Yahya

அதிபருக்காய் காத்துக் கிடக்கும் சாதனை பாடசாலை . தலைமைகளே.. இது உங்கள் பார்வைக்கு.


பொலன்னறுவை,தம்பாள அல் மதீனா கனிஷ்ட பாடசாலை கடந்தவருடம் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில்  மாகாண மட்டத்தில் முதலிடத்தை M R இப்லால் முஹிடீன் , A R மொஹமட் அத்னான் ஆகிய மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டு மாவட்டத்துக்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்ததை யாரும் மறுத்து விட முடியாது . இப்படியான சாதனைகளை படைத்த படைக்கவிருக்கின்ற சாதனை பாடசாலை இன்று அதிபர் இல்லாத துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது

முன்னாள் அதிபர் A.L.இப்றாலெப்பே அவர்களின் ஓய்வுக்கு பிறகு அந்த பாடசாலையில் அதிபர் நியமிக்கப்படாததால் ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து உள்ளனர் இதனால் இச் சாதனை பாடசாலையின் கல்வி நிலை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் .. அத்தோடு ஜனாதிபதியின் சொந்த மாவட்டமான பொலன்னறுவையில் இப்படியான கல்வி குறைபாடுகள் காணப்படுவது மக்களை மேலும் கவலையடைய வைத்துள்ளது

-பஸ்னி முஹம்மட்-
அதிபருக்காய் காத்துக் கிடக்கும் சாதனை பாடசாலை . தலைமைகளே.. இது உங்கள் பார்வைக்கு. அதிபருக்காய் காத்துக் கிடக்கும் சாதனை பாடசாலை . தலைமைகளே.. இது உங்கள் பார்வைக்கு. Reviewed by Madawala News on 1/05/2018 11:26:00 AM Rating: 5