Yahya

சீன பிரஜையின் தங்க கடத்தல் முறியடிப்பு.



சட்­ட­வி­ரோ­த­மான முறையில் சுமார் 65 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான தங்க பிஸ்கட் ஒன்றை இலங்­கை­யி­லி­ருந்து கடத்திச் செல்ல முயற்­சித்த சீனப் பிரஜை ஒரு­வரை விமான நிலைய சுங்­கத்­தினர் கைது செய்­துள்­ளனர்.

இந்­நபர் நேற்று அதி­காலை தனது பய­ணப்­பையில் 1 கிலோ­கிராம் நிறை­யு­டைய குறித்த தங்க பிஸ்­கட்டை சூட்­சு­ம­மாக மறைத்து வைத்து அதனை ஹொங்­கொங்­கிற்கு கடத்திச் செல்­ல­முற்­பட்ட வேளையில் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வைத்து, விமான நிலைய சுங்­கத்­தினர் மேற்­கொண்ட சோத­னையில் சிக்­கி­யுள்ளார்.

சந்­தேக நபர் 30 வய­தான சீனப் பிரஜை என விமான நிலைய சுங்­கத்­தினர் தெரி­விக்­கின்­றனர். இதே­வேளை, சுமார் 21 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான ஒரு­தொகை வல்­லப்­பட்­டை­களை இலங்­கை­யி­லி­ருந்து கடத்திச் செல்ல முற்­பட்ட ஒரு­வ­ரையும் சுங்­கத்­தினர் கைது செய்­துள்­ளனர்.

மட்­டக்­கு­ளியைச் சேர்ந்த 38 வய­தான இந்­நபர் நேற்று அதி­காலை 6. 40 மணி­ய­ளவில் ஓமானின் மஸ்கட் விமான நிலை­யத்தை நோக்கி புறப்­ப­ட­வி­ருந்த விமா­னத்தில் இந்த வல்­லப்­பட்­டை­களை கடத்திச் செல்ல முற்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

இவற்றின் மொத்தப் பெறு­மதி 21 இலட்­சத்து 40 ஆயிரம் ரூபா என கணிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இச்­சம்­ப­வங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கத்தினர் ஆரம்பித்துள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

-மெட்ரோ-
சீன பிரஜையின் தங்க கடத்தல் முறியடிப்பு. சீன பிரஜையின் தங்க கடத்தல் முறியடிப்பு. Reviewed by Madawala News on 1/02/2018 03:03:00 PM Rating: 5