Yahya

மீராவேடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயலின் இடைக்காலத் தலைவராக அல்ஹாஜ். எச்.எம். பதுர்தீன் நியமனம்.


மீராவேடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயலின் இடைக்காலத் தலைவராக அல்ஹாஜ். எச்.எம். பதுர்தீன் நியமனம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பிரதேசத்தில் உள்ள மீராவோடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயலின் தலைவராக இருந்த ஜனாப். கே.பி.எஸ். ஹமீட் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சித் தேர்தலில் (2018) போட்டியிடுவதால் தேர்தல் முடிவுறும் வரையான காலப்பகுதிக்கான பள்ளிவாயலின் இடைக்காலத் தலைவராக அல்ஹாஜ். எச்.எம்.எம். பதுர்தீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மீரா ஜூம்ஆ பள்ளிவாயலின் தலைவர் ஜனாப். கே.பி.எஸ். ஹமீட் பள்ளிவாயல் பரிபாலன சபையினைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க, 03.01.2018ஆந் திகதி புதன்கிழமை இஷாத் தொழுகையின் பின்னர் பள்ளிவாயல் பரிபாலன சபையின் விஷேட நிருவாகச சபைக் கூட்டம் கூட்டப்பட்டு இவ்விடயம் கலந்தாலோசிக்கப்பட்டதுடன் பள்ளிவாயலின் தலைவர் பதவியிலிருந்து விடுமுறை பெறும் காலப்பகுதிக்கு ஊரின் நலன் கருதி தற்போது உப தலைவராக பதவி வகித்து வரும் அல்ஹாஜ். எச்.எம். பதுர்தீன் அவர்களை இடைக்காலத் தலைவராக நியமிப்பதென பரிபாலன சபையினால் ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் பின்னர் 04.01.2018ஆந் திகதி வியாழக்கிழமை இஷாத் தொழுகையின் பின்னர் தலைவர் கே.பி.எஸ். ஹமீட் தனது இடைக்கால பதவி விடுமுறை பற்றியும் 03.01.2018ஆந் திகதி நடைபெற்ற பள்ளிவாயல் பரிபாலன சபையின் விஷேட கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றியும் பொதுமக்களுக்கு உரையாற்றினார்.

கடந்த 13.08.2017ஆந் திகதி முஸ்லிம் சமைய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வக்பு சபையினது நேரடிக் கண்காணிப்பின் கீழ் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பின் மூலம் மீராவோடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயலுக்கான ஜனாப். கே.பி.எஸ். ஹமீட் (தலைவர்) தலைமையிலான பரிபாலன சபை நியமிக்கப்பட்டிருந்தது.

மீராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலை, செம்மண்ணோடை ஆகிய பிரதேசங்களின் (மஹல்லாக்கள்) பிரதான நிருவாக அலகாக  மீராவோடை ஜூம்ஆ பள்ளிவாயல் இயங்குகின்றமை  குறிப்பிடத்தக்கது.

மீரா ஜூம்ஆ பள்ளிவாயல்
மீராவோடை
மீராவேடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயலின் இடைக்காலத் தலைவராக அல்ஹாஜ். எச்.எம். பதுர்தீன் நியமனம். மீராவேடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயலின் இடைக்காலத் தலைவராக அல்ஹாஜ். எச்.எம். பதுர்தீன் நியமனம். Reviewed by Madawala News on 1/05/2018 11:20:00 AM Rating: 5