Yahya

பிறந்து ஒரே நாளேயான சிசு, பற்றைக் காட்டிலிருந்து உயிருடன் மீட்பு.


பிறந்து ஒரே நாளேயான சிசுவொன்று, உயிருடன் மீட்கப்பட்ட சம்பவமொன்று, குருவிட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குருவிட்ட, தெப்பனாவ பிரதேச வீடொன்றுக்கு அருகிலிருந்த பற்றைக் காட்டிலிருந்து அந்த சிசு, பிரதேசவாசிகளால், நேற்று (07) மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிசுவை மீட்ட, பிரதேசவாசிகள், அதனை, தெப்பனாவ கிராமிய வைத்தியசாலையில் ஒப்படைத்ததன் பின்னர், பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவத்தைக் கேள்வியுற்று விரைந்த பொலிஸார், குறித்த சிசுவை, இரத்தினபுரி வைத்தியசாலைக்கு, மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை, குருவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிறந்து ஒரே நாளேயான சிசு, பற்றைக் காட்டிலிருந்து உயிருடன் மீட்பு. பிறந்து ஒரே நாளேயான சிசு, பற்றைக் காட்டிலிருந்து உயிருடன் மீட்பு. Reviewed by Madawala News on 1/08/2018 09:44:00 AM Rating: 5