Yahya

(வீடியோ இணைப்பு) சவூதி , மக்காவில் இருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட தங்கம் சிக்கியது.


சவுதி அரேபியாவின் மக்காவில் இருந்து இலங்கைக்கு ஒருதொகை தங்கம் கடத்தி வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவர் நேற்று மாலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொண்டுவந்த பயணப் பொதியில் இருந்து 814.16 கிராம் நிறையுடைய தங்கம் இதன்போது கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி 4,472,380 ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தங்க வளையல்கள், மோதிரங்கள் மற்றும் பெண்டன்கள் உள்ளிட்ட தங்க ஆபரணங்கள் அவரிடமிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபருக்கு 100,000 ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் சிங்கள ஊடகத்தில் வெளியான வீடியோ.

(வீடியோ இணைப்பு) சவூதி , மக்காவில் இருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட தங்கம் சிக்கியது. (வீடியோ இணைப்பு) சவூதி , மக்காவில் இருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட தங்கம் சிக்கியது. Reviewed by Madawala News on 1/05/2018 11:53:00 AM Rating: 5