Yahya

15 வயது காத­லியை கழுத்­த­றுத்து கொன்­று­விட்டு 20 வயது காதலன் தற்­கொலை செய்த சம்பவ விபரம்.




(எம்.எப்.எம்.பஸீர்)

பன்­னலை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ஜய­கம பகு­தியில் 15 வய­தான தனது காத­லியை கழுத்­த­றுத்து கொலை செய்த 20 வயது காதலன், அதே கத்­தியைப் பயன்­ப­டுத்தி தன்னைத் தானே குத்தி தற்­கொலை செய்­து­கொண்­டுள்ளார்.இச்­சம்­பவம் நேற்று  இடம்­பெற்­றுள்­ள­தாக பன்­னலை பொலிஸார் தெரி­வித்­தனர்.

ஜய­கம மடு­முன்னே கெதர பகு­தியைச் சேர்ந்த சிறுமி ஹரிச்­சந்ர வலி­சுந்­தர ஆரச்­சி­லாகே ருமே­ஷிகா சத்­து­ரங்­கியே கொலை செய்­யப்­பட்­டுள்­ள­துடன் , 20 வய­தான சிலாபம்- கந்­த­கு­ளிய பகு­தியைச் சேர்ந்த நிஷாந்த என்­ப­வரே கொலையைச் செய்த பின்னர் தற்­கொலை செய்­து­கொண்­டுள்ளார்.

11 ஆம் தரத்தில் கல்வி பயிலும் குறித்த சிறுமி நேற்று பாட­சாலை சென்று வீடு திரும்­பிய நிலையில், சிறு­மியின் வீட்­டுக்கு சென்­றுள்ள அவ­ளது காதலன், மறைத்து வைத்­தி­ருந்த கத்­தியால் குத்தி கொலை செய்­து­விட்டு தற்­கொலை செய்­து­கொண்­டுள்ளார்.

 கொலைக்­கான உட­னடி காரணம் நேற்று மாலை வரை­யி­லான விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­தி­ருக்­க­வில்லை. நீதிவான் நீதி­மன்ற விசா­ர­ணைகள் இடம்­பெற்ற நிலையில் சட­லங்கள் பிரேத பரி­சோ­த­னைக்­காக வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் செல்­லப்­பட்­டுள்­ளன.

சம்­பவம் தொடர்பில் குரு­ணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஏ.ஈ. மகேந்­ராவின் உத்­தர்­வுக்கு அமைய குளி­யா­பிட்டி சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் கபில கட்­டு­பிட்­டி­யவின் நேரடி கட்­டுப்­பாட்டில் குளி­யா­பிட்­டிய உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் நிமல் பண்­டா­ரவின் ஆலோசனைக்கு அமைய பன்னலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர். குமாரதாஸவின் கீழ் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

15 வயது காத­லியை கழுத்­த­றுத்து கொன்­று­விட்டு 20 வயது காதலன் தற்­கொலை செய்த சம்பவ விபரம். 15 வயது காத­லியை கழுத்­த­றுத்து கொன்­று­விட்டு 20 வயது காதலன் தற்­கொலை செய்த சம்பவ விபரம். Reviewed by Madawala News on 1/04/2018 01:19:00 PM Rating: 5