளிப்படுத்திய பொலிஸார், சந்தேக நபர்களையும் கைது செய்துவிட்டனர்.

கள்ளக்காதல்,   கோடிக்கணக்கான  வட்டிப்பணம் இதெல்லாம் என்றும் ஆபத்தில் தான் முடியும்.
கோடீஸ்வர வர்த்தகர் அஜித் (பூரு மெண்டிஸ்) படுகொலை... சந்தேகநபர்கள் கைதுடன் வெளியானது திடுக்கிடும் க்ரைம் ஸ்டோரி. கோடீஸ்வர வர்த்தகர் அஜித் (பூரு மெண்டிஸ்) படுகொலை... சந்தேகநபர்கள் கைதுடன் வெளியானது திடுக்கிடும் க்ரைம் ஸ்டோரி. Reviewed by Madawala News on 1/13/2018 01:53:00 PM Rating: 5