Yahya

பட்டமளிப்பு விழாவுக்கு இஸ்லாமிய ஆடை அனுமதி மறுக்கப்பட்ட மாணவியர்... ஹிதாயத் சத்தாரின் வேண்டுகோளில் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல மூலம் தீர்வு.


இலங்கை உயர் தொழிநுட்ப கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவுக்கு இஸ்லாமிய ஆடையுடன் செல்லஅனுமதி மறுக்கப்பட்ட மாணவிர் உயர் கல்வி அமைச்சர் லக்ஷமன் கிரியெல்லவின் தலையீட்டில் மண்டபத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை உயர் தொழிநுட்ப கல்வி நிறுவனத்தின் 14ஆவது பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற முஸ்லிம் மாணவியரின் நுழைவு மறுக்கப்பட்டபோது மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் உயர் கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்ததைத் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 இலங்கை உயர் தொழிநுட்ப கல்வி நிறுவனத்தின் 14ஆவது பட்டமளிப்பு விழா பல கட்டங்களாக நடந்து வரும் நிலையில் குறித்த தடை காரணமாக சில மாணவியர் திரும்பிச் சென்றுள்ளதுடன், மாணவியொருவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் கவனத்திற்கு கொண்டுவந்ததைத் தொடர்ந்தே உயர் கல்வி அமைச்சருக்கு விடயம் எத்திவைக்கப்பட்டுள்ளது.


ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தாரினூடாக உயர் கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதன் பிறகு இவ்வாறான சம்பவங்கள் நடைபெறக்கூடாதென மேற்படி நிறுவனத்தின் தலைமைக்கு அமைச்சர் லக்‌ஷ்மன் கிரிஎல்ல உத்தரவிட்டுள்ளார்.
--
Aadhil Ali Sabry
பட்டமளிப்பு விழாவுக்கு இஸ்லாமிய ஆடை அனுமதி மறுக்கப்பட்ட மாணவியர்... ஹிதாயத் சத்தாரின் வேண்டுகோளில் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல மூலம் தீர்வு. பட்டமளிப்பு விழாவுக்கு இஸ்லாமிய ஆடை அனுமதி மறுக்கப்பட்ட மாணவியர்... ஹிதாயத் சத்தாரின் வேண்டுகோளில் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல மூலம்  தீர்வு. Reviewed by Madawala News on 1/03/2018 01:23:00 PM Rating: 5