Yahya

மடவளை FSC அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட ஒரு சூழல் ஆரோக்கிய செயல்பாடு.


கடந்த ஜனவரி 01ம் திகதி மடவளை FSC அமைப்பினால் "பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையை குறைப்போம்" எனும் தொனிப்பொருளின் கீழ், மீள்பயன்படுத்தக்கூடிய பைகள் அச்சிடப்பட்டு இலவசமாக பகிர்ந்தளிக்கப் பட்டன.

இப்பைகளானது, மடவளை கோன்கஹமுத்தெடுவ மற்றும் பங்களா கெதர பிரதேசவாசிகளினிடையே பகிர்ந்தளிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, கோன்கஹமுத்தெடுவ பகுதியை ஒட்டிய மீகம்மன, தெள்கஹகும்புரவை சேர்ந்த எமது சகோதர இன பெரும்பான்மை மக்களிலையேயும் பகிர்ந்தளிக்கப்பட்டன. இதில் FSC அமைப்பின் உப தலைவர் மற்றும் கண்டி மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு பொறுப்பான கல்விப்பணிப்பாளர் A.L.M. HIYAN அவர்கள் மற்றும் பாத்ததும்பறை பிரதேசத்திட்கு பொறுப்பான PHIஅதிகாரி, ASITHA KAPILANATH மற்றும் FSC அமைப்பின் தலைவர் உட்பட ஏனைய அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையின் பிரதிகூலங்கள் மற்றும் பொலித்தீன் பாவனையை குறைத்துக் கொள்வதட்கான அறிவுரைகள் என்பவற்றோடு சுகாதாரமான ஒரு சுற்று சூழலை கட்டியெழுப்புவதன் மூலம் ஆரோக்கியமான எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதன் அவசியம் பற்றியும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

FSC அமைப்பானது, மடவளை கோன்கஹமுத்தெடுவ மற்றும் பங்களா கெதர பிரதேசத்தின் நலன் கருதி உருவாக்கப்பட்டு கடந்த ஒரு வருட காலமாக இயங்கி வரும் இவ்வமைப்பானது, தனது சேவையை குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்பதுத்தாது, சகோதர இன மக்களையும் தமது திட்டங்களுக்குள் உள்வாங்கிக்கொண்டமை பற்றி தமது உரையின் போது பி அதிகாரி அசுத்த கபிலனைத் அவர்கள் பாராட்டி பேசியமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் தமது எதிர்கால செயற்ப்பாடுகளை இவ்வமைப்பானது மடவளை பிரதேசம் மட்டுமின்றி மென்மேலும் விஸ்தீகரிக்க நல்ல பல திட்டங்களையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

- Arshad Iqbal -

மடவளை FSC அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட ஒரு சூழல் ஆரோக்கிய செயல்பாடு. மடவளை FSC அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட ஒரு சூழல்  ஆரோக்கிய செயல்பாடு. Reviewed by Madawala News on 1/06/2018 03:03:00 PM Rating: 5