Yahya

(வீடியோ) “கவ்த ஹொரா கவ்த ஹொரா “ பாராளுமன்ற விசேட கூட்டத்தொடரில் கூச்சல் குழப்பம்! கைகலப்பில் காவிந்த MP காயம்!


மத்திய வங்கி பிணை முறிவு மோசடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று உரையாற்றும்போது பாராளுமன்றத்தில் கூட்டு எதிர்க்கட்சிகள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டடனர்.

இதனால் பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 சபையில் மயக்கமடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற அம்பியுலன்ஸ் வண்டியில் ஏற்றப்பட்டு இவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை நடுவே வந்து, எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால், சபையில் குழப்பமான நிலை தோன்றியதுடன் , சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
(வீடியோ) “கவ்த ஹொரா கவ்த ஹொரா “ பாராளுமன்ற விசேட கூட்டத்தொடரில் கூச்சல் குழப்பம்! கைகலப்பில் காவிந்த MP காயம்! (வீடியோ) “கவ்த ஹொரா கவ்த ஹொரா “ பாராளுமன்ற விசேட கூட்டத்தொடரில் கூச்சல் குழப்பம்! கைகலப்பில் காவிந்த MP காயம்! Reviewed by Madawala News on 1/10/2018 12:37:00 PM Rating: 5