Yahya

தேர்தல் அலுவலகத்தை மகிந்த ராஜபக்ஷ திறந்து வெளியேறியவுடன் ஒலிபெருக்கி சாதனங்களை கைப்பற்றி எடுத்துச் சென்ற போலீசார்.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நேற்று திறந்து வைக்கப்பட்ட பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல் நடவடிக்கை அலுவலகத்தில் இருந்து ஒலிபெருக்கி சாதனங்களை தங்காலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


முன்னாள் ஜனாதிபதி காரியாலயத்தை திறந்து வைத்துவிட்டு சென்ற சிறிது நேரத்தில் ஸ்தலம் வந்துள்ள தங்காலை பொலிஸ் நிலைய சிறப்புக் குழுவொன்று அங்கு இயங்கிக்கொண்டிருந்த ஒலிபெருக்கி கருவிகளை இவ்வாறு கைப்பற்றிச் சென்றுள்ளது.

ஒலிபெருக்கி சாதனங் களை பயன்படுத்த உரிய அனுமதிகளைப் பெறாமை காரணமாக இவ்வாறு அவற்றை கைப்பற்ற வேண்டி ஏற்பட்டதாக பொலி ஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் ஒலிபெருக்கி சாதனங் களை பயன்படுத்த அனுமதிப் பத்திரம் பெற்றிருந்ததாகவும், பொலிஸார் வரும் போது அந்த அனுமதிப் பத்திரம் கையில் இருக்காமையால் அவர்கள் இவ்வாறு அதனை கைப்பற்றிச் சென்றதாகவும் குறித்த காரியாலய திறப்பு விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


எனினும் தேர்தல் கூட்டம் ஒன்றினை நடத்த ஒலிபெருக்கி பாவனை அனுமதியை பொலிஸார் பெற்றிருந்த போதும், அலுவ லக திறப்பு விழாவுக்கு அவர்கள் அனுமதி பெறவில்லை எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பதிவு செய்யப்படாத தேர்தல் அலுவலகம் ஒன்றுக்கு ஒலிபெருக்கி அனுமதிப் பத்திரம் வழங்க முடியாது எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

எவ்வாறாயினும் இந்த ஒலிபெருக்கி சாதனத்தை அனுமதிப் பெறாமல் பயன்படுத்தியமை தொடர்பில் தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.எப். யூ. பெர்னாண் டோவின் மேற்பார்வையில் மாத்தறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. கே.ஜயலால் மற்றும் தங்காலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.ஜி.எல்.கீதால் ஆகியோரின் ஆலோசனைப்படி தங்காலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தேர்தல் அலுவலகத்தை மகிந்த ராஜபக்ஷ திறந்து வெளியேறியவுடன் ஒலிபெருக்கி சாதனங்களை கைப்பற்றி எடுத்துச் சென்ற போலீசார். தேர்தல் அலுவலகத்தை மகிந்த ராஜபக்ஷ திறந்து வெளியேறியவுடன் ஒலிபெருக்கி சாதனங்களை கைப்பற்றி எடுத்துச் சென்ற போலீசார். Reviewed by Madawala News on 1/02/2018 12:13:00 PM Rating: 5