Yahya

நாட்டின் அதிகாரத்தை பெற்று மத்திய வங்கியை சூரையாடியவர்களுக்கு கிராமத்தின் அதிகாரத்தையும் கொடுத்தால் அவர்கள் கிராமிய வங்கிகளையும் சூரையாடுவார்கள் : அக்குரனையில் JVP உரை.



(மொஹொமட்  ஆஸிக்


நாட்டின்  அதிகாரத்தை பெற்று  மத்திய வங்கியை சூரையாடியவர்களுக்கு

 கிராமத்தின்  அதிகாரத்தையும் கொடுத்தால் அவர்கள் கிராமிய வங்கிகளையும் சூரையாடுவார்கள் என்று  மக்கள் விடுதலை முன்னனியின்  மத்திய குழு  உறுப்பினரும்  ஊழல் எதிர்ப்பு அமைப்பின் தலைவருமான வசந்த சமரசிங்க தெரிவித்தார்


அக்குறணை அரபா வரவேற்பு மண்டபத்தில் இன்று 10 ம் திகதி இரவு இடம் பெற்ற  மக்கள் விடுதலை முன்னனியின் தேல்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் பொது அவர் இதனை தெரிவித்தார்.


இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறும் கூறினார்.


2015 ம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ம் திகதி இந் நாட்டு மக்கள் அப்போது ஆட்சியில் இருந்த மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசை தோட்கடித்த்ற்கு  முக்கிய காரணம் அவ்வரசின் பாரிய ஊழல் மோசடிகளாகும்.  


அவர்களை  வீட்டுக்கு அனுப்பிய மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது  ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டணை  வழங்குவார்கள் என்பதாகும்


இருந்த போதும்   குற்றவாலிகள் தண்டிக்கப்படும் வரை  மக்கள் காத்திருக்கையில் சிரிகொத்தவில்  புதிய திட்டம் ஒன்று தீட்டப் பட்டுக்கொண்டிருந்தது


அது  மத்திய வங்கியை எவ்வாறு  சூரையாடுவது என்பதாகும்.


நாட்டின் அதிகாரத்தை பெற்று மத்திய வங்கியை சூரையாடியவர்களுக்கு  கிராமங்களின் அதிகாரத்தையும் கொடுத்தால்  கிராமிய வங்கிகளும் சமுர்த்தி வங்கிகளும் சூரையாடப்படும்  அபாயம் உள்ளது.  


உள்ளூராட்சி   மன்றங்கள்  இவர்களுக்கு  ஊழல்களுக்கான முன் பள்ளியாக திகழ்கிறது. இதில் தான் இவர்கள் ஊழல் மொசடிகளை கற்றுக் கொள்கின்றனர். அதன் பின் மாகாண சபைகளுக்குச் சென்று அங்கும் பாரிய அளவில் ஊழல் மோசடிகளில் ஈடு பட்டு பாரிய அளவில் பொதுச் சொத்தை சூரையாடுகிளன்றர்.



மூன்றுவேலை சாப்பிட்டு நிம்மதிகாய இருக்க வேண்டிய மக்கள்  இன்று மூன்று நாலைக்கு ஒருவேலை சாப்பிட்டுவிட்டு பட்டினி கிடக்கின்றனர்.   


சுதந்திரத்தைப்பெற்று 70 வருடங்கள் எம்மை ஆட்சிசெய்தவர்களுக்கு மக்களினி பட்டினியை  இல்லாலாக்க முடியவில்லை என்பது எவ்வளவு இழிவானசெயலாகும். உலகில் பல நாடுகள் பல விடயங்களில் சாதனை படைத்துள்ளன.


சோமாலியா நாடு கடற்கொலைக்கு பிரசித்திபெற்றுள்ளத்போன்று இலங்கை மத்திய மங்கிகொல்லையில் பிரசித்தி பெற்றுள்ளது என்றும் அவர் இங்கு தெரிவித்தார்.


அக்குறணை  பிரதெச சபைக்காக மக்கள் விடுதலை 

முன்னனியில் 

போட்டியிடும் வேட்ளர்களுக்க ஆதரவு வழங்குவதற்காக இக் கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது


இங்கு இன்னும் சிலரும் கருத்துதெரிவித்தனர்.


நாட்டின் அதிகாரத்தை பெற்று மத்திய வங்கியை சூரையாடியவர்களுக்கு கிராமத்தின் அதிகாரத்தையும் கொடுத்தால் அவர்கள் கிராமிய வங்கிகளையும் சூரையாடுவார்கள் : அக்குரனையில் JVP உரை. நாட்டின்  அதிகாரத்தை பெற்று  மத்திய வங்கியை சூரையாடியவர்களுக்கு  கிராமத்தின்  அதிகாரத்தையும் கொடுத்தால் அவர்கள் கிராமிய வங்கிகளையும் சூரையாடுவார்கள் : அக்குரனையில் JVP உரை. Reviewed by Euro Fashions on 1/11/2018 10:05:00 AM Rating: 5