Yahya

ஊழலுக்கும், அதிகார துஸ்பிரயோகத்திற்கும் எதிராக போராடும் JVP மாகாண சபை உறுப்பினர் பொலிஸ் OIC ஐ அச்சுறுத்தி கைதா?


ஊழலுக்கும், அதிகார துஸ்பிரயோகத்திற்கும் எதிராக போராடும் மக்கள்  விடுதலை முன்னணியின் JVP மேல் மாகாண சபை உறுப்பினர் அசோக ரண்வல கைது செய்யப்பட்டுள்ளார்.

சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரியை அச்சுறுத்திய காரணத்திற்காக அவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

எவ்வாறாயினும் பிரதேசத்தில் உள்ள இளைஞர் ஒருவரின் பிரச்சினை சம்பந்தமாக பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தான் பொலிஸ் பொறுப்பதிகாரியினால் தாக்கப்பட்டதாக மேல் மாகாண சபை உறுப்பினர் அசோக ரண்வல கூறினார்.

தாக்குதலில் காயமடைந்துள்ள அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஊடகங்களிடம் பேசும் போது இதனைக் கூறினார்.
ஊழலுக்கும், அதிகார துஸ்பிரயோகத்திற்கும் எதிராக போராடும் JVP மாகாண சபை உறுப்பினர் பொலிஸ் OIC ஐ அச்சுறுத்தி கைதா? ஊழலுக்கும், அதிகார துஸ்பிரயோகத்திற்கும் எதிராக போராடும் JVP மாகாண சபை உறுப்பினர்  பொலிஸ் OIC ஐ அச்சுறுத்தி கைதா? Reviewed by Madawala News on 1/05/2018 11:38:00 AM Rating: 5